பகுதி-19

6.9K 197 12
                                    

பார்கில் கௌதம்,நிரன்ஜ்,நிரன்ஜின் நண்பன் லோகேஷ் நின்று கொண்டிருந்தனர்......
நவீனை கண்டதும் ரியாவிற்கு ஆத்திரமும் அழுகையும் ஒரு சேர வந்தது....

முதலில் கௌதம் அவளருகில்  வந்து ரியா சாரிடா..... உன்ன பத்தி எனக்கு தெரியும் .... உனக்காகதான் என அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே. கையை காட்டி அவனை எதுவும் பேசவேண்டாம் என அவனை முறைத்து சைகை காட்டினாள்...
கௌதம் அமைதியானான்.

மிகவும் டென்சானான இச்சுழலில் நவீன் அடுத்ததாக களம் இறங்கினான்...

ரியா அவங்கள நான்தான் அப்படி பண்ண சொன்னேன்.....  அவங்கமேல எந்த தப்பும் இல்ல..... அது.. அதுவந்து நான்தான் மாப்ளனு தெரிஞ்சா நீ எப்படி ரியாக்ட் பன்னுவனு தெரியாது அதான்.... கண்டிப்பா நீ என் மேல கோபத்துல இருப்ப அதான்....   உன்ன பத்தி எனக்கு தெரியும் ...கோபத்துல நீ என்ன பண்ணுவனு.... அதான் இப்படி பண்ணோம் என இழுத்து ஒருவழியாக கூறி முடித்தான்.
..... ரியா எதுவும் பேசவில்லை.....

அந்த அமைதியான சூழலை மீண்டும் நவீனே கலைத்தான்....
ரி-யா.... ரியா.. எதாவது பேசு ரியா நா அப்படி பண்ணிருக்க கூடாது..... உன்ன விட்டுட்டு போயிருக்க கூடாது..... உனக்காகதான் ரியா அப்படி பண்ணேன்.... நீ நிம்மதியா சந்தோசமா வாழனுமுனு நெனச்சேன்.... ஆனா அதுக்கப்றம்தான் நா செஞ்சது எவ்வளவு பெரிய முட்டாள்தனமுனு தெரிஞ்சுது......  ஐம் சாரி ரியா..... எதாவது பேசு ... இப்படி அமைதியா இருந்து என்ன கொல்லாதடி பிளீஸ்..........

பின் கோபத்துடன் நிமிர்ந்த ரியா,
ஜஸ்ட் சட் அப் ஓகெ..... பேச தெரியுன்றதுக்காக..... எல்லாரும் என்ன வேணுமுனாலும் பேசுவிங்களா????
பஸ்ட் கௌதம் என்னோட லைப்ப பத்தி என்கிட்ட எதும் கேட்காத எப்படி நீங்களா முடிவெடுத்திங்க..... கல்யாணம் பண்ணிக்க போறது நா... ஆனா என்கிட்ட எல்லார்த்தையும் மறச்ச நீ புதுசா என்னத்த பேசபோற.....அப்பறம் விக்கி நீ.... என்ன சொன்ன.... உன்கிட்ட சொல்லாம விட்டேன் அதனால நீயும் அப்படி பண்ணுனதான..... என்னடா தெரியும் உனக்கு.. ஹான்..
லவ் இருக்கப்ப நான் கான்பிடன்டா இல்ல.... நான் கான்பிடன்டா இருக்கப்ப லவ் பன்னவனே இல்ல அப்டினு சொல்லறதா???? என நிரன்ஜ்ஜை திரும்பி ஒருபார்வை பார்த்துவிட்டு கூறினாள் .

பின் ரியா, அழுது கொண்டே எல்லாரும் என்னபத்தி என்னடா நெனச்சுகிட்டிருகிங்க .... அவன் என்னனா உன் நல்லதுக்கு உனக்காகதானு வசனமெல்லாம் பேசி 5 வருசத்துக்கு முன்ன விட்டு போனான் என்று நிரன்ஜை பார்த்தும், அபறம், நீ கௌதம் என்னோட நல்லதுக்குனு அன்னைக்கு அப்டி திட்டுன...... என் நல்லதுக்கு எனகாகாகதான் எல்லார்த்தையும் மறைச்சனு சொல்றிங்க.... எனக்கும் மனசு இருக்குடா..... என் நல்லதுக்கு.... என் நல்லதுக்குனு சொல்லி எல்லாரும் எவ்ளோ ஹர்ட் பன்னிருக்கிங்க தெரியுமா என்ன..... எவனுமே யோசிக்கல இல்ல என்ன பத்தி அப்படிதான....நா எப்டிடா நிம்மதியா இருந்திருப்பேன்....

அஞ்சு வருசமா காதலுக்காக இவன மட்டுமே நினைச்சுகிட்டிருந்தேன்... அடுத்த  நாளு வருசம் அவன மறக்கனுனு அப்பயும் அவன் தான் எனக்குள்ள இருந்தான்... இப்போதான் எல்லாம் விட்டுட்டு வெளிய வந்தேன்... கஷ்டபட்டு என்ன தேத்தி மறக்க டிரை பன்னா.... எவன பார்க்ககூடாதுனு நெனச்சனோ அவனே முன்னாடி நிக்கறான்....  போதும் நீங்க  எனக்கு நல்லது பன்றனு நெனச்சதெல்லாம்.... சத்யமா தாங்க முடியல .... தயவு செய்து நிறுத்திகோங்க..... போதும் நீங்க பன்னது எல்லாமே பிளீஸ் என கையெடுத்து கும்பிட்டவள் மன்டியிட்டு அழுது கொண்டிருந்தாள். பின் அணு அவளை எழுந்து நிற்க வைத்து சமாதனபடுத்த துவங்கினாள்....

பின் ரியா, வா அணு போலாம் என கிளம்ப திரும்பினாள்.

அப்போது நிரன்ஜ் அவள் கை பிடித்து ரியா ஐம் சாரி, இவங்க நா கேட்டதாலதான் அப்படி பன்னாங்க .... அவங்க மேல கோப படாதா பிளீஸ்.. என்றான்.

கைய விடு நவீன் என்ன தொடக்கூட உனக்கு உரிமை இல்ல.... விடு நா போகனும் என்றாள், ரியா.

எங்க போற நா உன்கிட்ட பேசனும்...-நவீன்.

ஹிம் உன்ன கல்யாணம்பன்னிகிறதவிட சாகபோறதே மேல்னு போறேன் எதாவது பேசனுமுனா என் பிணத்துகூட பேசு என அவன் கையை தன் கையை விட்டு உதறினாள் ரியா..
 
பின் "பளார்" என்ற சத்தம் கேட்டு அனைவரும் ஆடிபோயினர்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now