உள்ளடக்கத்துக்குச் செல்

விருத்திராசூரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விருத்திராசூரன், தைத்திய குலத்தைச் சார்ந்த பிரஜாபதி துவஷ்டாவின் இரண்டாம் மகன். இந்திரனை வென்று தேவலோகத்தை கைப்பற்றி ஆண்டவன். தேவர்களின் பகைவன். இந்திரன், ததீசி முனிவரின் முதுகெலும்பை வஜ்ஜிராயுதமாகக் கொண்டு விருத்திராசூரனை கொன்றான்.

புராண வரலாறு

[தொகு]

தேவலோகத்தை விட்டு சிறிது காலம் விலகிய தேவகுரு பிரகஸ்பதியின் பணியினை செய்ய, பிரஜாபதி துவஷ்டாவின் மகன் விசுவரூபனை தற்காலிக குருவாக நியமித்தார் இந்திரன். யாகத்தின் போது ஆஹூதிகளை தேவர்களுக்கு வழங்கியதுடன், தன் இனத்தை சேர்ந்த தைத்தியர்களுக்கும் விஸ்வரூபன் வழங்கியதைக் கண்ட இந்திரன், விஸ்வரூபனை கொன்றார். இதனால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோசம் பற்றிக் கொண்டது. விஸ்வரூபன், இந்திரனால் கொல்லப்பட்ட செய்தி அறிந்த துவஷ்டா கடும் கோபம் கொண்டு இந்திரனை அழிக்க, யாகம் மூலம் விருத்திராசூரன் என்ற மகனை பெற்றான். சுக்கிராச்சாரியின் சீடனான விருத்திராசூரனும் கடும் தவம் செய்து, யாரும் அறிந்த போர்க் கருவிகளால் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றான். தன் அண்ணன் விஸ்வரூபனை கொன்ற இந்திரனை வென்று, இந்திரலோகத்தையும் ஐராவதத்ததையும் தன் கைவசப்படுத்தினான்.

விருத்திராசூரனிடம் தோற்ற இந்திரன், திருமாலிடம் சென்று நடந்தவற்றை உரைத்தான். திருமால், தசிசீ முனிவரின் முதுகெலும்பை வஜ்ஜிராயுதமாகக் கொண்டு விருத்திராசூரனை கொல்வாய் என ஆலோசனை வழங்க, இந்திரனும் அவ்வாறே வஜ்ஜிராயுதத்தினால் விருத்திராசூரனை கொன்றான்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. விருத்திரன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விருத்திராசூரன்&oldid=4056282" இலிருந்து மீள்விக்கப்பட்டது