பயனர் பேச்சு:Kalaiarasy
தலைப்பைச் சேர்வரவேற்புரைகள்
[தொகு]இரவி
[தொகு]வாருங்கள், Kalaiarasy!
விக்சனரிக்கு உங்களை வரவேற்கிறோம். தமிழ் விக்சனரி பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். தளத்தை பயன்படுத்துவது குறித்து ஏதேனும் உதவி, விளக்கம் தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் சொற் பொருள் எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.
விக்சனரிக்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, புதுப்பயனர் பக்கத்தை பாருங்கள். பக்கங்களை எப்படி தொகுப்பது என்று அறிய தொகுத்தல் உதவிப் பக்கத்தைப் பாருங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்சனரி உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--ரவி 02:40, 10 நவம்பர் 2008 (UTC)
த*உழவன்
[தொகு]ஓங்குக தமிழ் வளம் !
- வாங்க! Kalaiarasy,
- நீங்கள் வந்ததிலே எனக்கு மிக்க மகிழ்ச்சிங்க!! ஏனெனில், உங்களைப் போல நானும், இப்பங்களிப்பில் ஆர்வமுடையவன்.
- இனி நானும் உங்களோடு இணைந்து பணியாற்றுவேன். இங்ஙனம் நாம் பங்களிக்கும் போது, நமக்கு முன்னவர் செய்த செயல்விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என கருதுகிறேன். அதுபற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
- ஒவ்வொருச் சொல்லும் 500 பைட்டுகளுக்கு குறையாமல் இருந்தால் மிகவும் நல்லது.
- இந்த பைட்டுகள் எண்ணிக்கையை, ஒவ்வொரு பக்கத்தின் மேலுள்ள வரலாறு என்ற தத்தலைச் சொடுக்குவதன் மூலம் காணமுடியும்.
- ஒவ்வொரு பக்கத்திலும் கூடுமானவறை விக்கி ஊடக நடுவத்தின் படங்கள் மூலம் இணைப்பு ஏற்படுத்த வேண்டும். அப்போது அதிக பைட்டுகள் கிடைக்கும். மற்ற விக்சனரி பக்கங்களை விட, தமிழ் விக்சனரி அழகாகவும் இருக்கும்.
- (எ.கா) - அங்கே. மேலும், சில அரி, சிரம்
- நீங்கள் கீழுள்ள தொகுத்தலுக்கான உதவி (புதிய கட்டத்துள் திறக்கும்) என்பதில், உங்கள் முயற்சிகளை தயங்காமல் செய்து பாருங்கள். அதற்கு முன், உங்களுக்கு பிடித்த பல சொற்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டுள்ளது என்பதனை, சில நிமிடங்கள் காணவும்.
- ஏதேனும் வினாக்கள் எழுந்தால், என்னை அணுகவும். என்னை அணுக, கீழுள்ள தொடர்புக்கு என்பதனைச் சொடுக்கி உங்கள் வினாவினை கேட்கலாம்.
- நன்றி. --த*உழவன் 07:17, 31 அக்டோபர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer) உரை..
- நன்றி மகிழ்நன். நீங்கள் எழுதியிருக்கும் தொழிநுட்ப விடயங்கள் பல புரியவில்லை. ஆறுதலாக புரிந்து கொள்ள முயல்கிறேன் :).--கலை 12:21, 31 அக்டோபர் 2009 (UTC)
- நன்றி. --த*உழவன் 07:17, 31 அக்டோபர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer) உரை..
- தொழிநுட்ப விடயங்கள் பல புரியவில்லை... அவ்விடயங்கள் பற்றி ஒவ்வொன்றாக, நிறைய கேள்வி கேளுங்கள். எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன். எனக்கு இங்கு ஆர்வம் ஏற்படுவதற்கு காரணம் இரவி. எனக்கு பலர் உணர்த்தியதை, நான் உங்களிடமும் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். நீங்கள் கேட்கும் கேள்விகள், இத்தள மேம்பாட்டின் வளர்ச்சிக்கு உதவுமென நம்புகிறேன்.த*உழவன் 13:08, 31 அக்டோபர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer) உரை..
