உள்ளடக்கத்துக்குச் செல்

வணிக மேம்பாட்டு மாதிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு வணிக மேம்பாட்டு மாதிரி (business model) என்பது ஒரு வணிக நிறுவனம் எவ்வாறு தனது மதிப்புகளை,[1] அதாவது பொருளாதார, சமூக அல்லது பிற மதிப்புகளை உருவாக்குகிறது, வழங்குகிறது மற்றும் கையாள்கிறது என்ற தத்துவத்தை விவரிக்கிறது. வணிக மாதிரியை வடிவமைக்கும் நடைமுறையானது வணிக செயல் தந்திரத்தின் ஒரு பகுதியாகும்.

கருத்தியலிலும், நடைமுறையிலும் வணிக மேம்பாட்டு மாதிரி எனும் வரைமுறையானது நோக்கம், அளிப்புக்கள், செயல் தந்திரங்கள், உட்கட்டமைப்பு, நிறுவன கட்டமைப்புக்கள், வணிக நடைமுறைகள் மற்றும் இயக்க வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் உட்பட பல முக்கிய வணிக அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையற்றும், முறையாகவும் செய்யப்படும் விரிவான விவரிப்புக்களுக்குப் பயன்படுகிறது.

பயன்பாட்டுச் சூழல்

[தொகு]

வணிக நடைமுறையைப் பற்றி இலக்கியங்கள் மிகவும் வேறுபட்ட விளக்கங்களையும் வரையறைகளையும் வழங்கியுள்ளன.[2] ஒரு கணக்கெடுப்பில் மேலாளர்களின் பதில்களின் முறையான ஆய்வும் பகுப்பாய்வும், வணிக வாய்ப்பை செயல்படுத்துவதற்கான நிறுவன கட்டமைப்புகளின் வடிவமைப்பாக வணிக மாதிரிகளை வரையறுக்கிறது.இந்த வடிவமைப்பு தர்க்கமானது மேலும் விரிவாக்கங்கள், தொழில்முனைவோர் மிகவும் வெற்றிகரமான வளர்ச்சி நிறுவனங்களை உருவாக்கும் வழிமுறைகளாக வணிக மாதிரி விளக்கங்களில் கதையாடல் அல்லது ஒருமைப்பாட்டின் பயன்பாட்டை வலியுறுத்துகின்றன.[3]

வணிக மாதிரிகள் குறிப்பாக தொழில்முனைவுச் சூழலில் வணிகங்களை விவரிக்கவும் வகைப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய நிறுவனங்களுக்குள் மேலாளர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன.[4] நன்கு அறியப்பட்ட வணிக மாதிரிகள் படைப்பாற்றல் மிக்க மேலாளர்களுக்கான "செய்முறைகளாக" செயல்படக்கூடும். பொது அறிக்கையிடல் நோக்கங்களுக்காக கணக்கியல் சூழலிலும் சில சந்தர்ப்பங்களில் வணிக மாதிரிகள் குறிப்பிடப்படுகின்றன.

வரலாறு

[தொகு]

ஆக்சுபோர்டு அகராதியின் கூற்றுப்படி, “வணிக மாதிரி” என்ற சொல்லாக்கம் வணிகம் மற்றும் மாதிரி என்ற சொற்களின் கூட்டு வார்த்தையாக முதன் முதலிலி 1832 ஆம் ஆண்டில் “ஒரு வணிகத்தை செயல்படுத்துவதற்கான திட்டம்” என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறது.[5]

காலங்கள் செல்லச் செல்ல, வணிக மேம்பாட்டு மாதிரிகள் மிக அதிகமாக நவீனமாகிவிட்டன. பெயிட் அண்ட் ஹூக் வணிக மேம்பாட்டு மாதிரி ("ரேசர் அண்ட் ப்ளேட்ஸ் வணிக மேம்பாட்டு மாதிரி அல்லது "டைட் புராடக்ட்ஸ் வணிக மேம்பாட்டு மாதிரி" எனவும் குறிக்கப்படுவன) 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாதிரியானது அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு பொருளை மிகவும் குறைந்த விலைக்கு (மிகப்பெரும்பான்மையான நேரங்களில் நட்டத்திற்கு கூட) விற்று பின்னர் அப்பொருளுக்குத் தேவைப்படக்கூடிய மீண்டும் மீண்டும் வாங்க வேண்டிய மறுநிரப்பு பொருள்கள் அல்லது சேவைகளை முன்னர் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்யும் விதமாக விலையேற்றம் செய்து விற்கும் தந்திரத்தைக் குறிக்கிறது. உதாரணமாக ரேசர் மற்றும் பிளேடுகளைக் குறிப்பிடலாம். இங்கு ரேசர் பெயிட் என்ற வரையறைக்குள்ளும் பிளேடுகள் ஹுக் என்ற வரையறைக்குள்ளும் வருகின்றன. இதன் மற்றொரு மாற்று வடிவமே அடோப் நிறுவனத்தால் பயன்படுத்தப்படுகிறது. இவர்களின் தந்திரம் என்னவாயின், ஒரு ஆவணத்தைப் படிப்பதற்கான மென்பொருளை விலையற்றதாக வழங்கி விட்டு ஆவணத்தை உருவாக்குவதற்கான மென்பொருளை பல நூறு டாலர்களுக்கு விற்பனை செய்வதாகும்.

