பகுதி 27

6.2K 177 36
                                    

27

"மச்சி இங்க வாடா"

"என்னடா "

"இந்த புதருகுள்ள பார்ரா எதோ தெரியுது வெயில்ல பளபளன்னு இருக்கு ...."

"டேய் எருமை ஏதோ தெரியுது பளபளன்னு இருக்கு பல்ல இளிக்குதுன்னு கமென்ட் கொடுத்துகிட்டு  இருக்க... அதை எடுக்க எவ்வளவு நேரப் ஆகப்போகுது எடுத்து பாருடா" என்றான் கடுப்பாக.

"மச்சி  இதுபோல சமயத்துல நாம டிடக்டிவ் போல செயல்படனும் டா எதையும் கூர்மையான கண்ணோடதான் பாக்கனும் மச்சி" என்று கூறியபடி அதை எடுக்க வண்டியின் உடைந்த சைட் மிரர் வந்தது. வைபவை பார்த்து அசட்டு சிரிப்புடன் கையில் கிடைத்ததை தூக்கி எரிந்து விட்டு வேறு இடத்தை நோக்கி நகர்ந்தான்.

வைபவின் ஷு காலில் ஏதோ தட்டுபட டிஸ்பிளே உடைந்த நிலையில் ஃபோனை கையில் எடுத்தான் வைபவ். "நிகில் ......இங்க வாடா இதை பாரேன்" என்று மொபைலை காண்பித்தான்.

"மச்சி இந்த போன் இவங்களோடதாதான் இருக்கும் இதை ஆன் பண்ணு ஆன் ஆகுதான்னு பாக்கலாம்" என்றான் நிகில் அதை பார்த்தபடி.

ஆன் செய்ய அது சார்ஜ் இல்லதலால் செயலற்று போயிருந்தது. "வேற ஏதாவது கிடைக்குதா பார்ரா" என்றான் வைபவ் .

உன்னிப்பாக தேடியபடி இருந்த நிகிலின் பார்வையில் மைல் கல்லின் பக்கத்தில் கருப்பு நிறத்தில் இருந்த பென் டிரைவ் கிடைக்க அதை வைபவிடம் நீட்டினான்.

"மாப்ள போதும் டா ரொம்ப லேட் ஆகிட்ட... உன் கூட வர எனக்கும் சாப்பிட எதுவும் கிடைக்காது... கிளம்புடா மத்ததாச்சி போலீஸ் தேடட்டும்". என்றவன் "உனக்கு எதுக்கு அந்த இன்ஸ் மேல சந்தேகம் வந்தது" என்றான்

"நான் உள்ள போனதுல இருந்து அந்த இன்ஸ்பெக்டர் முகமே சரியில்லை".

"ஏன் மாப்ள  ஒரு ஷேப் இல்லாம அவ்வளவு கொடுரமாவா இருந்துச்சு இன்ஸ் முகம்?. என்றான் நக்கலாக

"இனி காமெடி பண்றன்னு மொக்கை போட்ட நிகிலின் கழுத்தில் கைவைத்து மவனே நெருக்கிடுவேன்". என்றான் வைபவ்.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now