வஜ்ரயோகினி
வஜ்ரயோகினி அல்லது வஜ்ரவராகி என்பது வஜ்ரயான பௌத்தத்தில் யிதமாக வணங்கப்படும் ஒரு டாகினி(डाकिनी) ஆவார். வஜ்ரயோகினியின் வழிபாடு இந்தியாவில் கி.பி 10ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி 12ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர் அறிவின்மையின் மீது கொள்ளும் வெற்றியுடன் தொடர்புபடுத்தப்படுகிறார். வாருணி(மது மற்றும் குடிகாரர்களின் அதிதேவதை) இவருடைய மறைவான அம்சமாக கருதப்படுகிறார். பொதுவாக, வஜ்ரயோகினி சிவப்பு நிறமுடைய இளம் பெண்ணாக சித்தரிக்கப்படுகிறார். மேலும் இவரது நெற்றியில் முக்கண் காணப்படுகிறது. மற்ற தக்கினிகளை போலவே வஜ்ரயோகினியும் திகம்பர(வானத்தையே ஆடையாக கொளவது) உடையுடன் திகழ்கிறார். மேலும் இவர் சேத சாதனம்(छेद साधनं) எனகிற தந்திர சாதனத்தின் முக்கியமான அம்சமாக இருக்கின்றார். வஜ்ரயோகினியின் வழிபாடு உலகப்பற்று அதிகமாக உள்ளவர்களுக்கு பொருந்தக்கூடியது என கருதப்படுகிறது. இவருடைய துணை சக்ரசம்வரர். இவர் அவ்வப்போது வஜ்ரயோகினியின் தோளில் ஈட்டியாக சித்தரிக்கப்படுகிறார். வஜ்ரயோகினிக்கும், சின்ன்மஸ்தா என்ற இந்து தெய்வத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.
மந்திரங்கள்
[தொகு]வஜ்ரயோகினியின் மந்திரம் பின்வருமாறு:
" ஓம் வஜ்ரயோகினி ஹூம் ஹூம் பட் பட் "
" ॐ वज्रयोगिनि हूँ हूँ फट् फट् "
மேற்கோள்கள்
[தொகு]- English, Elizabeth (2002). Vajrayogini: Her Visualizations, Rituals, & Forms. Boston: Wisdom Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86171-329-X