அருணும் மகதியும் ஆதிரவுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். ஆதியும் அந்த அறையில்தான் ஒரு மூலையில் இவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே ஆந்திராவிற்கு ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தான். ஆனால் ஆதிரா என்னதான் அருணிடமும் மகதியிடமும் வாய் பேசினாலும் அவள் பார்வையும் கருத்தும் ஆதியிடமே பதிந்திருந்தது. அப்பொழுது ஆதிராவின் முகம் ஏதோ சரியில்லாதது போலவே மகதிக்குத் தோன்றியது. உடல் சோர்வு என எண்ணிய மகதி அதற்கு மேல் அவளிடம் அதைப் பற்றி கேட்கவில்லை. பேசிக்கொண்டே இருக்கையில் திடீரென ஆதிராவின் உடல் தூக்கி தூக்கி போட ஆரம்பித்துவிட்டது.
பதறிய அருணும் மகதியும் என்ன செய்வது என புரியாமல் "ஆதிரா… ஆதிரா…" என அலறத் தொடங்கினர். உடனே அருகில் வந்த ஆதி ஆதிராவை இழுத்து அழுந்த அவன் வயிற்றின் மீது சாய்த்துக் கொண்டு, அருணிடம் போய் மருத்துவரை அழைத்து வருமாறு கூறினான். அவன் குரலில் இருந்த தீவிரமும், வேகமும் அருணிற்கு எதையோ புரிய வைக்க அவசர அவசரமாக மருத்துவரை தேடி விரைந்தான்.
பயந்துபோன மகதியைப் பார்த்த ஆதி தன் பதற்றத்தை இப்பொழுது வெளிக்காட்டினால் அவள் மேலும் பயப்படுவாள் என உணர்ந்து மகதியிடம் " மகி மா கொஞ்சம் வெளிய இரு. அவளுக்கு ஒன்றும் இல்லை. நான் அவளுடன் இருக்கிறேன்ல அவளுக்கு எதையும் ஆக நான் விடமாட்டேன். என்னை நம்பு போடா… வெளியில் இரு" என்றான்.
மகதியும் ஆதி கூறியதுபோல அவ்வரையே விட்டு வெளியே செல்லும் நேரத்தில் அருண் மருத்துவருடன் அவ்வறைக்குள் விரைந்தான்.
அறைக்குள் சென்ற மருத்துவர் ஆதியையும் அருணையும் வெளியே இருக்குமாறு கூறிவிட்டு ஆதிராவுக்கு சிகிச்சை செய்ய தொடங்கினார். ஒரு அரை மணி நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் கோபமாய் அனைவரையும் பார்த்து
" உங்களுக்கு நான் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன் அவளிடம் அவளை பாதிக்கக்கூடிய எந்த விஷயத்தையும் பேசக்கூடாது, செய்யக்கூடாது என்று. அவளே ஏற்கனவே பலவீனமாக இருக்கிறாள், அவள் மனது இப்பொழுது நிம்மதியாக இருக்க வேண்டும். அவள் எதையாவது போட்டு குழப்பிக் கொண்டே இருந்தாள் என்றால் அவள் உடல் இன்னும் மோசமாகத்தான் போகும். அவள் தூங்குவதற்கான மருந்தை நான் செலுத்துகிறேன் அவள் நன்றாக தூங்கட்டும். நான் சொல்லுவதை சொல்லி விட்டேன் இனி உங்கள் இஷ்டம். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்னொருமுறை அவளுக்கு இந்த மாதிரி வந்தால் பிறகு ரொம்பவும் கஷ்டமாக போய்விடும். அப்புறம் எங்களை சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை. நான் சொல்வது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நம்புகிறேன்" என கூறிவிட்டு வேகமாக அவ்விடத்தை விட்டு அகன்றார்.
YOU ARE READING
என் ஊமைக்காதல் உண்மை ஆகுமா [முடிவுற்றது]
Romanceகாதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை ஆகுமா