வலைவாசல்:இயற்பியல்/சிறப்புப் படங்கள்
சிறப்புப் படங்கள் .. பெட்டகம்
[தொகு]இங்கு உங்கள் பரிந்துரைகளைத் தரலாம்.
"மின்பொறி விளக்குகள் " (Arc lamp) அல்லது "வில் விளக்குகள்" என்பவை மின்பொறி (அல்லது மின்னழுத்த வில்) கொண்டு ஒளி உமிழும் விளக்கு வகைகளாகும். இந்த விளக்குகளில் இரு மின்வாயிகள் இடையே வளிமம் நிரப்பப்பட்டு பிரிக்கப்பட்டிருக்கும். இந்த மின்வாயிகள் துவக்க காலங்களில் கரிமத்தால் ஆனவையாக இருந்தன. தற்காலங்களில் டங்க்ஸ்டனால் செய்யப்படுகின்றன. இந்த மின்வாயிகள் மூலம் மின்னழுத்தம் கொடுக்கப்படும்போது வளிமத்தின் குறைகடத்தி பண்பு உடைபட்டு மின்பொறி பிறக்கிறது. இதன்மூலம் மின்சார ஓட்டம் நிகழ்கிறது. அடைக்கப்பட்ட வளிமத்தின் பண்புக்கேற்ப இந்த உடைதலின்போது வெவ்வேறு வண்ண ஒளி உமிழப்படுகிறது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில்(conjunction) இருந்தால் சூரிய கிரகணம் (Solar Eclipse) ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். முதலாவது முழு சூரிய கிரகணம் என்றும் பின்னர் கூறப்பட்டது பகுதி சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது. புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும்; இதில் இரண்டு கிரகணங்கள் வரை முழு சூரிய கிரகணங்களாக அமையலாம் -- சில ஆண்டுகள் முழு கிரகணம் ஒன்று கூட ஏற்படாமலும் போகலாம்.
"மின்னல் " என்பது மழைக் காலங்களில் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப்பறிக்கும் ஒளிவீச்சோடு, கோடுகளாய் வானில் கிளைத்து நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். மின்னலோடு கூட பேரொலியாய் இடி இடிப்பதையும் கேட்கலாம். மழை மேகங்கள் (முகில்கள்) தமக்குள் இருக்கும் அணுக்கள் பல வழிகளிலும் உராய்ந்தோ பிறவாறோ மின்னூட்டம் பெற்று விடுகின்றன. மின்னூட்டம் பெறும் வழிபாடுகள் எல்லாம் முற்றிலுமாய் அறியப்படவில்லை. ஆனால் இப்படி மின்னூட்டம் பெற்று அது அதிகமாகிவரும் பொழுது, எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும் பொழுது, மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது மின்பொறியாய் (தீப்பொறி போல) ஒளிவிடுகின்றது.
] |
அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் (Nuclear and radiation accidents) என்பவை மக்கள், சுற்றுச்சூழல் அல்லது அணுவுலை மற்றும் கதிரியக்க மையம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் விளைவுகள் (கதிரியக்க நச்சேற்றம்), சுற்றுச்சூழலில் பெருமளவு கதிரியக்கத்தை வெளியிடல், அணு உலையின் நடுப்பகுதி எதிர்பாராத விதத்தில் உருகுதல் ஆகியவற்றை இத்தகு விபத்துகளுக்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.
|
|||
|
|||
கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம் (Cryogenic rocket engine) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.அதிக எடையுடைய செயற்கைக் கோள்களையும், செலுத்து வாகனத்தையும் விண்வெளியில் அதிக உயரத்தில் செலுத்த இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இவ்வியந்திரத்தில் கடுங்குளிரில் உள்ள ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் வளிமங்கள் எரிபொருளாகப் பயன்படுகின்றன.
எக்சு-கதிர்க் குழாய் (X-ray tube) என்பது எக்சு-கதிர்களைத் தோற்றுவிக்கும் ஒரு வெற்றிடக் குழாய் ஆகும். இவை எக்சு-கதிர்க் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின்காந்த நிழற்பட்டையின் ஒரு பகுதியான எக்சு-கதிர்கள், புற ஊதாக் கதிர் ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. எக்சு-கதிர்க் குழாய்கள் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவிகள், வானூர்தி நிலையங்களில் உள்ள பொதி வருடிகள், எக்சு-கதிர்ப் படிகவியல், மற்றும் தொழிற்துறைப் பொருள் கண்காணிப்பு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன.