1879
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1879 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1879 MDCCCLXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1910 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2632 |
அர்மீனிய நாட்காட்டி | 1328 ԹՎ ՌՅԻԸ |
சீன நாட்காட்டி | 4575-4576 |
எபிரேய நாட்காட்டி | 5638-5639 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1934-1935 1801-1802 4980-4981 |
இரானிய நாட்காட்டி | 1257-1258 |
இசுலாமிய நாட்காட்டி | 1296 – 1297 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 12 (明治12年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2129 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4212 |
1879 (MDCCCLXXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 11 - ஆங்கிலோ-சூலு போர் ஆரம்பமானது.
- ஜனவரி 22 - தென்னாபிரிக்காவின் சூலுப் படைகள் ஐசட்னெல்வாஅனாவில் வைத்து பிரித்தானியப் படைகளைப் படுகொலை செய்தனர்.
- பெப்ரவரி 27 - சக்கரீன் கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 12 - ஆங்கிலோ-சூலு போர்: நூற்றுக்கும் அதிகமான ஆங்கிலப் படைகள் சூலுக்களினால் சுற்றிவளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
- மார்ச் 28 - ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஹுலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
- மார்ச் 29 - ஆங்கிலோ-சூலு போர்: கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.
- மே 3 - யாழ்ப்பாணம், கரவெட்டியில் இந்துக் கோயில் ஒன்றில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர்.
- ஜூலை 4 - ஆங்கிலோ-சூலு போர் உலுண்டி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரின் பின்னர் முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் 21 - தொமஸ் அல்வா எடிசன் காபன் நுண்ணிழை ஒன்றை வெற்றிடக் குமிழொன்றினுள் பொருத்தி 13½ மணிநேரம் வெற்றிகரமாக ஒளிரக்கூடிய மின் விளக்கைக் கண்டுபிடித்தார்.
- டிசம்பர் 28 - ஸ்கொட்லாந்து, டண்டீ என்ற இடத்தில் தொடருந்து ஒன்று பாலம் ஒன்றைக் கடந்த வேளையில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 31 - நியூ ஜேர்சியில் வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
[தொகு]- தமிழில் முதல் நாவல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் வெளி வந்தது.
- வில்லியம் குறூக்ஸ் என்பவர் மின்இறக்கக் குழாய் ஆய்வுகளின்போது பொருளின் நான்காவது நிலையை (பிளாஸ்மா) அடையாளம் கண்டார்.
- எட்வின் ஹோல் என்பவரால் ஹோலின் விளைவு கண்டுபிடிக்கப்பட்டது.
- ஜோசெப் ஸ்டெஃபான் என்பவரால் ஸ்டெஃபான்-போல்ட்ஸ்மன் விதி கண்டுபிடிக்கப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 13 - சரோஜினி நாயுடு, இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1949)
- பெப்ரவரி 22 - ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட், டென்மார்க் நாட்டு வேதியியலாளர் (இ. 1947)
- மார்ச் 14 - அல்பர்ட் ஐன்ஸ்டீன், அறிவியலாளர் (இ. 1955)
- ஜூலை 27 - நாவலர் சோமசுந்தர பாரதியார், தமிழறிஞர் (இ. 1959)
- செப்டம்பர் 17 - ஈ. வெ. ராமசாமி, பெரியார் (இ. 1973)
- நவம்பர் 7 - லியோன் ட்ரொட்ஸ்கி, மார்க்சியப் புரட்சியாளர் (இ. 1940)
- டிசம்பர் 30 - இரமண மகரிஷி
இறப்புகள்
[தொகு]- மே 4 - சேர் முத்து குமாரசாமி, இலங்கையின் தமிழ் அரசியல் தலைவர் (பி. 1834)
- ஆகஸ்ட் 27 - ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் (பி. 1795)
- டிசம்பர் 5 - ஆறுமுக நாவலர், ஈழத்து சைவ அறிஞர் (பி. 1822)