- நான் விக்சனரியில் சொற்களைத் தேடுவதோடு நின்று விடுகின்றேன். இன்னமும் இங்கே பங்களித்து புதிய சொற்களை அறிமுகம் செய்ய ஆரம்பிக்கவில்லை. ஆர்வம் இருப்பினும், நேரக் குறைபாடு இதை செய்யாமல் இருக்க ஒரு காரணமாக இருக்கிறது. கூடிய விரைவில் என்னால் இங்கே பங்களிக்க முடியுமா எனப் பார்க்கிறேன். --கலை 12:36, 4 நவம்பர் 2009 (UTC)
நீங்கள் வந்து செல்வதே மகிழ்ச்சி. மாதம் ஒரு முறையாவது வந்து பங்களியுங்கள். அதுவும் இயலாதது ஆயின், ஒரு குறிப்பேட்டில் மெதுவாகத் தொகுத்து, பிறகு மொத்தமாக எனக்கு மின்மடல் இட்டுவிடுங்கள். நான் அவற்றை விக்கியாக்கம் செய்து விடுகிறேன். நன்றி. வணக்கம்.த*உழவன் 13:28, 4 நவம்பர் 2009 (UTC)
சின்னம்மை, பெரியம்மை
[தொகு]Smallpox, Chickenpox போன்றவற்றிற்கான சரியான தமிழ் சொற்கள் தெரியவில்லை. Smallpox இற்கு சின்னம்மை என்றும், Chickenpox க்கு அம்மை, சிற்றம்மை என்றும் தமிழ் அகரமுதலியில் உள்ளது. அதேவேளை தமிழ்விக்கியில் பெரியம்மை என்பது, ஆங்கில விக்கியில் smallpox இற்கான தொடுப்பாகவும், தமிழ்விக்கியில் சின்னம்மை என்பது, ஆங்கில விக்கியில் chickenpox இற்கான தொடுப்பாகவும் தரப்பட்டுள்ளது. இதனால் சரியான சொற்கள் புரியாமல் குழப்பமாக உள்ளது. இவற்றில் எது மிகச் சரியான சொற்கள் என அறிய விளைகின்றேன். தெரிந்தவர்கள் உதவுங்கள்.--கலை 22:55, 30 அக்டோபர் 2009 (UTC)
- விரைவில் அனைத்தினையும் தெளிவுபடுத்திக்கொண்டுச் சொல்கிறேன்.நீர் மருத்துவத்துறையில் நிறைய பங்களிப்பீர் என நினைக்கிறேன். இப்பகுப்பில் (பகுப்பு:மனித நோய்கள்), நிறைய சொற்களை உருவாக்க வேண்டுகிறேன். த*உழவன் 07:23, 31 அக்டோபர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer) உரை..
- smallpox என்பதைக் கண்டறிக! மேலும், நோயியல் பற்றி எனக்கு ஆர்வம் இல்லை. அடிப்படைக் கல்வியியலில் எனக்கு ஆர்வம் அதிகம். அதாவது, குழந்தைக் கல்வியியலில் கவனம் செலுத்துகிறேன். உங்களுக்கு எதில் ஆரவம்?த*உழவன் 07:29, 2 நவம்பர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer) உரை..
- எனக்கு பொதுவாகவே அறிவியல் தொடர்பான எல்லா விடயங்களும் ஆர்வம் தருபவை. ஆனால் அது மட்டும் என்று சொல்ல முடியாது. பொதுவாக குழந்தைகள், பெண்கள், மற்றும் விவசாயம் தொடர்பான விடயங்களும் ஆர்வம் தருபவையே. குழந்தைக் கல்வியியல் சிறப்பான ஒரு விடயம்தான். தொடருங்கள். மேலும் Smallpox, Chickenpox என்பன முறையே பெரியம்மை, சின்னம்மை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். இலங்கையில் Chickenpox ஐ கொப்பளிப்பான் (அல்லது பொக்களிப்பான்) என்றும் அழைப்பார்கள். நன்றி--கலை 23:59, 3 நவம்பர் 2009 (UTC)
கோதாரி / கோமாரி
[தொகு]கோமாரி என்பது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு வரும் ஒரு கொள்ளைநோய் என்று அறிந்திருக்கிறேன். ஆனால் அந்த சொல்தான் கோதாரி என்று திரிபடைந்ததா, அல்லது வேறு ஏதாவது அர்த்தம் உண்டா? ஒருவர் கோதாரி என்பது வாந்திபேதி நோய் என்கிறார். தெரிந்தவர்கள் கூறுங்கள்.--கலை 17:45, 3 டிசம்பர் 2009 (UTC)
2009 - நிருவாக அணுக்கம் - நன்றியுரை
[தொகு]ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பது பழமொழி. அதனால், கடந்த வருடம் நிருவாக அணுக்கம் வேண்டாமென்றேன்.
