உள்ளடக்கத்துக்குச் செல்

ரூபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரூபா
பிறப்பு7 நவம்பர் 1960 (1960-11-07) (அகவை 64)
ஐதராபாத்து (இந்தியா), இந்தியா
மற்ற பெயர்கள்ரூபா தேவி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1980–1990
2005–தற்போது வரை
பெற்றோர்அத்வானி லட்சுமி தேவி (தாய்)
இராமைய்ய (தந்தை)
வாழ்க்கைத்
துணை
மது மகங்கலி
பிள்ளைகள்1

ரூபா (பிறப்பு 7 நவம்பர் 1960) ரூபா தேவி என்றும் அறியப்படுபவர் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் மூத்த நடிகையான அத்வானி லட்சுமி தேவியின் மகளாவார். இவர் தமிழில் 365 நாட்கள் ஓடிய ஒரு தலை ராகம் என்ற சோகமான காதல் சித்திரத்தில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானார். அதில் இவர் புதுமுகம் ஷங்கருடன் ஜோடியாக நடித்தார்.[1]

தொழில்

[தொகு]

தேவி 1980 களில் முதன்மையாக கன்னடத் திரைப்படங்களில் பணியாற்றினார். இவர் 1979 ஆம் ஆண்டில் கமலா என்ற சோதனை திரைப்படத்தில் அறிமுகமானார். அதில் இவர் ஏற்ற பாலியல் தொழிலாளியின் பாத்திரம் பரந்த அளவில் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுத் தந்தது. 1980 ஆம் ஆண்டில் சிம்ஹா ஜோடி படத்தின் வழியாக வணிக திரைப்படத்தில் நுழைந்தார், அதில் விஷ்ணுவர்தனின் சகோதரி வேடத்தில் நடித்தார். 1983-87 காலப்பகுதியில் கன்னடத் திரைப்படங்களில் இரண்டாவது நாயகி மற்றும் துணை வேடங்களுக்கு இவர் முதல் தேர்வாக இருந்தார். இவரது பிரதான கன்னடத் திரைப்படங்ளாக ஹாலு ஜேனு, முள்ளின குலாபி, பந்தனா, அவள அந்தரங்கா, மரலி குடிகே, திரிசூலா, அகுதி, தர்மா, பாலா நௌகே ஆகியவை அடங்கும். அவள அந்தரங்கா படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கர்நாடக அரசு திரைப்பட விருதை (1984–85) பெற்றார்.[சான்று தேவை]

இவரது காலத்தில் கன்னடத்தின் முன்னணி நடிகர்களான ராஜ்குமார், கல்யாண் குமார் , விஷ்ணுவர்தன், ஸ்ரீநாத், அம்பரிஷ், அனந்த் நாக், சங்கர் நாக், லோகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். ஹாலு ஜேனு, சமயதா கோம்பே, யாரிவனு ஆகியவற்றில் ராஜ்குமருடன் ஜோடியாக நடித்தார், இவை அனைத்தும் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றன. 1989 க்குப் பிறகு இவர் நடிப்புக்கு முழுக்குபோட்டார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் கங்கா காவேரி படத்தின் வழியாக வெள்ளித்திரைக்குத் திரும்பினார். 2011 ஆம் ஆண்டில் துனியா விஜய்யின் தாயாக ஜராசந்தா படத்தில் நடித்தார்.[2][3]

ரூபா தேவி மற்றும் அவரது தாயார் அத்வானி லட்சுமி தேவி ( ஸ்ரீ ராமஞ்சநேய யுத்தா ) இருவருடனும் நாயகனாக நடித்த பெருமையை ராஜ்குமார் பெற்றுள்ளார்.

