ஷாசியா மன்சூர்
ஷாசியா மன்சூர் | |
---|---|
பிறப்பு | இராவல்பிண்டி, பாக்கித்தான் |
தேசியம் | பாக்கித்தானியர் |
பணி | பாடுதல் |
செயற்பாட்டுக் காலம் | 1992–தற்போது வரை |
ஷாசியா மன்சூர் (Shazia Manzoor) பிரபல பாக்கித்தான் பாடகராவார்.
ஆரம்பகால வாழ்க்கையும், தொழிலும்
[தொகு]பாக்கித்தானில் உள்ள பஞ்சாபின் இராவல்பிண்டியில் ஷாசியா மன்சூர் பிறந்தார். கல்லூரி நிகழ்ச்சிகளில் முதலில் பாட ஆரம்பித்தார். [1] குவாலியர் கரானாவின் (பாடும் பாணி) உஸ்தாத் பெரோஸ் என்பவரிடம் இவர் இசையில் பயிற்சி எடுத்துக் கொண்டார். [2]
இவர் பாக்கித்தானிலும், இந்தியாவிலும், பஞ்சாபி புலம்பெயர்ந்தோர் மத்தியிலும் பிரபலமான பாடகியாக இருக்கிறார். இவர், பெரும்பாலும் பஞ்சாபி இசையை பாடுகிறார். இவர் பல்வேறு பஞ்சாபி நாட்டுப்புற பாடல்களையும் பஞ்சாபி சூஃபி கவிதைகளையும் பாடினார். இவர், சில சமயங்களில் உருது பாடல்களையும் பாடுகிறார்.
இவரது பிரபலமான பாடல்களில் சில:
2010இல் பாக்கித்தானில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில தொண்டு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி நிதி திரட்டினார்.[3] சிலே ஹுமாவுடன் சேர்ந்து பாடகியும் நடிகையுமான நூர்ஜஹானுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பேட்டியில் தன்னை 1992 ஆம் ஆண்டில் பிரபல நகைச்சுவை நடிகர் உமர் செரீப் தன்னை அறிமுகப்படுத்தியதாக குறிப்பிட்டார். [3][4]
இவர் பாக்கித்தானின் தொலைக்காட்சித் தொடரான கோக் ஸ்டுடியோவில் (2015 பருவம் 8 ) ஒரு சிறப்பு கலைஞராக இருந்தார். இவர் இலண்டனில் உள்ள பிபிசி பில்ஹார்மோனிக் இசைக்குழுவிலும் நிகழ்த்தியுள்ளார். [1]
திரைப்படப் பின்னணி பாடகர்
[தொகு]பால் தோ பால் (1999 திரைப்படம்), இஷ்க் குடா (2013) உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் பாடல்களை பாடியுள்ளார். 2003 வணிக ரீதியாக வெற்றிகரமான படத்தில் இவர் பாடியது பொதுமக்களால் பரவலாகப் பாராட்டப்பட்டது. .[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Profile of Shazia Manzoor on Coke Studio (Pakistan) website Retrieved 10 May 2020
- ↑ "Shazia Manzoor applies her talents to charity". The Express Tribune (newspaper). 22 October 2010. https://tribune.com.pk/story/65929/shazia-manzoor-applies-her-talents-to-charity/. பார்த்த நாள்: 10 May 2020.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Shazia Manzoor applies her talents to charity". The Express Tribune (newspaper). 22 October 2010. https://tribune.com.pk/story/65929/shazia-manzoor-applies-her-talents-to-charity/. பார்த்த நாள்: 10 May 2020.
- ↑ Shazia Manzoor on BBC News website Retrieved 10 May 2020
- ↑ Shazia Manzoor sings for film Ishq Khuda (2013) on Dawn (newspaper) newspaper Published 14 August 2013. Retrieved 10 May 2020
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஷாசியா மன்சூர் , Filmography of Shazia Manzoor