வெபர்
வெபர் Weber | |
---|---|
அலகு முறைமை | அனைத்துலக முறை அலகுகள் வழி அலகு |
குறியீடு | Wb |
பெயரிடப்பட்டது | வில்லெம் எடுவர்டு வெபர் |
அனைத்துலக முறை அலகுகள் அடிப்படை அலகு : | கிகி⋅மீ2⋅ நொ−2⋅ஆம்−1 kg ⋅m2⋅s−2⋅A−1 |
இயற்பியலில் வெபர் அல்லது வேபர் என்பது காந்தப் பாயத்தை அளக்கப் பயன்படும் அனைத்துலக முறை அலகு. இதன் குறியீடு Wb. ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு வெபர் ()வெப/மீ2 காந்தப்பாயம் இருந்தால் அது ஒரு தெசுலா காந்தப்பாய அடர்த்தி ஆகும்.
வெபர் என்னும் இந்தக் காந்தப்பாய அலகு இடாய்ச்சுலாந்தைச் சேர்ந்த இயற்பியலாளரான வில்லெம் எடுவர்டு வெபர் (1804–1891) என்பாரின் பெயரால் உருவாக்கப்பட்டது.
வரையறை
[தொகு]வெபர் என்பதை பாரடே தூண்டல் விதிகளின் அடிப்படையில் வரையறை செய்யலாம். ஒரு மின்கடத்தி வளையத்தின் ஊடே பாயும் காந்தப்பாயத்தின் அளவு மாறினால் அதனால் வளையத்தில் மின்னழுத்தப் புலம் தூண்டப்படும். ஒரு நொடியில் ஒரு வெபர் காந்தப்பாயம் ஒரு வளையத்தில் மாறினால் அந்த வளையத்தின் திறந்த மின்சுற்றில் மின்னியக்கவிசையால் மின்னழுத்த வேறுபாடாக ஒரு வோல்ட்டு மின்னழுத்தம் தூண்டப்படும்.
முறையான வரையறையில் படி,
Weber (unit of magnetic flux) — The weber is the magnetic flux that, linking a circuit of one turn, would produce in it an electromotive force of 1 volt if it were reduced to zero at a uniform rate in 1 second.[1]
இதன் தமிழாக்கம்: வெபர் (காந்தப் பாய அலகு) - வெபர் என்பது ஒரு சுற்றுடைய (one turn) மின்சுற்றாகிய ஒரு வளையத்தினூடாக இணைக்கப்படும் காந்தப் பாயம் சீராக ஒரு நொடியில் சுழியக் காந்தப்பாயமாக குறைந்து மின்னியக்க விசையால் ஒரு வோல்ட்டு மின்னழுத்தம் தூண்டப்பட்டால் அந்தக் காந்தப்பாயம் ஆகும்.
வெபர் என்னும் காந்தப்பாயம் பல்வேறு அலகுகளின் வழியாகவும் குறிக்கப்பெறும்:
இதில்
Wb = வெபர்,
V = வோல்ட்டு,
T = தெசுலா,
J = சூல்,
m = மீட்டர்,
s = நொடி,
A = ஆம்பியர்,
H = என்றி,
Mx = மாக்சுவல்.
இது வில்லெம் எடுவர்டு வெபர் என்பாரின் பெயரால் வழங்கும் அனைத்துலக முறை அலகுகளைச்சேர்ந்த அலகு ( SI unit). எல்லா எசு. ஐ (SI) அலகுகளைப் போலவும் ஒருவரின் பெயரால் வழகும் அலகுகளின் குறியீடு ஆங்கில எழுத்தில் முதலெழுத்து பெரிய எழுத்தாக இருக்கும், ஆனால் ஆங்கிலத்தில் அலகின் பெயரைக் குறிப்பிடும்பொழுது சிறிய எழுத்தில் எழுதப்படும். இவ்விதி தமிழில் வழங்கவியலாது.
