ஹரிஷ் மீனா
Appearance
ஹரிஷ் மீனா | |
---|---|
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஒரு நிகழ்ச்சியில் ஹரிஷ். | |
இராசத்தான் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 டிசம்பர் 2018 | |
முன்னையவர் | ராஜேந்திர குர்ஜர் |
தொகுதி | தியோலி-உனியாரா |
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 14 நவம்பர் 2018 | |
முன்னையவர் | கிரோடி லால் மீனா |
பின்னவர் | ஜசுகவுர் மீனா |
தொகுதி | தௌசா |
இந்திய அரசின் செயலாளர் (சிறப்பு பாதுகாப்புப் படை) | |
பதவியில் 2013–2014 | |
காவல்துறையின் தலைமை இயக்குநர் இராசத்தான் | |
பதவியில் மார்ச் 2009 – டிசம்பர் 2013 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 செப்டம்பர் 1954 பமன்வாஸ், சவாய் மாதோபூர், இராசத்தான் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (2018 நவம்பர் 14 முதல்) |
துணைவர் | புனித் மீனா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | செய்ப்பூர், இராசத்தான் |
முன்னாள் கல்லூரி | இராஜஸ்தான் பகலைக்கழகம் |
வேலை | இந்தியக் காவல் பணி (ஓய்வு ) , காவல்துறையின் தலைமை இயக்குநர் (ஓய்வு பெற்ற), அரசியல்வாதி |
இணையத்தளம் | harishmeena |
ஹரிஷ் சந்திர மீனா (Harish Chandra Meena) இராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியிலும்]] தற்போது (2020 வரை) இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனும்]] தொடர்புடையவர். இராஜஸ்தானின் தௌசா தொகுதியிலிருந்து 16வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] ஓய்வு பெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரியும், முன்னாள் காவல்துறையின் தலைமை இயக்குனருமாவார். இவர் மார்ச் 2009 முதல் டிசம்பர் 2013 வரை இராஜஸ்தானின் காவல்துறையின் தலைமை இயக்குநாக பணியாற்றினார்.[2] 1996 ஆம் ஆண்டு இந்திய காவல் பதக்கம் மற்றும் 2002 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.