அத்தியாயம் 14

1.3K 31 1
                                    

 பயணத்தின் நடுவே பெரும் அமைதி நிலவ ஆதியும் அருணும் கோயம்பத்தூர் சிட்டியில் இருந்து 11 கிலோமீட்டர் தள்ளி இருக்கின்ற விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். அருணுக்கும் நடந்த நிகழ்வை தற்பொழுது கேட்டு அறிந்து கொள்வதை விட முக்கியமான விஷயம் ஆதிராவை பத்திரமாக இங்கு வந்து கூட்டி செல்வது என்பதனாலும், ஆதியின் மனநிலையை ஓரளவுக்கு யூகித்ததாலும், மேலும் ஆதிக்கும் ஆதிராவிற்கும் இடையிலான சம்பந்தத்தை பற்றி ஆதியிடம் கேட்கவில்லை. அது ஒருவகையில் ஆதிக்கு நிம்மதியை அளித்தது.

 ஆதியும் அருணும் கோயம்புத்தூருக்கு வருவதற்கு இரவு நேரமாகிவிட்டதால் அவர்கள் அருகில் உள்ள ஓட்டலில் ஒரு ரூம் எடுத்து தங்கினர். காலையில் ஊட்டிக்கு சென்று ஆதிரா தங்கியிருந்த இல்லத்தில் விசாரிக்கலாம் என்று எண்ணினர். அருண் அதிகம் ஆதி இடம் பேச்சு கொடுக்காமல் இருப்பது ஆதிக்கு மன வருத்தத்தை அளித்தாலும் ஒரு குற்ற உணர்வு ஆதியும் அவனிடம் மேலும் பேச தயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு இருந்தது.

 ரூமிற்கு சென்று ப்ரெஷ்ஷாகிவிட்டு வந்தவர்கள் கட்டிலில் படுத்தனர். அருண் மனதில் ஒரு எண்ணம் இருந்தது அவள் எப்படியும் ஹோமில் தான் இருப்பாள் என்று, மேலும் அவளுக்கு வரவிருக்கும் ஆபத்தை தெரியாததால் அவன் அதிகம் பயப்படாமல் பயண களைப்பில் படுத்த உடன் உறங்கிவிட்டான்.

 ஆனால் ஆதியின் மனது ஆதிராவை சுற்றி சுற்றி வந்தது. அப்பொழுதுதான் நினைவு வந்தவனாய் ஆதிராவின் போனை எடுத்தான் ஆதி. 

 ஆதிரா தன் போனை லாக் செய்யாமல் வைத்து இருந்தாள் அவள் வீடியோ வரும்பொழுது அதை மற்றவர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று. அதனால் ஆதி போனை அன்லாக் செய்யும்பொழுது வால் பேப்பரில் தானும் அருணும் இணைந்து உள்ள போட்டோ தென்பட்டது. அந்த போட்டோ நான்கு ஐந்து வருடத்திற்கு முன்பு எடுத்தது. அதாவது ஆதிரா கல்லூரி முதலாம் ஆண்டு படித்து இருக்க வேண்டும் அப்போது தாங்கள் எடுத்தது. இந்த படத்தை அவள் அருணிடம் இருந்து தான் எடுத்திருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டான். இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பார்த்த ஆதியின் இதழ்கள் மெல்ல விரிந்தது.

  என் ஊமைக்காதல் உண்மை ஆகுமா [முடிவுற்றது] Where stories live. Discover now