வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | 1936, சூன் 16 |
சுருக்கம் | நிலப்பரப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தி |
இடம் | "லிகெச்டேன்", கைலீஸ்டத், நோர்வே 61°09′25″N 5°09′50″E / 61.1569°N 5.1639°E |
பயணிகள் | 3 |
ஊழியர் | 4 |
உயிரிழப்புகள் | 7 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | ஜங்கர்ஸ் யூ 52 |
இயக்கம் | 'நோர்வேஜியன் ஏர்லைன்ஸ்' |
வானூர்தி பதிவு | LN-DAE |
பறப்பு புறப்பாடு | பேர்கன் |
சேருமிடம் | 'திரோம்சோ' |
வெள்ளை வால் கழுகு வானூர்தி விபத்து (Havørn Accident) (நோர்வே மொழி:Havørn-ulykken) ஒரு வானூர்தி விபத்தாகிய இது, 1936 ஆம் ஆண்டு, சூன் 16 இல், "ஜங்கர்ஸ் யூ 52" (Junkers Ju 52) வகையை சார்ந்த வானூர்தி ஒன்று நோர்வேயின் ஒரு மூடுபனி மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. 'நோர்வேஜியன் ஏர்லைன்ஸ்' (Norwegian Air Lines) (பதிவு எண்:LN-DAE) நிறுவனம் இயக்கிய இவ்வானூர்தி, நோர்வேயின் இரண்டாவது பெரிய நகரமான பேர்கன் நகரிலிருந்து 'திரோம்சோ' (Tromsø) நகருக்கு தொடர்ப் போக்குவரத்து சேவையை வழங்கிவந்தது.[1]
நிகழ்விடம்
[தொகு]ஐரோப்பாவின் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நோர்வே நாட்டில் "சோகன் ஒக் பிஜோர்டனே" (Sogn og Fjordane) எனும் நகராட்சிக்கு உட்பட்ட "லிகெச்டேன்" (Lihesten) பிராந்தியத்தில் உள்ள, கைலீஸ்டத் (Hyllestad) கிராமத்திலிருந்து கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் அமைந்துள்ள மூடுபனி மலைப் பகுதியில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.[2]
உயிரிழப்புகள்
[தொகு]நோர்வேயின், முதல் அபாயகரமான போக்குவரத்து வானூர்தி விபத்தாக கருதப்படும் இவ்விபத்து, விமானிகள் இணையாகத் திட்டமிட்டுப் பறக்க தவறியதால், கிழக்கில் மேலும் 15-முதல் 20 கிலோமீட்டர் (9.3 12.4 மைல் வரை) பறக்க உடனடியாக நிலப்பரப்புக்கு கட்டுப்படுத்தப்பட்ட (controlled flight into terrain (CFIT) இந்த வானூர்தி விபத்தில், சேவைப் பணியாளர்கள் நால்வரும், பயணிகள் மூவரும், மொத்தமாக 7 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியாயினர்.[3]
உசாத்துணை
[தொகு]- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) - 1996–2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-31.
- ↑ "Tag Archives: Havørn Accident". travelmuch.net (ஆங்கிலம்). SEP 8 2015. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "ACCIDENT DETAILS". www.planecrashinfo.com (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-09-02.