இப்போதெல்லாம் ரீஹா குட்டி ரய்யானைக் கண்டவுடன் பயந்து அழுவதில்லை. ரய்யான் விட்டுச் சென்றால்தான் ஒப்பாரி வைப்பாள்.
வந்து இருவாரத்தில் அழாமல் ரய்யானை எதிர்கொள்ள பழகிவிட்டாள்.
ரய்யானும் அவளிடம் நெருங்குவதற்காகவே தினமும் ஏதாவது வாங்கி வந்து கொடுப்பான். ஆரம்பித்தில் அதை வாங்குவதற்கு அவனருகில் சென்றாலும் முகத்தை பார்க்காமலே வாங்கிக்கொண்டு திரும்பி விடுவாள். அவள் விளையாட்டுப் பொருட்கள் சிறதவிடும்போது அதை எடுத்துக் கொடுப்பான். கிட்டப்போய் வாங்குவாள்.
இப்படி ஓரளவு பழக்கமானாலும் பின் பைக்கில் தினமும் ஒரு சுற்று ஏற்றிக்கொண்டு போய்வர நன்றாகவே அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
எப்படி 'ச்சி.. ச்சி..' என்று ஹிக்மாவை சுற்றுவாளோ அதேபோல ரய்யான் வீட்டுக்குள் வந்தாலே 'ச்சா.. ச்சா..' என்று அவனையும் விடுவதில்லை.
***
வழமைக்கும் இரவில் பத்துமணிக்கு முன்பே ஹிக்மா உறங்கிவிடுவாள். ரய்யானுக்கோ மணி பன்னிரண்டு தாண்டித்தான் கொஞ்சமேனும் தூக்கம் கண்ணில் எட்டிப்பார்க்கும்.
அதுவரை அவள் தூங்குவதை பார்த்துக்கொண்டும் தூங்கபவளிடம் மனதில் உள்ளதை புலம்பிக் கொண்டும் இருப்பான். சிலவேளை சமூக வலைதங்களில் நோட்டம் விடுவான். ஆனால் அதிலும் ஏதாவது ஒன்று மறுபடியும் ஹிக்மாவிடமே அவனை கொண்டுவந்து சேர்த்திடும்.
அப்படி அவன் பேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருக்கையில் அவனது நண்பன் ஒருவனின் போஸ்ட்டுக்கு ஷிரீனும் லைக் செய்திருந்தாள்.
முன்பெல்லாம் அவள் செய்ததை நினைத்தால்தான் வெறுப்பாக இருக்கும். இப்போது அவள் பெயரை நினைக்கவே வெறுப்பாயிருந்தது.
அந்த ராட்சசியால்தானே இந்த தேவதையை காயப்படுத்த நேர்ந்தது.
உறங்கிக் கொண்டிருப்பவளிடம் திரும்பினான். சற்று நெருங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். மனமோ ஹிக்மாவை அவளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது.
YOU ARE READING
நேற்று இல்லாத மாற்றம் |Completed|
General Fiction"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும்...