உள்ளடக்கத்துக்குச் செல்

வியட்நாம் தொலைக்காட்சி (1966–75)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்நாம் தொலைக்காட்சி (1966–75)
ஒளிபரப்பு தொடக்கம் 1966
ஒளிபரப்பு நிறுத்த நாள் 1975
உரிமையாளர் வானொலி தொலைக்காட்சி பொது ஒலிபரப்பல் மையம்
வியட்நாம் குடியரசு அரசு
நாடு  தெற்கு வியட்நாம்
ஒளிபரப்பாகும் நாடுகள் உள்நாடு
தலைமையகம் 9 கோங் தாப் தூ தெரு, சாய்கோன்
மாற்றாக HTV (மே 1975)
கிடைக்ககூடிய தன்மை
புவிக்குரிய
காற்றில் ஒப்புமை அலைவரிசை 9

வியட்நாம் தொலைக்காட்சி (Vietnam Television, வியட்நாமியம்: Đài Truyền hình Việt Nam, சுருக்கமாக, THVN[1]), அல்லது சாய்கோன் தொலைக்காட்சி (Saigon Television) (Đài Truyền hình Sài Gòn) அல்லது அலைவரிசை 9 (Đài số 9) என்பது தென்வியட்நாமின் இரு தேசிய தொலைக்காட்சி நிலையங்களில் ஒன்றாகும். இது 1966 பிப்ரவரி 7 இல் இருந்து 1975 ஏப்பிரல் 29 இல் சாய்கோனின் வீழ்ச்சி வரை செயல்பட்டது. இது வியட்நாமின் முதல் தொலைக்காட்சி நிலையம் ஆகும்.[2] இது வியட்நாமியத் தொலைக்காட்சி(Nha Vô tuyến Truyền hình Việt Nam) வாரியத்தால் நடத்தப்பட்டது. இது வானொலி, தொலைக்காட்சித் துறையின் (Tổng cục Truyền thanh, Truyền hình và Điện ảnh) பகுதியாகும். இது பரப்புரை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டது.[3] வியட்நாம் தொலைக்காட்சி தலைநகர் சாய்கோனில் இருந்து அலைவரிசை 9 இல் 4.5;MHz) இல் செந்தர வெள்ளை-கருப்பில் ஒளிப்புகிறது.[2][4] மற்றொரு தொலைக்காட்சி நிலையம், ஆங்கிலத்தில் அமெரிக்கப் படைகளுக்காக அமைந்த NWB-TV ஆகும் இது அலைவரிசை 11 இல் இயங்கியது.[5] இரண்டு அலைவரிசைகளும் காற்றூடகத்தில் இயங்கின.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Vietnam Cultural Profile: Television
  2. 2.0 2.1 Tấn Đức (2008-12-15). "Buổi phát sóng truyền hình đầu tiên ở Việt Nam [The first television broadcast in Vietnam]" (in Vietnamese). E-info இம் மூலத்தில் இருந்து 2014-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140502000756/http://e-info.vn/vn/index.php/truyen-hinh/32464-buổi-phát-sóng-truyền-hình-đầu-tiên-ở-việt-nam.html. 
  3. "THVN9". Archived from the original on 2013-04-13. பார்க்கப்பட்ட நாள் 2016-12-31.
  4. Hà Đình Nguyên (2005-04-28). "‘Đây là Đài Truyền hình Sài Gòn giải phóng...’" (in Vietnamese). Thanh Niên (Ho Chi Minh City: Vietnam United Youth League). http://www.thanhnien.com.vn/news/pages/200517/108498.aspx. பார்த்த நாள்: 2013-08-15. 
  5. Williams, Billy. "Television in Vietnam". Broadcasting in Vietnam During the War. Archived from the original on 2010-03-28.