பகுதி 5

9.7K 225 65
                                    

Part 5

அன்று

மாசற்ற மனத்துடனே
ஶ்ரீ ராமனைப் பாட
வாயுபுத்ரனே வணங்கினேன்
ஆற்றலும் ஞானமும் வரமும் தர
வந்தருள்வாய் ஶ்ரீஹனுமானே

என்று பூஜை  அறையில்  அனுமந்த சாலிசா பாடிக்கொண்டு கண்களை மூடி பூஜையில் ஈடுபடிருந்த  லலிதாவிற்கு மாடியிலிருந்து ஹைபிட்சில் ஒலித்த நாக்கு மூக்கா பாடல் காதை கிழித்தது.ஒரு நிமிடம் கண் திறந்து மாடியை நோக்கியவர் மறுபடியும் கண்களை மூடி அனுமனை மனதினில் நினைத்து பிரார்த்தித்தார்.

இந்தியாவின் மூன்றாவது முக்கிய பிரசித்திபெற்ற நகரமான பெங்களூரில்
எல்லா முக்கிய பெரும் பணக்காரர்களும் வசிக்கும்
பகுதியில் அமைந்த அந்த பங்களாவில் தான் இத்தனை ஆர்பாட்டமும் ,அட்டகாசமும் .

லலிதா அருணாச்சலம் தம்பதிகளின்  மூத்த மகன் சிவா, அடுத்தவள் வைஷ்ணவி, இளையவள் காயத்திரி .  இதில் மூத்தவன்  துடிப்பு மிக்கவன் இளம் கன்று பயமறியாது என்ற சொல்லிற்கேற்ப எதற்கும் அஞ்சாதவன். வைஷ்ணவி சென்னையில்  அண்ணா பல்கலை கழகத்தில் பொறியியல் மாணவி குடும்பத்தின் மீது அளவுகடந்த பாசம் வைத்தவள்.  தந்தையையும் அண்ணனையும் முன்னோடியாக கருதுபவள் எந்த இடத்திலும் தன்னுடைய சுயகவுரத்தை விட்டு தலைகுனிய கூடாது என்று தன்னம்பிக்கையும் , தைரியத்தையும் ,விடாமுயற்சியும் வளர்த்து கொண்டவள்.(நம்ம ஹீரோயின் நம்ம பில்டப் பண்ணலண்ணா எப்படி கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும் மன்னிச்சுடுங்க பிளிஸ்)இளையவள் படு சுட்டி ஆனால் தமக்கை இல்லாத நேரத்தில்  தமக்கையின் சொல்படி  அன்னைக்கு தொந்தரவு தராதவள்  பன்ணிரண்டாம் வகுப்பு மாணவி .(இப்போ அங்க என்ன? நடக்குதுனு பார்போம் வாங்க )

பூஜை அறையை விட்டு
வெளியே வந்தவர்   மேல் அறைக்கு காபியை கொண்டு சென்ற மல்லியை  நிறுத்தினார் லலிதா .
"மல்லி எங்கே போற" லலிதா அந்த குடும்பதின் தலைவி என்ற ஆளுமையின் கம்பீரத்துடன் வினவினார்".
"பாப்பாங்களுக்கு காபி எடுத்துட்டு போறம்மா". என்றாள் மல்லி பவ்வியமாக.
"உனக்கு எத்தனை முறை சொல்றது காலை 6 மணிக்கு எழுந்து வருகிறவர்களுக்கு தான் காபி கொடுக்க வேண்டும்முன்னு சொல்லி இருக்கேன் ".உன்னை  சொல்லி குத்தமில்ல எல்லாம் அவ பண்ற வேலை இன்னைக்கு அவங்களுக்கு காபி இல்லை நீ இத எடுத்துகிட்டு போ "என்றார் கோபமாக.

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now