"எங்கையில எதுக்கு கெடிகாரத்த வரைஞ்சிட்டு இருக்கடீ..... பதினொரு மணியாச்சு, இன்னும் பேசிக்கிட்டே இருக்கியேடா மொக்கைன்னு சொல்லாம சொல்லுதீகளாக்கும்?" என்று கேட்ட தன் கணவனிடம் மறுப்பாக தலையசைத்து,
"ஒம்பது மணியில இருந்து பேசிட்டு இருக்கோம். இன்னும் எனக்கு தூக்கம் வரலையேன்னு யோசிச்சுட்டு இருக்கேன். லட்டு கூட பேசிட்டு இருந்தா அப்படியே தூங்கிடுவேன்! இன்னிக்கு நம்மளோட போட்டோஸ் நிறைய பார்த்தோம்ல..... ஆனா 23 வயசுல என்னை நீங்க பர்ஸ்ட் டைம் பார்க்க வந்தப்ப எடுத்த உங்க போட்டோ மட்டும் மிஸ்ஸிங் அங்கிள்..... நீங்க அப்போ எப்படி இருந்தீங்க? எவ்வளவு யோசிச்சு பார்த்தாலும் என்னால ரிகலெக்ட் பண்ண முடியல!" என்று உதட்டை பிதுக்கியவளிடம் சிரிப்புடன்,
"என்ன இன்னும் கொஞ்சம் இளசா, இன்னும் கொஞ்சம் ரவுசு பண்ணிட்டு இருந்துருப்போமாட்டம் இருக்கு. இப்பமே நீ கெடாக்குட்டி மாதிரி தாமுல இருக்க..... பதினஞ்சு வயசுல நீயும்தேன் எப்படி இருந்துருப்ப? நானும் எம்புட்டு நேரம் யோசிச்சு பார்த்தாலும் ஆறு வருஷம் முன்னாடி உன்னைய பார்த்ததெல்லாம் எனக்கு நியாபகம் இல்ல. திருவிழாவுல பார்த்ததுதேன் மனசுல பச்சை குத்துனது மாதிரி பதிஞ்சு கிடக்கு, சின்னதா சிட்டுக்குருவி மாதிரி மண்டைய மண்டைய ஆட்டி ஒண் தோழி கூட ஏதோ பேசிகிட்டு இருந்த, மாமே அன்னிக்கு உன்னைய ரொம்ப நேரமா பார்த்து பார்த்து நமக்கு இப்படி ஒரு பொஞ்சாதி கெடைக்க போறான்னு நெனைச்சு சந்தோஷப் பட்டுட்டு கிடந்தேன் தெரியுமா.....? சரி அதெல்லாம் கிடக்கட்டும். எம்புட்டு நேரமா நானும் ஒரு கேள்விய கேட்டுட்டு பதில் வரும்னு ஓவாய பார்த்துகிட்டு உட்கார்ந்து கிடக்கேன்...... நீ சொகுசா என் நெஞ்சுல சாய்ஞ்சிகிட்டு உட்கார்ந்து இருக்க....... நான் ஒன்னைய தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்சத மன்னிச்சிட்டியா இல்லையா சொல்லு சிட்டுக்குருவி?" என்று கேள்வி கேட்டவாறு தன் மனைவியின் விரல்களை பிடித்து சொடுக்கிட்டு கொண்டு இருந்தான் இசக்கிராசு.
YOU ARE READING
கண்டேன் என் ஜீவாமிர்தம்✔
Romanceபூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயிடுச்சு. இந்த இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தத்துக்கு உங்களுக்கு சம்மதம் தானே மிஸ். கவிப்ரியா அர்ஜுன்?" என்...