பகுதி 32

6.9K 276 69
                                    

பகுதி 32

வைபவின் கைபிடித்து பார்க்கிங் ஏரியாவிற்கு வந்த நிக்கிலிடம் வைபவ் "மச்சி நீதான் கிளம்புறன்னா என்னையும் எதுக்கு கிளம்ப சொன்ன நான்தான் 2ஹவர்ஸ் பர்மிஷன் போட்டுருக்கேன்ல.... உன்னைதானே உன் மேனேஜர் அவசர வேலையா கூப்பிட்டார் என்னை ஏன்டா இழுத்துக்கிட்டு வந்த" என்றான்.

அவனை ஏற இறங்க ஒரு லுக் விட்ட நிகில் "பேசிட்டியா.... பேசி முடிச்சிட்டியா..... அங்க நடக்கறதுல்லாம் பார்த்தல்ல இது பெரிய சமாச்சாரம் போல இருக்கு. இது எப்படியும் பெரிய இஷ்யூவா ஆகிடுச்சி இதுல சம்மந்தபட்டுருக்கிறது பெரிய ஆள் போல இருக்கு "என்றான்.

"அதனால என்னடா அவன் எவ்வளவு பெரிய ஆளா வேனும்னா இருக்கட்டும். நமக்கும் அவங்களுக்கும் என்ன இருக்கு ஒரு மனிதாபிமான முறையிலதானே ஹெல்ப் பண்றோம்". வைபவ்

"மாப்ள..". என்ற பேச வந்தவனை 'நீ இவ்வளவு சுயநலமா இருப்பியா மச்சி" என்றான் வருத்தமாக.

"இல்லடா இது பயம் தான்டா நீரோடை போல தெளிவா போற உன் லைப்ல ஏதாவது ஆச்சுன்னா? அதுக்குதான்டா பயப்புடுறேன். இந்த அவசர உலகத்துல நாம நல்லதுக்குன்னே போனாலும் நமக்கு ஏதாவதுன்னா இந்த சமூகம் திரும்பி பார்க்காதுடா".

"ம்..... கரெக்ட் மச்சி... பட் எனக்கு ஏதாவதுன்னலும் இப்படித்தான் எங்க அம்மாவையும் விட்டுடுவியா" என்றான் உணர்ச்சி மாறாக் குரலில்.

வைபவ் கூறியதில் வெடுக்கென திரும்பியவன். அவனை பிடித்திருந்த கையை விட்டுவிட்டு பைக் கீயை எடுத்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்து கோபமாக கிளம்பியவனை" நிகில்... நிகில்" என்று அழைத்தும் திரும்பி பார்க்காமல் வேகமாக பறந்தான்.

தாடையை அழுந்த தேய்த்து 'ரொம்பதான்டா கோவம் வருது... அப்புறமா கவனிச்சிக்கிறேன் உன்னை' என்றவனது மனதில் நண்பனை நினைக்க சிறு புன்னகை பிறந்தது.

"சே !!!!! அந்த பொண்ணுக்கு ஏதோன்னு சொன்னாங்களே என்ற நினைவு வர மறுபடியும் மருத்துவமனைக்குள் சென்று வைஷாலியின் அறைக்கதவை திறந்தான். அங்கு கண்களில் நீருடன் ஆவேசமாகவும் ஆக்ரோஷமாகவும் பிதற்றியவள் அவளுக்கும் அவளின் தோழிக்கும் நடந்ததை கூறிக்கொண்டிருந்தாள் . கடைசியாக அவள் ஏன் என்னை காப்பத்தினிங்க என்று முகத்தை மூடி அழுதபோது ஏதோ ஒன்று அவன் நெஞ்சை பிழிந்தது. அவளின் கண்ணீர் அவன் மனதை உறுத்த அவளின் விழிகளில் வழிந்த நீரை காண பொறுக்காமல் கதவை திறந்து வெளியே வந்து இருந்தான் வைபவ்.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now