ஆனால்,இவ்வருடம்,போய் கத்துக்கப்பா! என்று சொல்லி, என்னை நீரில் தள்ளிய இரவியை மறவேன்!
தமிழ் விக்சனரி முன்னனியில் விளங்க, உங்களது ஆலோசனைகளை, அவ்வப்போது எனக்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என்னை வண்ணமிட்டு, அழகு படுத்தியமைக்கு, என் உளமார்ந்த நன்றிகள். உங்கள் சுட்டுவிரல்களை என்றும் எதிர்பார்க்கிறேன்.
- .த*உழவன் 06:53, 10 டிசம்பர் 2009 (UTC)-- த♥உழவன் (Info-farmer) உரை..
இலங்கம் குறித்த கலந்துரையாடல்
[தொகு]- ஒரு நாளைக்கு குறைந்தது 4மணிநேர மின்தடை. அதனால் இணைய இணைப்புத்தடை. வழக்கமானப் பொருளாதாரப்பணிகளுக்கான நேரத்தில் இவ்விடர்கள் இல்லாத இருக்கிறது. அந்நேரத்தில், என்னால் விக்கித்தமிழுக்காச் செயல்பட முடியவில்லை. எனினும், கிடைக்கும் நேரத்தில் TamilBOT கொண்டு, 7,8 மாதங்களாக எண்ணிக்கிடந்த பணிகளைச் செய்வதில் முனைப்புடன் இருக்கிறேன். இதனால் இரவி மற்றும் சுந்தரின் உழைப்புகள், குடத்திலிட்ட விளக்காக இருந்தன. அதனை வெளிக்கொணர்ந்துள்ளேன். ஏறத்தாழ 10,000 சொற்களின் எண்ணிக்கை, கடந்த மாதத்தில் அதிகமானது.
- இலவங்கம் குறித்து படங்களுடன் கட்டுரைகளை, சொல்லியபடி இப்பொழுது எழுத இயலவில்லை. மன்னிக்கவும். இருப்பினும் கீழ்காணும் தகவற் குறிப்புகள், உங்களுக்கு உதவலாம்.
http://www.indianspices.com/html/s0625cinnamon.htm
லவங்கம், s. clove, கிராம்பு; 2. wild cinnamon, cassia, காட்டுக் கருவாமரம்; 3. cinnamon, கருவா. , லவங்கம், s. clove, கிராம்பு; 2. wild cinnamon, cassia, காட்டுக்
கருவாமரம்; 3. cinnamon, கருவா.இலவங்கப்பட்டை, cinnamon, cassia bark.
இலவங்கப்பத்திரி, leaf of the cassia.
இலவங்கப்பூ, cloves, a spice.
இலவங்கப்பட்டை, cinnamon, cassia bark.
இலவங்கப்பத்திரி, leaf of the cassia.
இலவங்கப்பூ, cloves, a spice.
இலவங்கம் பற்றிய எனது கருத்து;- நீங்கள் சொல்லிய படி கறுவா அல்ல. கருவா என்பதே சரி. கரு என்பதும், கறு என்பதும் கருமை நிறத்தைக் குறிக்கிறது. புற இயல்பைப் பொறுத்தவரையில் இரண்டும் சரி. அக இயல்பைப் பார்க்கும் போது, கருவா என்பதே சரி. இலங்கையின் மரவகைகளில் இது சிறப்பான இடத்தைப் பெறுகிறது. அநேகமாக இம்மரத்தின் தாயகம், இலங்கை மண்ணாக இருக்கலாம். அதிலுள்ள வேதிப்பொருள் உணவிலுள்ள பூஞ்சைகளைக் கொல்லும் வேதிப்பொருட்களைப் பெற்றுள்ளது.கல்லூரிக் காலங்களில், கலாவதி என்ற பேராசிரியை உயிரியவேதியியலை அற்புதமாக சொல்லிக்கொடுப்பார். (நான் சரியாப் படிக்கலைங்கறது.வேறுகதை!)
என்னுடன் கலையரசன் என்பவன் அறைத்தோழனாக இருந்தான். அவனை கலை என்றே அழைப்பேன். இப்பொழுது இலண்டனில் கணினியியல் துறையில் இருக்கிறான். அவனுக்கும், எனக்கும் மனவருத்தம். படிக்கும் காலங்களில், நான் ஊர் சுற்றி. உங்கள் பெயரினைப் பார்க்கும் போது, அவன் ஞாபகம் வருகிறது. அவன் எனக்குக் கூறியவை இப்பொழுது தான் உரைக்கிறது.
