-41-

812 41 1
                                    

நான்கு நாட்களின் பின் ரய்யான் ஹிக்மாவிடம்

"நாசிரோட வைப்பும் புள்ளயும் வீட்ட வந்துட்டாங்களாம். நாம நாளைக்கு போய் பார்த்திட்டு வருவமா?"

போட்டோவில் பார்க்கையிலே அந்த மிருதுவான ரோசாப்பூ தேகத்தை கைகளில் ஏந்திட மனது ஏங்கியது. அவன் கேட்கும்போது துளியும் மறுக்கும் எண்ணமே எழவில்லை அவளுக்கு.

கேட்டதுமே உடன்வர அவள் ஒப்புதல் தந்ததில் ரய்யானுக்கும் பேரானந்தம்.

மறுநாள் அஸ்ர் தொழுகைக்கு முன்பே ரய்யான் வீட்டில் இருந்தான். ஹிக்மா பாடாசாலை முடிந்து வீடு திரும்ப இரண்டரை மணியாகும். தொழுதுவிட்டு புறப்பட்டால் சரியாகவிருக்கும் என்பது ரய்யானின் திட்டம்.

ஹிக்மா பாடசாலை விட்டுவந்ததும் அஸருக்கு பாங்கு சொல்லும் வரை தூங்குவாள். மாணவர்களோடு மாரடித்துக் களைத்துப்போய் வருபவளுக்கு தினமும் அந்த குட்டித்தூக்கம் அவசியம் தேவைப்பட்டது.

வீட்டிலுள்ளோருக்கும் அது தெரியும் என்பதால் யாரும் அவளுடைய அந்த நேரத்தில் தொந்தரவு செய்வது கிடையாது.

தினமும் இரவிலே வீட்டுக்கு வரும் ரய்யான் அதுபற்றி அறிந்திருக்கவில்லை.

அஸர் பாங்கிற்கு பத்து நிமிடங்களே இருந்தன. ஹிக்மாவிடம் தொழுததுமே தயாராக சொல்லிவிடனும் என்று வந்தவன் அங்கே கைகால்களை நீட்டி படுத்திருந்த ஹிக்மாவை கண்டதும் திகைத்துப் போனான்.

'ஐயையோ! இன்னைக்கு போகணும்னு சொன்னதை மறந்துட்டாளா? இப்படி தூங்குறாளே.ஆனால் நாசிர்ட வர்றதா சொல்லிட்டனே. என்ன செய்யிறது?!' தனக்குள் பேசிக்கொண்டே அவளைப் பார்த்து நின்றிருந்தான்.

'சரி ஒருமுறை பேசிப் பார்க்கலாம்'

"ஹிக்மா.."

பதிலுமில்லை. அசைவும் இல்லை.

திரும்பவும் அழைத்தான்.

"ஹிக்மா.."

முன்பு போலவே அவளிடம் ஒரு எதிர்வினையும் இல்லை.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now