வயல் தாவி
Dark small-branded swift | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | P. mathias
|
இருசொற் பெயரீடு | |
Pelopidas mathias (Fabricius, 1798) | |
வேறு பெயர்கள் | |
|
வயல் துள்ளி அல்லது வயல் தாவி (Pelopidas mathias) என்பது தாவிகள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பட்டாம்பூச்சி ஆகும். இவை தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியாவில் பிலிப்பீன்சுவரை காணப்படுகின்றன. மேலும் இவை வெப்பமண்டல ஆபிரிக்காவிலும் அரேபியாவிலும் உள்ளன.
இதன் தோற்றுவளரி (லார்வா) நெற்பயிர், கரும்பு போன்ற புல் வகைத் தாவரங்களின் தோகையை அரித்து உண்ணக்கூடியன. அதன் காரணமாகத்தான் தமிழில் 'வயல் துள்ளி' என அழைக்கப்படுகிறன்றன.
விளக்கம்
[தொகு]இவை பொதுவாக பழுப்பு நிறத்திலும், கீழ்ப்புறம் வெளிறியும் காணப்படும். கீழ் இறக்கையின் பின் பக்கத்தில் அரை வட்ட வடிவில் ஏழு அல்லது எட்டு வெள்ளைப் புள்ளிகளால் இந்தத் தாவியை சட்டென்று அடையாளம் காணலாம். மேல் இறக்கையிலும் புள்ளிகள் காணப்படும். இவை பெரும்பாலும் சமவெளிப் பகுதிகளில் தென்படக் கூடியன. அதிவேகமாகப் பறக்கும் இந்தத் தாவிகள் பயிர்கள், புல்வெளிகளில் அதிகம் காணப்படும். இதன் இறக்கையை விரித்தால் அதிகபட்சமே 4 செ.மீ. அகலம்தான் இருக்கும். மேல் இறக்கையையும் கீழ் இறக்கையையும் சற்றே மாறுபட்ட கோணத்தில் மடித்து வைத்து ஓய்வெடுக்கக் கூடியன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஆதி வள்ளியப்பன் (3 மார்ச் 2018). "வயல் துள்ளி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)