உள்ளடக்கத்துக்குச் செல்

வசுபந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வசுபந்து
சௌத்திராந்திக யோகசார தத்துவத்தை நிறுவிய காந்தார நாட்டு மகாயான பௌத்த அறிஞர்.
பணிபௌத்த துறவி
அறியப்படுவதுயோகசாரம்
சமயம்பௌத்தம்
ஜப்பான் நாட்டு, நராவில் உள்ள கொபுஜி கோயிலில் வசுபந்துவின் 186 செ. மீ., உயரமுள்ள மரச்சிற்பம், ஆண்டு 1208

வசுபந்து (Vasubandhu) கி பி 4 முதல் 5-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காந்தார நாட்டு மகாயான பௌத்த துறவியும் அறிஞரும் ஆவார். இவரை இரண்டாம் புத்தர் என்று பௌத்தர்கள் அழைப்பர். பௌத்தர்களின் மும்மணிகளில் (திரிபிடகம்) ஒன்றான அபிதம்மத்தை அடிப்படையாகக் கொண்டு, தனது உடன் பிறந்தவரும், பௌத்த துறவியுமான ஆசங்காவுடன் இணைந்து யோகசாரம் எனும் தத்துவப்பள்ளியையும் (School of Philosophy) நிறுவியவர்.

பின்னர் ஈனயானத்தின் பழமைப் பிரிவான சௌத்திராந்திகம் மற்றும் மகாயனத்தின் உட்பிரிவான யோகசாரம் ஆகியவற்றின் தத்துவங்களை இணைத்து புதிதாக சௌத்திராந்திக யோகசாரம் தத்துவப்பள்ளியை நிறுவியவர்.

புத்தரின் உபதேசங்களுக்கு விளக்க உரை வழங்கிய ஆறு அறிஞர்களில் (ஆறு அணிகலன்களில்) வசுபந்துவும், அவரது உடன்பிறந்தவரான ஆசங்காவும் முக்கியமானவர்கள் ஆவர்.[1] முதலாம் சந்திரகுப்தர் காலத்தில் வாழ்ந்தவர்.[2]

வசுபந்துவின் சௌத்திராந்திக-யோகசார தத்துவப் பள்ளியின் தூண்களாக தருமபாலர், திக்நாகர் மற்றும் தர்மகீர்த்தி விளங்கினார்கள்.

கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக சீனா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களால் வசுபந்து நன்கு அறியப்பட்டவர். ஜப்பான் நாட்டின் நரா நகரத்தில் உள்ள கொபுஜி பௌத்த விகாரையில், கி பி 1208-ஆம் ஆண்டில் செய்த 186 செண்டி மீட்டர் உயரமுள்ள வசுபந்துவின் மரச் சிற்பம் உள்ளது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.rigpawiki.org/index.php?title=Six_Ornaments
  2. Dharma Fellowship (2005). Yogacara Theory - Part One: Background History. Source: [1] (Accessed: November 15, 2007)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுபந்து&oldid=2795343" இலிருந்து மீள்விக்கப்பட்டது