-25-

810 39 3
                                    

சுலைஹா இரவு உணவுக்கு ஹிக்மாவுக்கு பிடித்த ரொட்டியும், கோழிக்கறியும், சம்பலும் செய்திருந்தார்.

ஆனால் ஒருகவள உணவுகூட ஹிக்மாவின் தொண்டைக்குள் நிம்மதியாக இறங்கவில்லை. காரணம் ஹிஜாஸின் பார்வை அடிக்கடி அவள்மீது படிந்து மீண்டுகொண்டிருந்தது.

சிரமப்பட்டு பாதிரொட்டியை உள்ளே தள்ளிவிட்டு மெதுவாக எழுந்துகொள்ள சுலைஹாவோ

"என்ன ஒரு ரொட்டியைக்கூட முழுசா சாப்பிட்டு முடிக்கல. அதுக்குள்ள எழுந்திட்ட?"

"உம்மா கொஞ்சம் டயர்டா இருக்கு தூ--" ஹிக்மா முடிப்பதற்குள் ஹிஜாஸ்

"தூங்க முன்னுக்கு மச்சானோட போன் வேற பேசனும். விடுங்கம்மா போகட்டும்" என்றிட ஹிக்மா திகைத்துப்போய் தம்பியை நோக்க

"என்ன datha! அப்படி பார்க்குற? அப்படித்தானே நீ எங்ககிட்ட சொல்லி வச்சிருக்க. ஐ மீன் டெய்லி தூங்க முன்னாடிதானே மச்சானோட போன் பேசுவ.." ஹிஜாஸின் வினோதமான பார்வையும், பேச்சும் அவளை குழப்பத்தில் ஆழ்த்தின.

"ஆஹ்" என்று மட்டும் சொல்லி அங்கிருந்து அறைக்கு விரைந்தாள்.

ஹிஜாஸுக்கு என்னவோ தெரிந்திக்கிறது. ஆனால் அவன் நேரடியாகவே கேட்டிருக்கலாம். இப்படி அனைவர் முன்னிலையிலும் குற்றவாளியை பார்ப்பதுபோல ஆராய்ச்சி பார்வையும், வினோதமான பேச்சும் அவள் மனதை காயப்படுத்தின.

'அவனுக்கு தெரிந்தது எதுவும் உம்மா வாப்பாவுக்கு தெரிந்துவிட்டால்?'

ஹிக்மா கலங்கிப் போயிருந்த வேளை கட்டிலில் கிடந்த அவளது கைப்பேசிக்கு அழைப்பு வருவதற்கு அடையாளமாக திரை ஒளிர்ந்தது.

அப்போதுதான் போனை சைலன்ட் மோடில் போட்டது நினைவுவர உடனே எடுத்தாள்.

திரையில் R என்றிருந்ததை கண்டதுமே அதிர்ச்சியில் கை போனை நழுவவிட்டது. நல்லவேளை கட்டிலில் விழுந்ததால் அது பிழைத்துக் கொண்டது.

ஏற்கப்படாததால் அழைப்பும் நின்று போனது.

இன்று நடப்பதை அவளால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஹிஜாஸின் நடவடிக்கை, ரய்யானின் அழைப்பு.. எதையும்.

நேற்று இல்லாத மாற்றம் |Completed|Where stories live. Discover now