வேர்ல்டு சயின்டிபிக்
துவங்கப்பட்டது | 1981 |
---|---|
நாடு | சிங்கப்பூர் |
வெளியிடும் வகைகள் | புத்தகங்கள், கல்வி இதழ்கள் |
அதிகாரப்பூர்வ இணைத்தளம் | www |
வேர்ல்டு சயின்டிபிக் கோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டுள்ளது. இந்நிறுவனம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ (STM) புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது. இந்நிறுவனம் பல்வேறு துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 புத்தகங்கள் மற்றும் 125 பத்திரிகைளை வெளியிடுகிறது.[1]
பெருநிறுவன விவகாரங்கள்
[தொகு]இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் உள்ளது.[2] 200 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தலைமை அலுவலகத்தில் வேலை செய்துவருகிறர்கள். இந்நிறுவனத்தின் அலுவலகங்கள் சிட்னி, ஆஸ்திரேலியா, சீனா, ஹாங்காங், சென்னை-இந்தியா, தைபே, தைவான் (சீன குடியரசு) மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ளது. சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய், மற்றும் தியான்ஜின் ஆகிய இடங்களில் இந்நிறுவனம் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.[3] அமெரிக்காவில் கலிபோர்னியா மற்றும் ஹேக்கன்சேக் (நியூ ஜெர்சி) ஆகிய இடங்களில் அலுவலகங்களை கொண்டுள்ளது.[2][3]
குறிப்புகள்
[தொகு]- ↑ World Scientific Corporate Profile
- ↑ 2.0 2.1 "Contact Us." World Scientific. Retrieved on 10 November 2012. "World Scientific Publishing Co. Pte. Ltd. 5 Toh Tuck Link, Singapore 596224"
- ↑ 3.0 3.1 "Corporate Profile." World Scientific. Retrieved on 10 November 2012.