1950 ஆம் ஆண்டுகளில், புதிய வணிக மேம்பாட்டு மாதிரிகள் மெக்டொனால்ட்சு உணவகங்கள் மற்றும் டொயோட்டா ஆகியோரிடமிருந்து வந்தன. 1960களில், புதிய வணிக மாதிரிகளை உருவாக்கியோர் வோல் மார்ட் மற்றும் ஹைபர்மார்க்கெட்ஸ் ஆகியோராக இருந்தனர். 1970 களில் புதிய வணிக மாதிரிகள் ஃபெட்எக்சு மற்றும் டாய்ஸ் ஆர் அஸ் ஆகியோரிடமிருந்தும் 1980களில் பிளாக் பஸ்டர், ஹோம் டிபாட், இன்டெல் மற்றும் டெல் ஆகியோரிடமிருந்தும் 1990களில் சௌத்வெஸ்ட் ஏர்லைன்சு, நெற்ஃபிளிக்சு, இபே, அமேசான்.காம் மற்றும் ஸ்டார்பக்ஸ் ஆகியோரிடமிருந்தும் வந்தன.

இன்று, வணிக மேம்பாட்டு மாதிரிகள் எவ்வாறு தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைச் சார்ந்துள்ளதாக இருக்கலாம். உதாரணத்திற்கு, இணையதளங்களின் தொழில் முனைவோர்களும் கூட முழுமையாக புதிய மாதிரிகளை முற்றிலும் நிகழ்விலுள்ள அல்லது தோன்றி வரும் தொழில் நுட்பத்தைச் சார்ந்துள்ளவையாக உருவாக்கியுள்ளனர். தொழில் நுட்ப பயன்பாட்டைப் பயன்படுத்தி, வணிகங்கள் பேரளவிலான வாடிக்கையாளர்களை குறைந்த பட்ச செலவில் அடையலாம்.

மாதிரி

[தொகு]

வணிக மாதிரி வடிவமைப்பு என்பது பொதுவாக ஒரு நிறுவனம் தனக்கான வணிக மாதிரிைய வடிவமைக்கும் செயலைக் குறிக்கும். மாசா மற்றும் டக்கி (2014) ஆகியோரின் கூற்றுப்படி வணிக மேம்பாடு மற்றும் வர்த்தக உத்தி ஆகியவற்றை மாதிரிக்கான கருத்தியல் முறைகளை உட்படுத்தி உருவாக்கும் செயல்முறையின் பகுதியாகும்.[6] புதிய வணிக மாதிரி ஒன்றை உருவாக்குவதற்கும் (கல்வி நிறுவன துணை நிறுவனங்களுக்கான அல்லது உயர் தொழில்நுட்ப தொழில்முனைவு போன்றவற்றுக்கான நேர்வுகளில்), ஏற்கனவே இருக்கும் வணிக மாதிரியை மாற்றுவதற்கும் (உதாரணமாக ஹில்டி கருவி நிறுவனம் தனது கருவிகளை விற்பதிலிருந்து குத்தகை மாதிரிக்கு மாறியது போல) உள்ள வேறுபாட்டை அவர்கள் எடுத்துக்காட்டினர். இந்த வேறுபாடுகள் மிகவும் ஆழமானவை (உதாரணமாக, முந்தைய நிலையில் வளங்களின் பற்றாக்குறை மற்றும் பிந்தைய நிலையில் தற்போதைய கட்டமைப்புகள் மற்றும் நிறுவன அமைப்புகளுடன் ஏற்படும் மந்தநிலை மற்றும் முரண்பாடுகள் ஆகியவை காணப்பட்டன) என்பதால், இவ்விரண்டிற்கும் வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்துவது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் கருதினர். எந்த மாதிரியும் இல்லாத நிலையில் வணிக மாதிரியை உருவாக்கும் செயல்முறையைக் குறிக்க "வணிக மாதிரி வடிவமைப்பு" என்றும், ஏற்கனவே உள்ள வணிக மாதிரியை மாற்றும் செயல்முறையைக் குறிக்க "வணிக மாதிரி மறுகட்டமைப்பு" என்றும் அவர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இந்த இரண்டு செயல்முறைகளும் ஒன்றையொன்று விலக்கவில்லை என்பதையும், அதாவது மறுகட்டமைப்பில் வணிக மாதிரி வடிவமைப்பின் படிகளுக்கு இணையான படிகள் இருக்கலாம் என்பதையும் அவர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.

