-38-

831 38 1
                                    

அழைப்பை துண்டித்து வேகமாக ஏதோ டைப் செய்தாள் ஹிக்மா.

"யாரு போன்ல?"

"ருஷ்தா"

"ஏன் பாதிலயே கட் பண்ணிட்டீங்க? பாவம்தானே"

"அவளுக்கு எல்லாமே ஜோக்தான். என்ன பேசுறன்னு விளப்பமேயில்ல. எரும.. எரும.."

"அப்ப ருஷ்தான்னு சொல்றது கேர்ள் இல்லையா. பரவாயில்ல எருமைக்கும் அழகாத்தான் பேர் வெச்சிருக்காங்க"

கை டைப்படிக்க ரய்யான் கேட்பதற்கு ஒப்புக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தவள் அவன் கடைசியாக சொன்னதில் சிரித்து விட்டாள்.

"இப்ப நீங்க சொன்னது மட்டும் அவளுக்கு தெரியனும் அவ்வளவுதான்"

"ஐயோ தப்பித்தவறியும் சொல்லிறாதிங்க"

"இவ்வளவு பயமா? நான் சும்மா விளையாட்டுக்குத் தான் சொன்னன். உண்மையிலே அவள் நல்லகுணம். ஹெல்ப்பிங் மைன்டட். என்னோட நல்ல க்லோஸ். ஆனால் அந்த எரும என்னோட மெஹெந்திக்கு வரலை. அது மட்டும்தான் எனக்கு கோவம்"

அவன் எதுவும் கேட்காமலே தோழியைப் பற்றி அவள் சொல்லிக்கொண்டு போக அவனும் குறுக்கிடாம புன்னையோடு கேட்டுக் கொண்டிருந்தான்.

'மெஹெந்திக்கு வராமல் சொந்தக்கார கலியாணத்திற்குப் போய்விட்டு போன்ல மன்னிப்பு கேட்டு சாதிச்சிட்டாள். பேசாவே கூடாதுன்னுதான் இருந்தன். எப்படியோ என்னை பேசவச்சிட்டாள்'

என்று ஹிக்மா சொல்லும்போது அவன் மனம் துணுக்குற்றது.

'அன்று இந்த ருஷ்தாவிடம் தான் போனில் கதைத்திருப்பாளோ. இருவரும் விளையாட்டாக பேசிக் கொண்டிருந்ததைத் தான் நான் ஷிரீன் மீதிருந்த கோபத்தில் தவறாகப் புரிந்து விட்டேனோ. யா அள்ளாஹ்! அப்படியே நடந்திருக்க வேண்டும்'

"எவ்வளவு நாள் பேசாம கோவமா இருந்தீங்க?"

அவனை ஒருபார்வை பார்த்து விட்டு "அஞ்சாறு நாள்தான் பேசாம இருந்தன். ஏன் கேக்குறிங்க?"

"இல்ல.. சண்டை பிடிச்சு மூனு நாளைக்கு மேல பேசாமயிருந்தா காபிர். தெரியுமில்ல? அதான் கேட்டேன்" சமாளித்து வைத்தான்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now