லூக் (நாய்)
லூக் | |
---|---|
தி ஸ்கேர்குரூ (1920) என்ற திரைப்படத்தில் பஸ்டர் கீடனுடன் லூக் | |
முதல் தோற்றம் | 1914 |
இறுதித் தோற்றம் | 1920 |
தகவல் | |
வகை | நாய் அமெரிக்க பிட் புல் டெரியர் |
பால் | ஆண் |
லூக் (Luke) என்பது அமெரிக்க பிட் புல் டெரியர் இனத்தைச் சேர்ந்த நாயாகும். இது 1914 மற்றும் 1920க்கு இடையில் அமெரிக்க நகைச்சுவை ஊமைத் திரைப்படங்களில் தொடர்ச்சியான கதாபாத்திரமாக நடித்தது. லூக் தி பிட்புல் என்ற பெயரிலும் இந்நாய் அறியப்பட்டது.
இந்நாய் நடிகை மிண்டா டர்பி மற்றும் அவரது கணவரும், நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான ரோஸ்கோ “பாட்”டி அர்பக்கிள் ஆகியோரின் செல்லப்பிராணியாகவும் இருந்தது.[1][a]
ஆறு ஆண்டுகளாக லூக் திரைப்பட பார்வையாளர்களிடையே பரவலான புகழைப் பெற்றது. கீஸ்டோன் ஸ்டுடியோஸ், காமிக் பிலிம் கம்பெனி மற்றும் ஜோசப் எம். ஷெங்க் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் குறும்படங்களில் இந்நாய் தோன்றியுள்ளது.[2] இந்த நாய் அர்பக்கிள் மற்றும் டர்பி ஆகியோருடன் மட்டுமல்லாமல், ஊமைத் திரைப்பட நடிகர்கள் மாபெல் நார்மன்ட், பஸ்டர் கீடன், அல் செயின்ட் ஜான், மோலி மலோன், ஜோ ராபர்ட்ஸ், பெட்டி காம்ப்சன் மற்றும் எட்கர் கென்னடி உள்ளிட்ட பிற நட்சத்திரங்களுடனும் திரையில் தோன்றியது.
லூக் தனது இனத்தின் சராசரி ஆயுட்காலம் படி, 1926-இல் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது 13 வயதில் இறந்தது.
குறிப்புகள்
[தொகு]- ↑ While Luke's physical appearance is similar to that of the American Staffordshire Terrier, that breed, according to the American Kennel Club (AKC), is "a taller, heavier offshoot" of the Staffordshire Bull Terrier of England. Luke's smaller size as an adult is more consistent with the shorter, lighter specifications of that English breed. Refer to the AKC (New York City headquarters) website for the "Breed Traits & Characteristics", as well as the history, of the Staffordshire Bull Terrier.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Admin. (2012). "Luke the Pitbull" பரணிடப்பட்டது 2020-10-21 at the வந்தவழி இயந்திரம், December 26, 2012. Dog Actors: Dogs on the big screen. Retrieved September 16, 2017.
- ↑ "Luke the Dog", Internet Movie Database (IMDb), Amazon, Seattle, Washington. Retrieved September 16, 2017.