பகுதி 21

7.1K 207 28
                                    

Part 21

கையில் மணலை எடுத்து விளையாடியபடியே இருந்தாள் நீலா . ஒன்றன் பின்னால் ஒன்று துரத்தி பிடித்து விளையாடும் கடல் அலைகளை ரசித்தபடியே அமர்ந்திருந்தான் சிவா.

இதற்கு சற்று தூரம் தள்ளியபடி காயூவும் கிருஷூம் கடல்அலைகளில் காலை நனைத்தவாறு நின்றிருந்தனர். வம்படியாக அனைவரையும் கடற்கரைக்கு அழைத்து வந்திருந்தாள் நீலா. சிவாவை மட்டும் தனியே அழைத்தால் வருவானோ இல்லை தவிர்ப்பானோ என்று தவித்தவள் காயூவின் துணையுடன் அருணாச்சலத்தை நச்சரித்து கடற்கரை வந்திருந்தனர்.

பூஜாவிற்கு ஓய்வு தேவையாகப்பட்டதாலும் கரண் அவசர அழைப்பின் காரணமாக மும்பை செல்ல நேரிட்டதாலும் பூஜா வீட்டிலேயே இருந்தாள்.

"ம்க்கூம் என்று தொண்டையை சரி செய்தபடி " நீ ஏன் இங்க உட்கார்ந்து இருக்க பீச் வரனுமுன்னு அவ்வளவுஅடம் பிடிச்சிங்க இப்போ இங்க சும்மா இருக்க". என்றான் சிவா

அவன் கூறியதை செவி மடுத்து பக்கத்தில் அமர்ந்திருந்தவள் அதற்கு எந்த ரியாக்ஷ்னையும் வெளிபடுத்தாமல் மணலை பிடித்து விளையாட்டை தொடர்ந்தாள்.

"ஏய்.....உன்னைதான்.....கேக்குதா" என்று கத்தியவன் "உன்னை ஓட்டைவாய்னு நினைச்சேன் இப்போ உனக்கு காதூம் போச்சா பாவம் உன்னை கட்டிக்க போறவன்" என்று சிவா கிண்டலடிக்க.

அதில் கடுப்பானவள் "அதை பத்தி ஏன் கவலைபடுறிங்க? என்னை கட்டிக்கிறவன் என்னை கண்ணுக்குள்ள வெச்சு காப்பாத்துவான்" என்றாள் நீலா சற்று காட்டமாகவே.

"வர்ரவன் நல்லாவே காப்பாத்தட்டும் எனக்கு எதற்கு பொல்லாப்பு நீயாச்சு அவராச்சி ஆனா ஒன்னு நீ எடுக்கர லெக்ட்சர்ல சீக்கிரமே அவருக்கு காது செவிடாகறது கன்பாஃர்ம்" என்று நக்கலடித்து மறுபடியும் கடல் அலைகளை ரசித்து இருந்தான்.

கண்கள் மட்டும் தான் கடல் அலைகள் மேலேயே இருந்தது காதும் மனதும் அவள் அடுத்து பேசும் பேச்சை கேட்க ஆவலாக காத்திருந்தது.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now