வடபழநி
வடபழனி | |||||
ஆள்கூறு | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | சென்னை | ||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||
மாவட்ட ஆட்சியர் | ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3] | ||||
சட்டமன்றத் தொகுதி | தியாகராயநகர் | ||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே 05:30) | ||||
குறியீடுகள்
|
வடபழநி சென்னை மாநகராட்சியில் மேற்கே அமைந்திருக்கும் ஒரு பகுதி. வடபழநி சென்னையின் பழம்பெரும் பகுதிகளில் ஒன்றாகும். வடபழநியில் புகழ்பெற்ற கோவில்கள், திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், அலுவலகங்கள் மற்றும் கடைகள் இருக்கின்றன. வடபழனி தியாகராயநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது.
புகழ் பெற்ற வடபழநி முருகன் கோவில் இங்கு உள்ளது. சோழர் காலத்தில் கட்டப்பெற்ற வேங்கீஸ்வரர் கோவிலும் வடபழனியில் உள்ளது. சிந்தாமணி என்னும் ஒரு சிறிய கோவிலும் இங்குள்ள ஜவஹர்லால் நேரு சாலையில் (100 அடி சாலை) அமைந்துள்ளது. விஜயா மருத்துவமனை, விஜயா ஹெல்த் சென்டர், சூரியா மருத்துவமனை மற்றும் பெஸ்ட் மருத்துவமனை என்று சென்னையின் பெயர்பெற்ற மருத்துவமனைகள் வடபழனியில் அமைந்துள்ளன. எஸ்.ஆர்.எம். மருத்துவமனையும் உள்ளது.
தொழில்துறை
[தொகு]ஏ.வி.எம்., விஜயா, வாகினி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற தமிழ்த் திரையுலகின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற சரவண பவன் உணவகம், தன் தலைமையகத்தை வடபழனியில் அமைத்துள்ளது. கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்.) தன் அலுவலகத்தை வடபழநியில் அமைத்துள்ளது. என்.எஸ்.கே. சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஸா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும். 'நெக்சஸ் விஜயா' என்ற பிரம்மாண்டமான, வணிக நிறுவனங்கள் அடங்கிய வளாகம் ஒன்றும் வடபழனியில் உள்ளது.
கல்வித்துறை
[தொகு]புகழ் பெற்ற தனியார் பல்கலைக்கழகமான எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம், அதன் வளாகத்தை, வடபழனியில் கொண்டுள்ளது.மேற்கு சிவன் கோவில் தெருவில் அப்போலோ நிறுவனத்தின் டிப்ளமோ கல்லூரி உள்ளது.
போக்குவரத்து
[தொகு]சென்னை மாநகரத்தின் பெரும் சாலைகளில் ஒன்றான ஜவஹர்லால் நேரு சாலை (100 அடி சாலை), வடபழநி வழியாகச் செல்கின்றது. வடபழநியில், சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நிலையம் மற்றும் பணிமனை ஒன்றும் உள்ளது. சென்னையின் பிற பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்து சேவைகள் நிறைய உள்ளன. கோடம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம், வடபழனியிலிருந்து சுமார் 2 – 3 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், கோயம்பேட்டிலுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் 4 கி.மீ. தொலைவிலும், மீனம்பாக்கத்திலுள்ள சென்னை பன்னாட்டு விமான நிலையம் 8 கி.மீ. தொலைவிலும், புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் மத்திய ரயில்வே நிலையம் 12 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பெயர்க் காரணம்
[தொகு]வடபழநி : பழைய பெயர் புலியூர்க்கோட்டம்
"அசைதலும் உரியன் அதா அன்று" என்று திருவாவினன் குடிப்பகுதியிலே திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் பாடினார். இப்படி இவர் பாட, தமிழ்நாட்டின் தென்பகுதியிலுள்ள பழநி முருகன் கோயிலிலே பழனி ஆண்டி, இரண்டு முறை அசைந்து விட்டார். முதலில் அமைந்தது தென்பழநி என்றமையால், வடக்குப் பகுதியில் அமைந்த இப்பழநி, வடபழநி என்றாகி விட்டது.
அமைவிடம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.