பகுதி-62

6.8K 207 79
                                    

எங்க குழந்தய அன்னைக்கு சரியா பார்க்கமகூட வந்துட்டேன்....
என் ரியாகிட்ட பேசாமகூட வந்துட்டேன்.... ஏன் என்ன இப்படி எல்லாரும் ஏமாத்துனாங்க... நா உலகமுனு நெனச்ச தாத்தா பாட்டி... என் பூர்வி என் நண்பன் எல்லாருமே....

பின் தாத்தா பாட்டி பூர்வி, சுரேஷ், லோகேஷ் அனைவரையும் அழைத்து அவர்கள் முன்பிருந்த வீட்டிற்கு வரவழைத்தான்.

அனைவரும் அங்கு வந்தனர்.

ச்ச நீங்க என் லைப்ல இப்டி விளையாடுவிங்கனு நெனைக்கல... என் ரியாவ விட்டு வேற ஒருத்திய நா எப்படி ஏத்துபனு நினச்சிங்க...
உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்ல.... எனக்கு எந்த நியாபகமும் இல்லாதப்ப... என் ரியாவுக்கும் எனக்கும் எப்படி இந்த அநியாயத்த பன்னமுடிஞ்சது.. ச்ச உங்கல என் பேம்லினு நினைக்க எனக்கு வெட்கமா இருக்கு... - நவீன்.

பின் அனைவரும் அவனிடம் சாரி கேட்டு.. நடந்த அனைத்தையும் கூறினர்.
ஆனால் அவன்
நிஷாவை பற்றி எதும் யாரிடமும் கூறவில்லை. அனைவரிடமும் பேசாமல் ஒதுங்கியே இருந்தான். தன் தோழி எப்படிபட்டவள் என அறிந்தாள் தன் ரியா அவனை விட்டு போனதற்கு அவள்தான் காரணம் என குடும்பத்தினர் அறிந்தால்.... செய்யாத தவற்றிற்காக அவளை வெறுத்ததை எண்ணி அனைவரும் மேலும் மன உலச்சலுக்கு உண்டாவர், வருந்துவர் என குடும்பத்தின் மீது  யாரும் அறியா வண்ணம் நிஷாவின் பிரச்சனையை தீர்க்க எண்ணினான்.
அவனுக்கு தெரியும் ரியா இந்நிலையில் இருந்திருந்தால் அவளும் இவ்வாறுதான் செய்திருப்பாள் என அறிவான்.

விக்கியை அழைத்து நடந்தவற்றை கூறினான்.. ஆனால் நிஷா பற்றிய உண்மையை அவனிடமும் கூறவில்லை.

நவீன் டெல்லி சென்றபோது ரியாவை பார்த்ததையும் அவன் குழந்தையை பற்றி கூறியதையும் கேட்டு விக்கி ஆனந்தத்தில் ஆழ்ந்தான்.

நவீன் நிஷாவை தனியாக வரவழைத்து பேசினான்.

நிஷா... எனக்கு தெரியும் நீ என்ன லவ் பன்னனு... ஆனா நா உன்ன அப்படி எப்பயும் பார்த்ததில்ல... அது உனக்கே தெரியும்.
என்ன அப்படி பார்க்க.. தெரியுமா? தெரியாதா? - நவீன்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now