உரைந்து கிடக்கும் நீரின் மேல், தங்கள் பிள்ளையுடன் கைகோர்த்து நடந்த ஆனந்தத்தைப் பற்றி (எழுதி இருந்திங்க; எங்கு என்று நினைவில்லை) நானும் இரசித்தேன்.
தங்களின் வலைப்பூவில் உடல்நலக் குறிப்புகளைக் கண்டேன். கணினி பயன்படுத்தும் போது அவைகளைப் பின்பற்றுகிறேன். மிக்க நன்றி.
தமிழ்விக்கிப்பீடியாவில் நற்கீரன் என்று நினைக்கிறேன். அவர் உடல் நலம் பற்றி விக்கித்திட்டம் ஆரம்பித்திருந்தார். அப்பகுதியில் உங்களால் சிறப்பானக் கட்டுரைகள் எழுத முடியுமென நம்புகிறேன். மற்றவை பிறகு. வணக்கம்.த*உழவன் 07:01, 6 ஏப்ரல் 2010 (UTC)
- விபரமாக அறியத் தந்தமைக்கு நன்றி தகவலுழவன். மேலும் எனது வலைப்பதிவையும் பார்வையிடுகிறீர்கள் எனத் தெரிகின்றது. அதற்கும் நன்றிகள். --கலை 09:50, 6 ஏப்ரல் 2010 (UTC)
தானியங்கிச் சோதனை-1
[தொகு]இப்பக்கத்தில் தங்களது வாக்கினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தங்களது ஆலோசனைகளை, அதன் உரையாடற்பக்கத்திலும் தெரிவிக்கலாம். நன்றி. வணக்கம்.--த*உழவன் 01:37, 8 அக்டோபர் 2010 (UTC)
Norsk Bokmal
[தொகு]உங்களுடன் உடன் இணைய முடியவில்லை. வருந்துகிறேன். புதிய முயற்சிகளால் மிகவும் மகிழ்கிறேன். என் பேச்சுப் பக்கத்தில் சில கருத்துகளை இட்டுள்ளேன்--த*உழவன் 01:09, 14 நவம்பர் 2010 (UTC)
- இதில் வருந்துவதற்கு எதுவுமில்லை. இனிமேலும் எனக்கு உதவிகள் தேவைப்படும்போது உங்களிடம் நிச்சயம் கேட்பேன். வேலைப்பளு காரணமாக விக்கியில் பொதுவாகவே எனது பங்களிப்பு குறைவாக உள்ளது. நேற்ரும் இன்றும் விக்கி மாரத்தனை ஒட்டி கொஞ்சம் அதிகமாக எனது பங்களிப்பைச் செய்துள்ளேன். வருகின்ற நாட்களில் விக்சனரியிலும் பங்களிப்பைச் செய்ய முயற்சிக்கிறேன். நன்றி.--கலை 23:55, 14 நவம்பர் 2010 (UTC)
பணியடர்விலும் இங்கும் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சோடாபாட்டில், Norsk Bokmal பற்றி எனது பேச்சுப்பக்கத்தில் கூறியிருந்தார். அதன்வடிவமைப்பைப் பற்றி சிலரது கருத்தினைச் சுட்டியுள்ளேன்.அது பற்றிய உங்களது கருத்தறிய ஆவல். அக்கருத்து வடிவ மறுசீரமைப்பிற்கு உதவுமென எண்ணுகிறேன்.--த*உழவன் 02:10, 15 நவம்பர் 2010 (UTC)
பயனர் பெயர் மாற்றம்
[தொகு]நான் நிர்வாகி என்பதால், என்னால் ஏதேனும் செய்ய இயலுமா எனப்பார்த்தேன். பெயர்மாற்றம் சம்பந்தமாக எந்தவித இணைப்பும் எனக்குத் தட்டுப்படவில்லை. இரவியால் மட்டுமே செய்யமுடியும் என்றே தோன்றுகிறது. சுந்தர் அதிகாரி அணுக்கம் மூலமாகவா அதை விக்கியில் செய்தார்? பழ.கந்தசாமி 01:58, 19 மார்ச் 2011 (UTC)
- ஆம். இந்த பெயர்மாற்றத்தைச் செயல்படுத்த அதிகாரி அணுக்கம் தேவை என்றுதான் சுந்தர் சொன்னார். அதனால் இரவியின் உரையாடல் பக்கத்திலும் தகவல் இணைத்துள்ளேன். உதவ முன்வந்தமைக்கு நன்றி.--கலை 10:32, 19 மார்ச் 2011 (UTC)
