பகுதி-14

6.8K 195 9
                                    

அன்றிரவு பாரதி, வெங்கடேசனிடம்.....
ஏங்க இன்னைக்கு சரோஜா அம்மாவ கோவில்ல பார்த்தேன்...அவங்க நம்ம பொன்னு கலயாணத்த பத்தி பேசுனாங்க.
என ஆரமித்து தன் கணவனை பார்த்தார்.....

என்னம்மா அடுத்த மாப்பிள்ளையா?????
எத்தன பேர் வந்தாலும் நம்ம பொன்னு சம்மதிக்க மாட்டங்கறா....
பார்க்க வர பயங்டிட்டயே போய் எதாவது சொல்லி அத அப்படியே நிறுத்திடுறா......சரி யாருயாவது லவ் பன்னா சொல்லுமா கல்யாணம் பண்ணி வைக்கரனு கேட்டாலும் இல்லனு சொல்லிட்டா.... இனிமே அவளே  ஒரு முடிவெடுத்தாதாம்மா......மாப்பிளை பார்கறதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சு பார்த்துக்கலாம்......-வெங்கடேசன்.

அட அத பத்திதாங்க பேசுனாங்க.... நம்ம பொன்னு என்ன பன்றாளோ அதே மாதிரிதான் அவங்க பேரன் நிரன்ஜும் கல்யாணம் வேண்டானு சொல்லிகிட்டிருக்கராம். அதனால இரண்டு பேர பத்தியும் நம்ப 2 குடும்பத்துக்கும் நல்லா தெரியுன்றதுநாள எப்படியாவது சீக்கரம் கல்யாணம் பன்னி வச்சுடலானு சொல்றாங்க....
இந்த காலத்துல ஜாதியெல்லாம் எதுகுங்க...  நம்ம பொன்னு வாழ்க்கதாங்க  முக்கியம்...... இதுக்கு சரினு சொல்லிடலாங்க......-பாரதி.

அதல்லாம் சரிம்மா.. நம்ம பொன்னு என்ன சொல்லுவானு தெரியலயே என ரியாவின் தந்தை கேட்டார்.

அதல்லாம் பிரச்சன இல்லைங்க....கௌதம் அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்ப  ரியாகிட்ட பேசுனான். எங்கிட்ட வந்து  நீங்க மாப்பள பாருங்க அம்மா..... அவ சம்மதிப்பா..... நா சம்மதிக்க வைக்கறேனு சொன்னாங்க..... இத டிரை பன்னி பார்கலானு தோனுதுங்க, என பாரதி தெளிவாகவும் தீர்க்கமாகவும் கூறினார்......

சரிம்மா நீ இவ்ளோ சொல்ற பார்க்கலாம் -வெங்கடேசன்.

அடுத்து வந்த நாட்களில் பெரியவர்கள் சந்தித்து பேசி திருமண முடிவுகளை எடுத்தனர்....

ரியாவின் வீட்டில் அவளின் பெற்றோர்கள் அவளிடம் சம்மதம் பெற பல முயற்ச்சிகப் செய்தனர்.... பின் கௌதம் அவளிடம் உரையாடினான்....
ரியா நீ எடுத்துகிட்ட நாளெல்லாம் போதும்... நிரன்ஜ் ரொம்ப நல்ல பயன்னு எல்லாம்  சொல்றாங்க.... நீ இதுக்கு ஒத்துகிட்டுதான்  ஆகனும்...-கௌதம்.

பின் பல  ஆர்குயூமென்டிற்கு பிறகு ...... தான் திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டுமென்றாள் அவளின் கடந்த கால காதல் பற்றி, தெரிந்த பிறகு மாப்பிள்ளை இத்திருமணத்திற்கு ஒப்புகொண்டால் தான் இத்திருமணத்திற்கு சம்மதிப்பதாக..... அவள் இறுதியாக கூறினாள்....

நிரன்ஜ் வீட்டில் அவன் பாட்டி உடல்நிலை சரியில்லாமல்  மாத்திரை மருந்து உட்கொள்ளாமல் இருப்பது போல நடித்ததினால் முடிவாக வேறு வழியின்றி இத்திருமணத்திற்கு ஒப்பு கொண்டான். பெண்ணிடம் பேசி திருமணத்தை நிறுத்திவிடலாம் என்ற நம்பிக்கையில்.

கௌதம் நிரன்ஜை பார்த்து பேசி முடித்து விட்டு ரியாவிடம்,
ரியா அவருக்கு பிரச்சன இல்லையாம்.... அவருக்கும் ஒரு பாஸ்ட் இருக்காம்...அவர் மூவ்வான் ஆக கொஞ்ச நாள் ஆகும்மா.. ... உனக்கு     
சரின்னா.... அவர் சம்மதம் சொல்ல சொன்னாரு.... பின் ரியாவும் சம்மதித்தாள்.... திருமணம் அடுத்த மாதமே திட்டமிடப்பட்டது..
மணமக்களுக்கு அவர்கள் சந்திக்க தடைவிதித்தனர். ஏதாவது பேசி இத்திருமணத்தையும் நிறுத்தி விடுவார்களோ என்று ஒரு அச்சம் இருந்ததனால்....அவர்களும், திருமணத்தில் எந்த ஆர்வமும் இல்லாததால் இதை பொருட்படுத்தாமல் அவரவர்  வேலையில் மூழ்கினர்.......இரு வீட்டவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்..... ரியா மற்றும் நிரன்ஜை தவிர....
திருமணத்தின் முன்தினம் நிச்சயம்...... திருமணத்தின் அடுத்த நாள்  ரிசப்சன் என மூன்றுதின விழாவாக அவர்களின் திருமணம் திட்டமிடப்பட்டது...... இருவர் வீட்டிலும் முதல் பிள்ளைகளின் திருமணம் என்பதால் அனைத்து வேலைகளும் தடபுடலாக..... சிறப்பாக நடந்தது...... இதற்கிடையில் நிரன்ஜும் ரியாவும் பேசுவதற்கு கூட விருப்ப படவில்லை......

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now