'அந்த ஒரு வாரத்துல உங்களை மயக்கி சொத்தை அனுபவிக்க நான் என்னத்தை செஞ்சேன்? அப்படியென்ன தப்பான நடத்தைய என்கிட்ட கண்டீங்க?'
இருவருக்கும் பிணக்கு ஏற்பட்ட நாளிலிருந்து ஹிக்மாவின் மனதில் எழுந்த கேள்வியிது. ஆனால் இன்றுவரை தெளிவான பதில் ரய்யானிடமிருந்து வந்ததேயில்லை.
மறக்க முடியாவிடினும் அந்த கசப்பான நிகழ்வுகளை இனிமேல் நினைப்பதோ பேசுவதோ கூடாது என்ற முடிவோடுதான் வாழ்வை புதிதாக தொடங்கினாள். எனவே இருவரும் சேர்ந்தபிறகு அதை மறுபடியும் கிளறக்கூடது என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஆனால் இன்றைய சூல்நிலை அவளை கேட்க வைத்துவிட்டது. கேட்டுவிட்டு பதிலுக்காக ஹிக்மா ரய்யானை ஏறிட்டாள்.
"நீங்க எந்த தவறுமே செய்யல ஹிக்மா. நான்தான் எல்லாம் செஞ்சேன். எதையுமே முழுசா தெரிஞ்சிக்காம உங்கள பிழையா நினைச்சிட்டன். நான் சொல்லப்போறது உங்களுக்கு அதிர்ச்சி தரலாம்.."
ஹிக்மாவுக்கு இன்னமும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
பேஸ்புக்கில் ஷிரீனின் போஸ்ட்டை பார்த்துவிட்டு அவள்மீது உண்டான வெறுப்போடு ரய்யான் அறையினுள் நுழைய முற்பட்டபோது போனில் ஹிக்மா விளையாட்டாக தோழியுடன் பேசியவைகளை கேட்க நேர்ந்ததில் அவனது வெறுப்பும், கோபமும் மொத்தமாய் ஹிக்மா மீது திரும்பியது. அதுவே சண்டையாகவும் வெடித்தது. ஹிக்மா ஆயிஷாவுடன் நெருங்கிப் பழகியதையும், சிரித்து பேசியதையும் கூட ரய்யானை சந்தேகக் கண்கொண்டு பார்க்க வைத்தது.
நடந்ததை கூறி முடித்துவிட்டு அவள் முகத்தை பார்க்க முடியாமல் தன் செயலை எண்ணி வெட்கித் தலைகுனிந்தான்.
நம்ப முடியாமல் பேச்சற்று அமர்ந்திருந்தாள் ஹிக்மா.
'அந்த அற்ப விஷியம்தானா தன் வாழ்வில் ஏற்பட்ட அத்தனை பெரிய அனர்த்தத்திற்கு மூல காரணம்? ஏன் இப்படி பேசினனு அப்பவே அதட்டி கேட்டிருந்தாக்கூட சொல்லியிருப்பேனே நாங்க பேசினது அஞ்சு சதத்திற்கு பெறுமதியில்லாத வெட்டிப்பேச்சுனு. அதைப்போய் திட்டம், நாடகம், நடிப்புனு ஒவ்வொரு முறையும் எத்தனை குத்தல் பேச்சுக்கள்'
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...