பயன்பாடுகள்

[தொகு]

மலோன் மற்றும் பிறர் [7] அவர்களால் விளக்கப்பட்ட சில வணிக மாதிரிகள் உண்மையில் பிறரை விட சிறப்பாக செயல்பட்டனர். அவற்றை பெரிய அமெரிக்க நிறுவனங்களைக் கொண்டிருக்கும் தரவுத் தொகுப்பில், 1998 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு தொடர்ந்த வருடங்களின் காலத்தில் கண்டனர். அதே சமயம் அவை ஒரு வணிக மாதிரியின் இருத்தல் பொருட்படுத்தப்படுகின்றதா என்பதையும் நிரூபிக்கவில்லை.

தொடர்புடைய கருத்தாக்கங்கள்

[தொகு]

வணிக மாதிரியின் வடிவமைப்பின் வழிமுறை வணிக செயல்தந்திரத்தின் ஒரு பகுதியாகும். ஒரு நிறுவனத்தின் வணிக மாதிரியை நிறுவனத்தின் கட்டமைப்பிற்குள்ளாக அமல்படுத்துவது (எ.கா. அமைப்பாக்க சாத்தியமுள்ளவை, வேலைப்பகிர்வுகள், மனித வளங்கள்) மற்றும் அமைப்புகள் (எ.கா. தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, உற்பத்திக் கூடங்கள்) நிறுவனத்தின் வணிக இயக்கங்களின் ஒரு பகுதியாகும்.

வணிக மாதிரியாக்கம் பொதுவாக இயக்க நிலையிலுள்ள வணிக வழிமுறை வடிவமைப்பைக் குறிப்பிடுகிறது என்பது புரிந்து கொள்ள முக்கியமானதாகும், அவ்வாறே வணிக மாதிரிகள் மற்றும் வணிக மாதிரி வடிவமைப்பு ஒரு நிறுவனத்தின் வணிக தர்க்கத்தை செயல்தந்திர மட்டத்தில் குறிப்பிடுகிறது.

வணிகப் பெயர் என்பது வணிக மாதிரியின் விளைவே ஆகும். அதுமட்டுமின்றி வணிகப் பெயருக்கும் வணிக மாதிரிக்கும் தொடர்புள்ளது. ஏனெனில் வணிக மாதிரியே வணிகப் பெயரின் உத்தரவாதங்களைத் தீர்மானிக்கிறது, மேலும் வணிகப் பெயரின் இயல்பே வணிக மாதிரியின் அம்சமாக அமைகிறது. இதனை நிர்வகிப்பதே ஒருங்கிணைப்பு சந்தையாக்கலின் வேலையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Business Model Generation , A. Osterwalder, Yves Pigneur, Alan Smith, and 470 practitioners from 45 countries, self published, 2010
  2. George, G and Bock AJ. 2011. The business model in practice and its implications for entrepreneurship research. Entrepreneurship Theory and Practice, 35(1): 83-111
  3. George, G and Bock AJ. 2012. Models of opportunity: How entrepreneurs design firms to achieve the unexpected. Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-17084-0
  4. Baden-Fuller, Charles; Mary S. Morgan (2010). "Business Models as Models". Long Range Planning 43 (2/3): 156–171. doi:10.1016/j.lrp.2010.02.005. http://openaccess.city.ac.uk/13975/1/Baden-Fuller and Morgan Business Models for CRO.pdf. 
  5. OED (2024-09-11). "s.v. business model (n.)". www.oed.com. Oxford English Dictionary (OED). பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
  6. Massa, L., & Tucci, C. L. 2014. Business model innovation. In M. Dodgson, D. M. Gann & N. Phillips (Eds.), The Oxford handbook of innovation management: 420–441. Oxford, UK: Oxford University Press.
  7. Do Some Business Models Perform Better than Others? , Malone et al., May 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணிக_மேம்பாட்டு_மாதிரி&oldid=4131063" இலிருந்து மீள்விக்கப்பட்டது