ஹமா ஆளுநரகம்
ஹமா
مُحافظة حماة Ḥamā | |
---|---|
சிரியாவில் ஹமா ஆளுநரகத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (ஹமா): 35°12′N 37°12′E / 35.2°N 37.2°E | |
நாடு | சிரியா |
தலைநகரம் | ஹமா |
மாவட்டங்கள் | 5 |
அரசு | |
• ஆளுநர் | முகமது அப்துல்லா அல் ஹஸௌரி[சான்று தேவை] |
பரப்பளவு | |
• மொத்தம் | 8,883 km2 (3,430 sq mi) |
Estimates range between 8,844 km² and 8,883 km² | |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 16,28,000 |
• அடர்த்தி | 180/km2 (470/sq mi) |
நேர வலயம் | ஒசநே 2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே 3 (கி.ஐ.கோ.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | SY-HM |
மொழிகள் | அரபு மொழி |
ஹமா கவர்னரேட் (Hama Governorate அரபு மொழி: مُحافظة حما,ة ) என்பது சிரியாவின் 14 ஆளுநரகங்களில் ஒன்றாகும். இது மேற்கு-மத்திய சிரியாவில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தெற்கே இதுலிபு மற்றும் அலெப்போ ஆளுநரகங்கள், மேற்கில் ரக்கா ஆளுநரகம், வடக்கே ஹோம்ஸ் ஆளுநரகம், கிழக்கில் டார்டஸ் மற்றும் அலலாதகியா ஆளுநரகம் ஆகியவை உள்ளன. சர்வதேச எல்லை இல்லாத ஒரே ஆளுநரகம் ( டமாஸ்கஸைத் தவிர ) இதுதான். இதன் பரப்பளவு 8,844 கிமீ 2 முதல் [1] 8,883 கிமீ 2, [2] வரை வேறுபடுகின்றன. இதன் தலைநகரம் ஹமா நகரம் ஆகும்.
வரலாறு
[தொகு]தொல்லியல் தளங்கள்
[தொகு]- அல் குபேஸ் - இடைக்கால கோட்டையகம்
- அபமியா - கிரேகோ-ரோமன் நகரம்
- போர்ஸி கோட்டையகம் - பைசாந்திய கோட்டையகம்
- மஸ்யாஃப் கோட்டையகம் - இடைக்கால கோட்டையகம்
- ஷ்மிஸ் - அய்யூபிட் கோட்டையகம்
- டெல் ஆஷர்னேஷ் - வெண்கல கால தொல்லியல் தளம்
- டெல் கர்கூர் - பண்டைய குடியேற்றம்
நவீன சிரியா
[தொகு]ஹமா வரலாற்று ரீதியாக அசத் ஆட்சிக்கு எதிரான ஒரு மையமாக இருந்து வருகிறது. மேலும் இது 1970 களின் பிற்பகுதியிலிருந்து 1980 களின் முற்பகுதி வரை அரசாங்கத்துக்கு எதிரான எழுச்சியை அடக்கும் விதமாக அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட 1982 ஹமா படுகொலையின் மையமாக இருந்தது. [3] [4]
சிரிய உள்நாட்டுப் போர்
[தொகு]2011 ல் அசாத் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பலவற்றைக் கண்ட நகரங்களில் இந்த நகரமும் ஒன்றாகும். இவற்றை வன்முறையால் அடக்க முற்பட்டது இறுதியில் உள்நாட்டுப் போர் வெடிக்க காரணமாயிற்று. [5] இருந்த போதிலும், மோதலின் ஆரம்ப ஆண்டுகளில் ஆளுநரகத்தின் வடமேற்கில் சில பகுதிகளைத் தவிர்த்து, பெரும்பாலான பகுதிகள் சிரிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆளுநரகத்தின் கிழக்கு பாலைவனப் பகுதிகள் 2016 க்குள் இஸ்லாமிய அரசு ஈராக் மற்றும் லெவண்டின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. [6] ஆனால் 2017 செப்டம்பருக்குள் சிரிய இராணுவம் அவர்களை வெளியேற்றியது.
