வெள்ளிக்கெண்டை மீன்
வெள்ளிக் கெண்டை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. molitrix
|
இருசொற் பெயரீடு | |
Hypophthalmichthys molitrix (Valenciennes, 1844) |
வெள்ளிக்கெண்டை மீன் (silver carp) சீன நாட்டைச் சேர்ந்த கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும்.[1] இது ஒரு நன்னீர் மீன். இது சுவை மிகுந்த மீனாகும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.
தோற்றம்
[தொகு]இது வெள்ளி போன்று, பளிச்சிடும் வெண்மை நிறம் கொண்டது. இம்மீனின் வாய் மேல் நோக்கி அமைந்திருக்கும்.
உணவுப் பழக்கம்
[தொகு]இது குளத்தின் மேல் மட்டத்தில் உள்ள, தாவர நுண்ணுயிர்களை மட்டுமே சலித்து உண்டு வளர்வதால் இவை கடலா மீனுடன் உணவுக்கு போட்டி போடுவதில்லை. இவை கடலா மீனைவிட வேகமாக வளர்கவை. இது ஓர் ஆண்டில் 1.5 முதல் 2 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.[2]
இனப்பெருக்க காலம்
[தொகு]இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இயற்கை சூழ்நிலையில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையிலும் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.[3]
தமிழ்நாட்டில் இறக்குமதி
[தொகு]இந்த மீன்கள் தமிழக மீன்வளத்துறையால் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1959 இல் சீனாவிலிருந்து, இறக்குமதி செய்யப்பட்டது.[4]
உசாத்துணை
[தொகு]- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Hypophthalmichthys molitrix" in FishBase. April 2006 version.
- ↑ http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_carps_ta.html
- ↑ காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக் கட்டுரை
- ↑ என்.சுவாமிநாதன் (29 ஏப்ரல் 2018). "காலம் மறைத்த இரண்டாவது அமைச்சர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 மே 2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help)