உள்ளடக்கத்துக்குச் செல்

வடக்கூர் கைலாசநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கூர் கைலாசநாதர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம்

[தொகு]

ஆவுடையார் கோயிலை அடுத்துள்ள வடக்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் ஆதி கைலாசநாதர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன்,இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் ஆதி கைலாசநாதர் (ஆதி கயிலாதநாதர்) ஆவார். இறைவி சிவகாமியம்மை ஆவார். [1]

பிற சன்னதிகள்

[தொகு]

திருச்சுற்றில் வலம்புரி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், பைரவர், ஆஞ்சநேயர், சூரியன், சந்திரன் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. இறைவி சன்னதி வெளியில் தனியாக உள்ளது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009