நிலவியல்
[தொகு]ஆளுநரகத்தின் மேற்கு பகுதிகள் சிரிய கடலோர மலைத்தொடரின் (நுசாயிரியா மலைகள்) உள்ள பகுதியாகும். அவை வடக்கு, தெற்காக நீண்டுள்ளன. [7] கிழக்கே ஏறக்குறைய மலைகளுக்கு இணையாக அல்-காப் சமவெளி உள்ளது. அதன் வழியாக ஓரோண்டஸ் ஆறு பாய்கிறது. ஹமா நகரம் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. [8] ஆளுநரகத்தின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகள் சமவெளியான பாலைவன நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
குடியிருப்புகள்
[தொகு]மாகாண தலைநகரமாக ஹமா நகரம் உள்ளது. மேலும் பிற முக்கிய ஊர்களாக அகாகிர், அல்-ஹம்ரா, அல் கஸ்தால், அல்-சான், அகரிப், சஃபியாக, தம்மசா, இத்ரியா, காஃப்ர் புஹூம், கர்னாஸ், மஹார்தா, மஸ்யாஃப், முராக், கலாத் அல்-மதிக், கஸ்ர் இப்னு வார்டன், சபுரா, துர்க்கியில் ஷேக் ஹிலால், ஷைத்தலுன், சூரன் மற்றும் தயிபட். ஆகியவை உள்ளன.
மாவட்டங்கள்
[தொகு]ஆளுநரகம் ஐந்து மாவட்டங்களாக ( மனாதிக் ) பிரிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மேலும் 22 துணை மாவட்டங்களாக ( நவாஹி ) பிரிக்கப்பட்டுள்ளன:[சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]
|
மக்கள் வகைப்பாடு
[தொகு]2004 சிரிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகையானது 1,385,000 என்று இருந்தது. [1] 2011 ஆண்டைய யு.என்.ஓ.சி.எச்.ஏ மதிப்பீட்டில் 1.628.000 ஆக இருந்தது. இருப்பினும் இது போரின் தொடக்கத்திலிருந்து மாறிவிட்டது. [9]
ஆளுநரகத்தில் சுன்னி முஸ்லிம்கள் 61% , அலவைட்ஸ் (19%), இஸ்மாயிலிகள் (12%), கிறிஸ்தவர் (7%), சியா முஸ்லிம்கள் (1%) உள்ளனர். [10]
காட்சியகம்
[தொகு]-
அபு குபேஸ் கோட்டையகம்
-
சலாமிய்யா
-
மகார்தாவில் ரோமன் பாலம்
-
ஷைசர்
-
ஹமா
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Syria Provinces". www.statoids.com.
- ↑ http://www.citypopulation.de/Syria.html
- ↑ "Syria: Bloody Challenge to Assad". Time. 8 March 1982 இம் மூலத்தில் இருந்து 25 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130825181531/http://www.time.com/time/magazine/article/0,9171,921108,00.html.
- ↑ "Syrian Troops Are Said To Battle Rebels Encircled in Central City". The New York Times. 12 February 1982. https://www.nytimes.com/1982/02/12/world/syrian-troops-are-said-to-battle-rebels-encircled-in-central-city.html.
- ↑ "'Half a million' protest on streets of Hama - Middle East". Al Jazeera English. 8 July 2011. பார்க்கப்பட்ட நாள் 3 August 2011.
- ↑ "Syrian Army begins new offensive to liberate Raqqa". Al-Masdar news. 2 June 2016. Archived from the original on 8 மே 2019. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ Federal Research Division, Library of Congress (2005) "Country Profile: Syria" page 5
- ↑ "Asi-Orontes Basin". Food and Agriculture Organization of the United Nations. 2016. பார்க்கப்பட்ட நாள் 18 March 2018.
- ↑ Syrian Arab Republic - Governorates profile (PDF), UNOCHA, June 2014, பார்க்கப்பட்ட நாள் 20 March 2020
- ↑ Hussain Ibrahim Qutrib (2016), "Useful Syria" and Demographic Changes in Syria (PDF), King Faisal Center for Research and Islamic Studies, பார்க்கப்பட்ட நாள் 20 March 2020