உள்ளடக்கத்துக்குச் செல்

2014 இந்திய ஒன்றியத்தின் வரவு செலவுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2014- 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சூலை 10, 2014 அன்று தாக்கல் செய்தார்.

முக்கிய அம்சங்கள்

[தொகு]

வரிச் சலுகைகள்

[தொகு]
  • தனிநபரின் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2 இலட்சத்திலிருந்து 2.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, மூத்த குடிமக்களுக்கு இது 2.5 இலட்சத்திலிருந்து 3 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • 80சி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 1 இலட்சத்திலிருந்து 1.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • பொதுச் சேம நல நிதியில் ஒரு நிதியாண்டில் முதலீடு செய்ய உச்ச வரம்பாக இதுவரை இருந்து வந்த 1 இலட்சம் 1.5 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருவாய் பற்றாக்குறை

[தொகு]

நிதிப் பற்றாக்குறை 4.1% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், இரு ஆண்டுகளில் நிதிப்பற்றாக்குறை 3% ஆக குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வளர்ச்சி மற்றும் பணவீக்கம்

[தொகு]
  • வளர்ச்சி 5.4% -லிருந்து 5.9% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

தனியார்மயம்

[தொகு]
  • 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் தனியார் கூட்டுடன் (Public Private Partnership) விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டங்கள்

[தொகு]
  • புதியதாக 5 ஐஐடி, 5 ஐஐஎம் மற்றும் 4 எய்ம்ஸ் மருத்துவமனைகள் திறக்கப்பட உள்ளது.
  • கங்கை நதியில் நீர்வழிப் போக்குவரத்தை ஏற்படுத்த ஜல் மார்க் விகாஸ் என்கிற பெயரில் 4200 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (New and Renewable Energy) துறையில் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது.
  • சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பார்வைச் சவால் உடையோர் படிப்பதற்கான புத்தகங்களை பிரெயில் முறையில் அச்சிடும் அச்சகங்கள் புதிதாக 15-ம், இயக்கத்திலிருக்கும் 10 அச்சங்களை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
  • கிராமப்புறங்களில் இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க 500 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

விவசாயம்

[தொகு]
  • விவசாயிகளுக்காக பிரத்தியேகமாக ஒரு தொலைக்காட்சி சேவையைத் தொடங்க 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் கருத்துகள்

[தொகு]
  • "இந்த வரவு செலவுத் திட்டம் ஒரு ஆரம்பமே; முடிவல்ல" என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்[1].

மாநில முதல்வர்களின் கருத்துகள்

[தொகு]
  • நோக்கம், இலட்சியம், செயல்பாடு இவை மூன்றிலும் குறைபாடுள்ள வரவு செலவுத் திட்டமென மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்[2].

பத்திரிகைகளின் விமர்சனங்கள்

[தொகு]
  • பிரமாதமுமில்லை, மோசமுமில்லை... - தினமணி நாளிதழின் தலையங்கம் [3].
  • More continuity than change - தி இந்து நாளிதழின் தலையங்கம் [4].
  • மாற்றமல்ல தொடர்ச்சிதான்! - தி இந்து (தமிழ்) நாளிதழின் தலையங்கம் [5].

பொருளாதார நிபுணர்களின் விமர்சனக் கட்டுரைகள்

[தொகு]
  • மோசமான சூழலில் சிறப்பான பட்ஜெட்! - தினமணி நாளிதழில் எஸ். குருமூர்த்தியின் கட்டுரை [6].

அரசியல் தலைவர்களின் விமர்சனக் கட்டுரைகள்

[தொகு]
  • Whose budget is it anyway? - தி இந்து நாளிதழில் பிருந்தா காரத்தின் கட்டுரை [7].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Budget just a beginning, not the end: Jaitley". தி இந்து. 13 சூலை 2014. http://www.thehindu.com/business/budget/budget-just-a-beginning-not-the-end-jaitley/article6206467.ece?ref=relatedNews. பார்த்த நாள்: 15 சூலை 2014. 
  2. "Budget lacks vision, mission, action: Mamata". தி இந்து. 11 சூலை 2014. http://www.thehindu.com/todays-paper/budget-lacks-vision-mission-action-mamata/article6199804.ece. பார்த்த நாள்: 16 சூலை 2014. 
  3. "பிரமாதமுமில்லை, மோசமுமில்லை...". தினமணி. 11 சூலை 2014. http://www.dinamani.com/editorial/2014/07/11/பிரமாதமுமில்லை-மோசமுமில்ல/article2324407.ece. பார்த்த நாள்: 12 சூலை 2014. 
  4. "More continuity than change". தி இந்து. 11 சூலை 2014. http://www.thehindu.com/opinion/editorial/more-continuity-than-change/article6197930.ece. பார்த்த நாள்: 12 சூலை 2014. 
  5. "மாற்றமல்ல தொடர்ச்சிதான்!". தி இந்து (தமிழ்). 14 சூலை 2014. http://tamil.thehindu.com/opinion/editorial/மாற்றமல்ல-தொடர்ச்சிதான்/article6206979.ece. பார்த்த நாள்: 15 சூலை 2014. 
  6. "மோசமான சூழலில் சிறப்பான பட்ஜெட்!". தினமணி. 14 சூலை 2014. http://www.dinamani.com/editorial_articles/2014/07/14/மோசமான-சூழலில்-சிறப்பான-பட்/article2329403.ece. பார்த்த நாள்: 15 சூலை 2014. 
  7. "Whose budget is it anyway?". தி இந்து. 15 சூலை 2014. http://www.thehindu.com/opinion/op-ed/whose-budget-is-it-anyway/article6210219.ece?homepage=true. பார்த்த நாள்: 15 சூலை 2014. 

உசாத்துணை

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]