வரலாறு
[தொகு]1861 இல் பிரித்தானிய அறிவியல் வளர்ச்சிக் குழுமம் (British Association for the Advancement of Science) "[2]) வில்லியம் தாம்சன் (பிற்காலத்தில் இலார்டு கெல்வின்) என்பாரின் கீழ் மின் அலகுகளை அறிந்து அலச ஒரு குழு அமைத்தது [3] பிப்பிரவரி 1902 ஆண்டு கைப்படியில் (manuscript), ஆலிவர் ஃகெவிசைடு(Oliver Heaviside), கியோவன்னி கியோர்கி (Giovanni Giorgi) ஆகியோர் தங்கள் கையெழுத்தில் எழுதிய குறிப்புகளுடன் முன்மொழிவுகள் இட்டனர். இவற்றுள் வெபர் உடபட காரண அடிப்படையிலான மின்காந்த அலகுகளைப் பரிந்துரைத்தனர்[4]
அனைத்துலக மின்தொழினுட்ப ஆணையம் (International Electrotechnical Commission) 1909 இல் கலைச்சொற்கள் பற்றிய பணியைத் தொடங்கியது. 1911 இல் தொழினுட்பக்குழு -1 ஐ நிறுவியது. இதுவே ஆகப்பழைய குழு [5] "to sanction the terms and definitions used in the different electrotechnical fields and to determine the equivalence of the terms used in the different languages."[6]
1927 வரை தொழினுட்பக்குழு-1 (TC1) மின்னிய காந்தவிய அளவுகள் பற்றியும் அலகுகளும் பற்றியும் எதிர்கொள்ளவில்லை. கருத்திய கலந்துரையாடல்களின் வழி புகழ்பெற்ற இயற்பியலாளர்களும் மின்னியல் பொறியாளர்களும் காந்தப்புல வலுவும் காந்தப் பாயமும் ஒன்றேதானா என்று கருதினார்கள். கருத்துவேறுபாடுகள் நீடிக்கவே, அனைத்துலக மின் தொழினுட்பக்குழு (IEC) நிலைமையைச் சீர்செய்ய முனைந்தது.அடுத்தக் கூட்டத்தில் தீர்வு எய்த அணியமாக இருக்க ஒரு செயற்பாட்டுக் குழு ஒன்றை அமைத்தது.[7]
1930 இல், தொழினுட்பக்குழு-1 கீழ்க்காணுமாறு முடிவு செய்தது. காந்தப்புல அடர்த்தி (H) என்பது காந்தப்பாய அடர்த்தி என்பதில் இருந்து வேறானது. இவற்றுக்கான பெயர்களையும் தொடர்பான தொகுக்கப்பட்ட காந்தப்பாய அடர்த்தி (B) ஆகியவற்றின் பெயர்களையும் முடிவு செய்ய முன்வந்தது. ,[7] a.[சான்று தேவை]
1935 இல், தொழினுட்பக் குழு-1 செயல்முறைக்கு உகந்த காந்தப் பாய அலகாக வெபர் உட்பட பல மின் அலகுகளுக்குப் பெயர்கள் பரிந்துரைத்தது. செ.மீ-கிராம்-நொடி முறையாகிய CGS முறையில் பயன்படும் மாக்சுவல் அலகின் பெயரையும் பரிந்துரைத்தது[7][8]
It was decided to extend the existing series of practical units into a complete comprehensive system of physical units, the recommendation being adopted in 1935 "that the system with four fundamental units proposed by Professor Giorgi be adopted subject to the fourth fundamental unit being eventually selected". This system was given the designation of "Giorgi system".[9]
மேலும் இல் 1935, தொழினுட்பக்குழு (TC1) மின்னியல் காந்தவியல் பரும அளவுகளுக்கும் அலகுகளௌக்குமான பொறுப்பை புதிய தொழினுட்பக்குழு 24 (TC24)-க்கு மாற்றியது. இந்நகர்வு கடைசியில் கியோர்கி முறையை உலக அளவில் செயலேற்பு பெற வழிவகுத்தது.இது மின்காந்த அலகுகளை எம்.கே.எசு (MKS) என்னும் மீட்டர்-கிலோகிராம்-நொடி முறையுடன் ஒன்றச்செய்தது. இப்பொழுது இது அனைத்துலக முறை அலகுகள் (SI system (Système International d’unités) முறை என அறியப்படுகின்றது.[10]
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]- ↑ "CIPM, 1946: Resolution 2 / Definitions of Electrical Units". International Committee for Weights and Measures (CIPM) Resolutions. International Bureau of Weights and Measures (BIPM). 1946. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
- ↑ "The BA (British Association for the Advancement of Science)".
- ↑ Frary, Mark. "In the beginning...The world of electricity: 1820-1904". International Electrotechnical Commission. Archived from the original on 2018-04-18. பார்க்கப்பட்ட நாள் 2018-04-19.
- ↑ Giorgi, Giovanni (February 1902). "Rational Units of Electromagnetism". p. 9. Archived from the original (Manuscript with handwritten notes by Oliver Heaviside) on 2019-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-02-21.
- ↑ "Strategic Policy Statement, IEC Technical Committee on Terminology" (PDF). International Electrotechnical Commission. Archived from the original (PDF) on 2006-09-04. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.
- ↑ "IEC Technical Committee 1". International Electrotechnical Commission. பார்க்கப்பட்ட நாள் 2018-04-19.
- ↑ 7.0 7.1 7.2 "The role of the IEC / Work on quantities and units". History of the SI. International Electrotechnical Commission. Archived from the original on 2007-06-11. பார்க்கப்பட்ட நாள் 2018-04-19.
- ↑ "Summary: Electrical Units". IEC History. International Electrotechnical Commission. Archived from the original on 2018-04-20. பார்க்கப்பட்ட நாள் 2018-04-19.
- This page incorrectly states that the units were established in 1930, since that year, TC 1 decided "that the question of names to be allocated to magnetic units should not be considered until general agreement had been reached on their definitions" [1] பரணிடப்பட்டது 2007-06-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Ruppert, Louis (1956). Brief History of the International Electrotechnical Commission (PDF). International Electrotechnical Commission. p. 5. Archived from the original (PDF) on 2016-12-24. பார்க்கப்பட்ட நாள் 2018-04-19.
- ↑ Raeburn, Anthony. "Overview: IEC technical committee creation: the first half-century (1906-1949)". International Electrotechnical Commission. பார்க்கப்பட்ட நாள் 2018-04-19.[தொடர்பிழந்த இணைப்பு]