வெள்ளை இயக்கம்
Appearance
வெள்ளை இயக்கம் (White movement, உருசியம்: Бѣлое движенiе/Белое движение, ஒ.பெ Beloye dvizheniye, பஒஅ: [ˈbʲeləjə dvʲɪˈʐɛnʲɪjə]) மற்றும் அதன் படைப்பிரிவு வெண்சேனை (Бѣлая Армiя/Белая Армия, Belaya Armiya), அல்லது வெண் காவலர்கள் (Бѣлая Гвардiя/Белая Гвардия, Belaya Gvardiya) உருசிய உள்நாட்டுப் போரில் (1917–1922/3) போல்செவிக்களுடன் போராடிய பொதுவுடமைக்கு எதிரான கூட்டமைப்பாகும். படைசார் அமைப்புக்களாக இவை உருசிய எல்லைக்குள்ளும் வெளியேயும் இரண்டாம் உலகப் போர் வரை இயங்கி வந்தன. சில எஞ்சியவர்கள் புலம்பெயர் உருசியர்களின் மிகுந்த குறைவான ஆதரவுடன் பொதுவுடமைக் கட்சியின் வீழ்ச்சிவரை தங்கள் எதிர்ப்பைத் தொடர்ந்தனர்.