திரைப்படவியல்

[தொகு]
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்பு
1978 நாளாகா எந்தரோ தெலுங்கு சிறந்த நடிகைக்கான நந்தி விருத்
1979 காளி கோயில் கபாலி தமிழ்
1979 பக்கா குள்ளா கன்னடம்
1979 கமலா கன்னடம்
1980 ஒரு தலை ராகம் சுபத்திரா தமிழ்
1980 தீக்கடல் மலையாளம்
1980 ஹிருதயம் பாடுண்ணு மலையாளம்
1980 அந்தரங்கம் ஊமையானது ரதி தமிழ்
1980 அம்பலவிளக்கு கீதா மலையாளம்
1980 பாப்பு அவாகவே மலையாளம்
1980 வசந்த அழைப்புகள் தமிழ்
1980 சிக்ஹ ஜோடி கன்னடம் ஏ. ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளார்
1981 சினேகம் ஓரு பிரவாகம் மலையாளம்
1981 அம்பாள்பூவு மலையாளம்
1981 வழிகள் யாத்ரக்கர் மலையாளம்
1981 மயில் தமிழ்
1981 ஆடுகள் நனைகின்றன தமிழ்
1981 கண்ணீர் பூக்கள் தமிழ்
1981 ஆம்பல்பூவு மலையாளம்
1981 அவசரக்காரி தமிழ்
1981 மவுனயுத்தம் தமிழ்
1981 எங்கம்மா மகாராணி தமிழ்
1981 அன்று முதல் இன்று வரை தமிழ்
1982 எச்சில் இரவுகள் Tamil
1982 எனிக்கம் ஒரு திவாசம் மோலிக்குட்டி மலையாளம்
1982 கனவுகள் கற்பனைகள் தமிழ்
1982 ஹாலு ஜேனு மீனா கன்னடம்
1982 முள்ளின குலாபி ராதா கன்னடம்
1982 ராகம் தேடும் பல்லவி தமிழ்
1982 நடமாடும் சிலைகள் தமிழ்
1982 புடி முச்சிடா கெண்டா கன்னனடம்
1982 துணைவி தமிழ்
1982 சிலந்திவலா சாரதா மலையாளம்
1983 பல்லாங்குழி தேவு மலையாளம்
1983 காயத்திரி மதுவே கன்னடம்
1983 நியாயா கெட்டிட்டு கன்னடம்
1984 பந்தனா கன்னடம்
1984 சிவ கன்யே கன்னடம்
1984 யாரிவனு கன்னடம்
1984 அவள அந்தரங்கா கன்னடம் சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது
1984 பவித்ர பிரேமா கன்னடம்
1984 மரியாதே மகாலு கன்னடம்
1984 மராலி குடிகே கன்னடம்
1984 சமயத கொம்பே கன்னடம்
1984 மகா புருஷா கன்னடம்
1984 யாரிவானு கன்னடம்
1985 தர்மமா கன்னடம்
1985 பெங்களூர் ராத்ரியள்ளி கன்னடம்
1985 திரிசூலா' கன்னடம்
1985 பெட்டத ஹூவு சிறப்புத் தோற்றம் கன்னடம்
1985 ஆகுதி கன்னடம்
1985 கூடம் தேடி Malayalam
1986 நெனபினா தோணி கன்னடம்
1986 ரதசப்தமி கன்னடம்
1987 சிவ பக்த மார்க்கண்டேயா கன்னடம்
1987 ஜெகன்மாதா Telugu
1987 பாலா நௌக் கன்னடம்
1988 தாசி தெலுங்கு
1988 சம்யுக்தா கன்னடம்
1989 பத்ரசிட்டா[4] மலையாளம்
1989 கண்டந்தரே கண்டு கன்னடம்
1990 அப்பு[5] மலையாளம்
1994 போலீஸ் அல்லுடு தெலுங்கு
2005 கர்ணன சம்பத்து கன்னடம் 18 ஆண்டுகள் தாமதமானது
2006 கமலி தெலுங்கு
2008 கங்கா காவேரி கன்னடம்
2010 மத்தே முங்காரு கன்னடம்
2011 ஜராசந்தா கன்னடம்
2012 கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும் தெலுங்கு
2015 அசுரா தெலுங்கு

குறிப்புகள்

[தொகு]

 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபா&oldid=4175131" இலிருந்து மீள்விக்கப்பட்டது