கதிரின் பிடியில் இருந்த ஆதி அவனிடமிருந்து விடுபட்டு
"போயும் போயும் எவளோ ஒருத்திக்காக என் சட்டையை பிடிக்கிறே…" என்றான் கோவத்தில்.
அருண் : "வார்த்தைய அளந்து பேசு ஆதி"
ஆதி : "இன்னும் என்னைய எப்படி டா பேச சொல்லி சொல்ற, அதான் ரெண்டு பேரும் சேர்ந்து என் கம்பெனியை இழுத்து மூடிடீங்க, பத்தாததுக்கு என் தங்கச்சியையும் இந்த நிலைமைக்கு கொண்டுவந்து ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சுட்டீங்க. இன்னும் என்னல்லாம் பண்றதுக்கு பிளான் பண்ணி இருக்கீங்க ரெண்டு பேரும்" என தன் இஷ்டத்திற்கு தான் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் கோபத்தில் வார்த்தையைக் கொட்டினான்.
அருண் : "ஆதி என்னடா இது, இப்படி எல்லாம் பேசுறே. நாங்க அப்படி என்னடா பண்ணினோம் உனக்கு. நான் உனக்கு பிரண்டுடா. நான் எப்படி உனக்கு துரோகம் பண்ணுவேன். அவ உனக்காக என்னென்ன செஞ்சிருக்கா தெரியுமா?"
ஆதி : "சும்மா தேவை இல்லாம எவளோ ஊரு பேர் தெரியாத ரோட்டில் போறவளுக்காக வக்காலத்து வாங்குறியா டா"
அருண் : "யாருடா ரோட்ல போறவள் அவ என் தங்கச்சி டா எங்க வீட்டு தேவதை"
இதற்கு இடையில் கதிர் 'என்னடா நடக்குது இங்க இவர் என்னமோ கம்பெனியே கவுந்துட்ட மாதிரி பேசுறாரு. அவரு என்னன்னா திடீர்னு ஆதிரா தன்னுடைய தங்கச்சின்னு சொல்றாரு ஒண்ணுமே புரியலையே' என குழம்பிப் போய் என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தான்.
ஆதி : "என்னடா உங்களைப் பற்றிய எல்லா உண்மையும் எனக்குத் தெரிந்துவிட்டது என்றவுடன் இவ உன் தங்கச்சி என்று சொல்லி நாடகமாடறியா"
அருண் : "வேண்டாம் ஆதி ரொம்ப வார்த்தையை விடாத அப்புறம் அதை அள்ள முடியாது. இது மட்டுமில்லை எங்களை பத்தின எல்லா விஷயமும் உன் தங்கச்சி மகதிக்கும் தெரியும் வேணா நீ அவகிட்ட போய் கேட்டுப் பாரு"
ஆதி : "அவளை என்னடா கேட்கிறது அவளைத்தான் இந்த நிலைமை கொண்டு வந்து படுக்க வச்சிட்டீங்களே.. உண்மைய சொல்லு என் தங்கச்சிக்கு என்ன ஆச்சு" என அவன் சட்டையை பிடித்தான்.
YOU ARE READING
என் ஊமைக்காதல் உண்மை ஆகுமா [முடிவுற்றது]
Romanceகாதல் கொண்ட இரு மனங்கள் பிறர் அறியா தன் மனதில் வளர்க்கும் காதல், ஊமையாய் அழுகும் ஒரு உள்ளம் உண்மையாக்க போராடும் ஒரு உள்ளம். இவர்களது ஊமை காதல் உண்மை ஆகுமா