பகுதி 47

7.6K 244 115
                                    

பகுதி 47

மும்பை

          மாலை அலுவலகம் முடிந்து வந்த கௌஷிக்  வானதியை  குல்லுமா  பேபிடால் என அழைத்துக்கொண்டே  வீட்டிற்குள்  வந்தான். கண்களோ  வானதியை  தேட அவனின் மனதோ அவளின் தாயை தேடியது.

          மாலை. சிற்றுண்டியை  தயார்  செய்ய மம்தாவிற்க்கு  சொல்லிக்கொண்டிருந்த பூஜா கௌஷிக்கின் குரலைக்கேட்டு சமையலறையிலிருந்து வெளிவந்தாள்.

          "தேவர்ஜி...குல்லு  எங்க ரூம்லதான் பசங்க கூட விளையாடிட்டு இருக்கா " என்றதும் " ஓகே  பாபி நான் போய் பார்த்துக்குறேன் எனக்கூறினான் . சட்டென்று  நினைவு வந்தவனாய் பாபி ... இன்னும்  வைஷூ  வரலையா?  எனக்  கேட்டான் .

             இல்லை  தேவர்ஜி ... எப்பவும்  நீங்கதானே கூட்டிட்டு வருவிங்க... எனக்கூறினாள் பூஜா.

              ஹ்ம்ம்.... ஆமா  பாபி...ஆனா... இன்னைக்கு ஒரு கிளையன்ட்  மீட்டிங்  இருக்குன்னு  ஒரு மணிநேரத்துக்கு  முன்னாடியே  கிளம்பிட்டளாம் . அவ ஆஃபீஸ்ல சொன்னாங்க என்றான் .

           அப்படியா... சரி சரி... நீங்க குல்லுகிட்ட போங்க  நான் உங்களுக்கும் பசங்களுக்கும் ஸ்நாக்ஸ் அன்ட் டீ  கொண்டு வரேன் என்றாள் பூஜா.

       பாபி ... இன்னொரு  விஷயம் கேக்கனும்....அம்மாகிட்ட ஏதாவது சேஞ்சஸ் தெரியுதா?  இல்ல இன்னும் அதே பிடிவாதத்துடன் தான் இருக்காங்களா?

இன்னைக்கு ஒன்னு நடந்துச்சி கௌஷிக். அதை வச்சி பாக்கும் போது அம்மா மனசு கொஞ்சம் அசஞ்சிடுச்சின்னு தோனுது... ஆனா இது பெரிய மலை  ... உன் குட்டி இளவரசியாலதான் இந்த மலைய கொஞ்சம் கொஞ்சமா சாய்க்க முடியும்ன்னு நினைக்கிறேன் கௌஷிக். என்றாள் பூஜா.

பூஜா கூறியதும் முகத்தில் புதுவித சந்தோஷம் பரவ பாபி இன்னைக்கு என்ன நடந்தது சொல்லுங்க..  என்றான் ஆர்வமாக

வானதி நடத்திய ஆர்பட்டத்தையும் அதற்கு மாதுரியின் ரியாக்ஷ்னையும் கூறிக்கொண்டிருந்தவள் ஆனா... கௌஷிக் குல்லு கேட்ட கேள்வியில அம்மா ஷாக் அடிச்சாப்போல ஆகிட்டாங்களாம்..  அப்பா சொன்னார் என்றாள் பூஜா

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now