- கலை, நீங்கள் வேண்டியபடி பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோதித்துப் பார்த்து மாற்றம் தேவை எனில் தெரியப்படுத்துங்கள். இனி புதிய பெயரை மட்டும் பயன்படுத்தவும். தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்க இது உதவும். வார இறுதியில் சற்று உடல் நலம் சரி இல்லாமல் இருந்ததாலும், நீங்கள் ஏற்கனவே தமிழ் விக்கியில் பெயர் மாற்றியதால் வந்த குழப்பத்தால் தகுந்த ஆவணங்களைப் படித்துப் பார்த்துச் செயற்படுத்த வேண்டி இருந்ததாலும், சற்று தாமதமாகவே பெயர் மாற்ற முடிந்தது. தாமதத்துக்கு வருந்துகிறேன். நன்றி--ரவி 11:50, 21 மார்ச் 2011 (UTC)
விக்சனரி நிருவாகி தேர்தலில் வாக்களிக்க வேண்டல்
[தொகு]வணக்கம். நடைபெறும் விக்சனரி நிருவாகி தேர்தலில் தங்கள் வாக்கு அல்லது கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 06:50, 4 மே 2011 (UTC)
விக்சனரி கலைச்சொல் திருத்தம்/ ஆக்கம்
[தொகு]பயனர்:Drsrisenthil/கலைச்சொல்லாக்கம் இங்கே தற்காலிகமாகப் பதிகின்றேன். (நேரம் உள்ளபோது கருத்துக் கூறுகின்றேன்.)--சி. செந்தி 16:22, 25 மே 2011 (UTC)
பகுப்புக்கருவி
[தொகு]- மேலுள்ள என்விருப்பத்தேர்வுகள் என்ற தத்தலுக்குள் செல்லவும்.
- அதில் கருவிகள் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
- HotCat என்பதனைத் தெரிவு செய்யவும்.
- கீழுள்ள சேமி என்ற ஆழியை அழுத்தவும்.
- பகுப்பதற்கு முன், குறிப்பிட்ட பகுப்பின் தாய், சேய் பகுப்புகளை ஒரு முறை நோட்டம் விட்டுக் கொள்ளவும்.
- கூட்டல் குறிகளை அழுத்தி மாற்றம் செய்யலாம். கழித்தல் குறிகளைப் பயன்படுத்தி, முற்றிலும் நீக்கலாம்.
- ஒன்றிற்க்கும் மேற்பட்ட பகுப்புகளில் மாற்றம் செய்ய, பகுப்பு என்ற சொல்லுக்கு அடுத்து இருக்கும், இரு கூட்டல் குறிகளை அழுத்திய பிறகு, மாற்றங்களை ஏற்படுத்திய பின்பு, சேமித்தால், முன்தோற்றம் தோன்றும். பிறகு வழக்கம் போல, பக்கத்தைச் சேமி என்பதனை அழுத்தவும்.
- இந்த உரையாடலுக்கு பிறகு, இப்பகுப்பானது, இப்படி மாற்றப்படுகிறது. நீங்களும் மாற்றினால், தளத்தின் சீர்மை மேம்படும். நன்றி. மீண்டும் சந்திப்போம். வணக்கம்.--18:57, 22 செப்டெம்பர் 2011 (UTC) த♥உழவன் (Info-farmer) உரை..
ஊடக உரிம வேண்டுகோள்
[தொகு]நீங்கள் பதிவேற்றிய ஊடகங்களுக்கு உரிய உரிமம் தர வேண்டுகிறோம். முழுக்க முழுக்க உங்களின் சுயமுயற்சியால் உருவாக்கப்பட்ட ஊடகம் எனில், . {{GFDL}} என்ற உரிமத்தை இடலாம். (எ. கா.) படிமம்:DSAL-neechalkaran-spreadsheet-customised-model-word.png. மேற்கண்ட உரிமம் வழங்க உங்களுக்கு உகப்பெனில், அவ்வூடகபக்கத்தினைத் திறந்து, {{GFDL}} என்று ஒட்டினால் போதும். அவ்வாறு உரிமத்தை வழங்கவில்லையெனில் அவை நீக்கப்பட பெருமளவு வாய்ப்புள்ளது. ஐயமிருப்பின் வினவவும் .--தகவலுழவன் (பேச்சு) 04:13, 3 சூலை 2014 (UTC)