உள்ளடக்கத்துக்குச் செல்

வரி மார்பு கருங்காடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரி மார்பு கருங்காடை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தர்னிக்சு
இனம்:
த. சுசிடேட்டர்
இருசொற் பெயரீடு
தர்னிக்சு சுசிடேட்டர்
ஜெமிலின், 1789

வரி மார்பு கருங்காடை (Barred buttonquail)(தர்னிக்சு சுசிடேட்டர் ) என்பது கருங்காடை சிற்றினமாகும். இது உண்மையான காடை போன்ற, ஆனால் தொடர்பில்லாத பறவை குடும்பத்தினைச் சார்ந்த சிறிய பறவையாகும். இந்த சிற்றினம் இந்தியாவிலிருந்து வெப்பமண்டல ஆசியா முழுவதும் தெற்கு சீனா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சு வரை வாழ்கிறது.

தாத்ரி, உத்தரபிரதேசம், இந்தியாவில்

விளக்கம்

[தொகு]
தைகூர் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் பறவை

பொதுவான சிறிய கருங்காடை, செம்-பழுப்பு, துருப்பிடித்த நிறத்திலும், அடிப்பகுதி, கன்னம், தொண்டை மற்றும் மார்பகம் கருப்பு நிறத்துடன் நெருக்கமான பட்டைகளுடன் காணப்படுகின்றது. பெண் பறவையின் தொண்டை மற்றும் மார்பகத்தின் நடுப்பகுதி கருப்பு நிறத்துடன் காணப்படும். நீல-சாம்பல் நிறத்தில் அலகு மற்றும் கால்கள் காணப்படும். கண்கள் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்துடன் காணப்படும். காலில் கட்டைவிரல் இல்லாதது இக்காடையினை உண்மையான காடைகளிலிருந்து வேறுபடுத்துகிறது. இணையாகப் புதர் மற்றும் புல்வெளியில் காணப்படும். இதன் ஓசை இயந்திர வாகன ஓசையான டூர்ர்ர்ர்ர் மற்றும் கூன்-கூன்-கூன் என உரத்த ஓசையாக இருக்கும்.[சான்று தேவை]

பரம்பலும், வாழிடமும்

[தொகு]
தூசி குளியல்

இந்தியா முழுமையும், இமயமலைப் பகுதியில் சுமார் 2500 மீ உயரம் வரையும், இலங்கை, வங்காளதேசம், மியான்மர், இந்தோனேசியா, பிலிப்பீன்சு மற்றும் தென்கிழக்காசியா வரை இந்த சிற்றினம் காணப்படுகிறது. நிறத்தில் சற்றே வேறுபடும் நான்கு சிற்றினங்கள் வேறுபட்ட புவியியல் பகுதிகளில் அறியப்பட்டுள்ளன.[2] அடர்ந்த காடு மற்றும் பாலைவனம் தவிர பெரும்பாலான வாழிடங்களில் இது காணப்படுகிறது. குறிப்பாக, புதர்க்காடுகள், இலையுதிர் காடுகள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பலபகுதிகளில் இவை காணப்படுகின்றன.

உள்ளூர் பெயர்கள்

[தொகு]

தெற்காசியாவிற்குள், உள்ளூர் பெயர்கள் பலவற்றால் இந்தக்காடைகள் அறியப்படுகிறது. அவை: சன்சோராய் (அசாம்); தாடூமா (கசார் மாவட்டம்); இன்ருய்புமா (கச்ச நாகா); வோபுபம் (குகி); சிமோக்போ (லெப்சா); லினிஸ்க் (பூட்டியா); குலு, குந்த்ரா, குண்ட்லு, சலுய் குந்த்ரா (இந்தி); குலு (வங்காளம்); கலடா - ஆண், தூய - பெண் (தெலுங்கு); ஆண்காடை - ஆண், குறுங்கடை - பெண் (தமிழ்); துர்வா (இரத்தினகிரி); கரேசக்கி (கன்னடம்); பாலா வடுவா (இலங்கை).[3]

இனப்பெருக்கம்

[தொகு]
எஸ்எஸ்பி பவேலி

இந்தக் காடைகள் உண்மையான காடைகளில் பெண் காடை பலதார உறவின் காரணமாக வேறுபடுகின்றன.[3] பெண் காடை பிரகாசமானவை. இணை சேரும் ஆவலை பெண் காடை தரையில் கூடு அமைப்பதன் மூலம் சேவலுக்குத் தெரிவிக்கின்றது. முட்டைகளை ஆண் அடைகாக்கின்றது. முட்டையிலிருந்து பொரித்தவுடன் குஞ்சுகள் ஓடும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இனப்பெருக்கம் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றது. கூடுகளில் ஒரு தடவை 3 அல்லது 4 சாம்பல் கலந்த வெள்ளை முட்டைகளை இடும். இம்முட்டையில் சிவப்பு கலந்த பழுப்பு அல்லது கருப்பு ஊதா புள்ளிகள் கொண்டது.

பாதுகாப்பு

[தொகு]

இதன் அதிக அளவிலான பரவல் காரணமாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாக மதிப்பிடப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Turnix suscitator". IUCN Red List of Threatened Species 2016: e.T22680549A92865610. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680549A92865610.en. https://www.iucnredlist.org/species/22680549/92865610. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Turnix suscitator (barred buttonquail)". Animal Diversity Web (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-01-22.
  3. 3.0 3.1 Ali, Salim; J C Daniel (1983). The book of Indian Birds, Twelfth Centenary edition. New Delhi: Bombay Natural History Society/Oxford University Press.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரி_மார்பு_கருங்காடை&oldid=3769671" இலிருந்து மீள்விக்கப்பட்டது