1703
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1703 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1703 MDCCIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1734 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2456 |
அர்மீனிய நாட்காட்டி | 1152 ԹՎ ՌՃԾԲ |
சீன நாட்காட்டி | 4399-4400 |
எபிரேய நாட்காட்டி | 5462-5463 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1758-1759 1625-1626 4804-4805 |
இரானிய நாட்காட்டி | 1081-1082 |
இசுலாமிய நாட்காட்டி | 1114 – 1115 |
சப்பானிய நாட்காட்டி | Genroku 16 (元禄16年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1953 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4036 |
1703 (MDCCIII) ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 14 - இத்தாலியின் நோர்சியா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பெப்ரவரி 2 - இத்தாலியின் லாக்கிலா நகரை நிலநடுக்கம் தாக்கியது.
- மே 27 (மே 16 (பழைய நாட்காட்டி) - பெரும் வடக்குப் போர்: ரஷ்யாவின் முதலாம் பீட்டர் சுவீடனிடம் இருந்து இங்கிரியாவைக் கைப்பற்றியதை அடுத்து சென் பீட்டர்ஸ்பேர்க் அமைக்கப்பட்டது.
- சூன் - ஐசுலாந்தில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது. முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட முதலாவது நாடு இதுவாகும்.
- சூலை 29-சூலை 31 - எழுத்தாளர் டானியல் டீஃபோ அரசியல் அங்கதப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டமைக்காக தண்டனைக் கட்டையில் வைக்கப்பட்டு, பின்னர் நான்கு மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டார்.
- நவம்பர் 24-டிசம்பர் 2 - அத்திலாந்திக்கு வெப்ப மண்டலச் சூறாவளி தெற்கு இங்கிலாந்து மற்றும் ஆங்கிலக் கால்வாயைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- நவம்பர் 30 - ஐசாக் நியூட்டன் இலண்டன் அரச கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1727 இல் இறக்கும் வரை இப்பதவியில் இருந்தார்.
- கோவா பாதிரியார் ஜக்கோல்மி கொன்சால்வெசு இலங்கை வந்தார்.[1].
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- மார்ச் 3 - ராபர்ட் ஹூக், ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1635)
- மே 26 - சாமுவேல் பெப்பீசு, ஆங்கிலேயக் கடற்படை மேலாளர் (பி. 1633)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, Ceylon, 1923, (2ம் பதிப்பு: 2003) பக்.5