Sudum Nilavu Sudatha Suriyan - 25

810 89 185
                                    

சுடும் நிலவு சுடாத சூரியன் – 25

காரில் மெளனமாக வந்த அகிலனை பார்த்து, "அகில், என்ன அப்செட்டாக இருக்கே?" என கேட்டான் மித்ரன்.

"ஈஸியா அந்த ஆள் கிட்டேயிருந்து விஷயத்தை வாங்கியிருக்கலாம். நீயும் அந்த ஃபாரஸ்ட் ஆபிஸரும், தேவையில்லாம ஒரு நாள் தள்ளி போட வைச்சிட்டிங்க" என அலுப்புடன் சொன்னான் அகிலன்.

"அவர் தான் நாளைக்கு வர்றேன் என்று சொன்னாரே? அப்பறம் என்ன?" என கேட்டான் மித்ரன்.

"நாளைக்கு அவர் வரலை என்றால் என்ன செய்யறது? நைட்டே போய் அவரோட ஆஸ்பத்திரியில் உடம்பு சரியில்லை என்று படுத்துக்கிட்டா என்ன செய்வே?" என் கோபமாக கேட்டான் அகிலன்.

"அவரை பார்த்தா அப்படி செய்ய கூடிய ஆள் மாதிரி தெரியலை" என அகிலனை சமாதானம் செய்ய முயன்றான் மித்ரன்.

"இவரும் சக்திவேலோட கூட்டாளியாக தான் இருப்பாரு" என கடுப்புடன் சொன்னான் அகிலன்.

"எனக்கு அப்படி தோணலை அகில், வைத்தியர் பார்க்க வயசானவராக இருக்கார். அவருக்குப் பணமும் தேவையில்லை" என்றான்.

"மித்ரன், நாம் ஏற்கனவே இந்த கடத்தலுக்கும், பணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்துட்டோம்" என்றான்.

"செல்வி சொன்னதை வைச்சுப் பார்த்தா, இரண்டு வருஷமா சக்திவேலுக்கும், இவருக்கும் பழக்கம் இருந்திருக்கு. அவன் வந்தா செல்வியை வெளியே அனுப்பிச்சிட்டு ஏதோ பேசறாங்க. ஒரு வேளை இந்த வைத்தியர் ஏதாவது மருந்து கண்டுபிடிச்சு, அதை சோதனை செய்யறதுக்கு சக்திவேல் ஆளுங்களை கடத்திட்டு வருவானோ?" என யோசனையுடன் சொன்னான் அகிலன்.

"அதுக்கு ஏன் சென்னையிலிருந்து சம்யுக்தாவை கடத்திட்டு வர்றனும்? இங்கேயே நிறைய பேர் இருக்காங்களே?" என கேட்டான் மித்ரன்.

"சம்யு, ஏதாவது அரிய இரத்த வகையை சேர்ந்த பொண்ணா?" என கேட்ட அகிலனிடம், "அவளும் நானும் ஒரே பிளட் குரூப் தான். ஏபி பாஸிட்டிவ். உலகத்தில் இருபது சதவீத ஆளுங்க இந்த இரத்த வகையை சேர்ந்தவங்க தான்" என்றான் மித்ரன்.

Completed - Sudum Nilavu Sudatha SuriyanWhere stories live. Discover now