உள்ளடக்கத்துக்குச் செல்

ராய்ச்சூர் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராய்ச்சூர் போர்

ராய்ச்சூர் கோட்டை
நாள் 20 மே 1520
இடம் ராய்ச்சூர், கருநாடகம், இந்தியா
விஜயநகரப் பேரரசின் வெற்றி
பிரிவினர்
தளபதிகள், தலைவர்கள்
கிருஷ்ணதேவராயன்[1]
திம்மருசு[2]

கிறித்தோவயோ தி பிகுயேரெதோ

இசுமாயில் அடில் ஷா[1]
பலம்
நவீன மதிப்பீடுகள்

அக்கால ஆதாரம்

அக்கால ஆதாரம்
இழப்புகள்
16,000 வீரர்கள் கொல்லப்பட்டனர் (அக்கால ஆதாரங்கள்) தெரியவில்லை ஆனால் அதிகம்

ராய்ச்சூர் போர் (Battle of Raichur) என்பது 1520ஆம் ஆண்டு[3] விஜயநகரப் பேரரசுக்கும், பிஜப்பூர் சுல்தானகத்துக்கும் ராய்ச்சூர் பட்டணத்தில் நடைபெற்ற ஒரு போர் ஆகும். இதில் விஜயநகரப் படைகள் தீர்க்கமான வெற்றியைப் பெற்றன. பிஜப்பூர் ஆட்சியாளர் தோற்கடிக்கப்பட்டு கிருஷ்ணா ஆற்றைத் தாண்டி தள்ளப்பட்டார்.[4]

பின்புலம்

[தொகு]

ராய்ச்சூர் கோட்டையானது 1284ஆம் ஆண்டு காக்கத்திய மன்னனான உருத்திரனால் கட்டப்பட்டது. காக்கத்தியர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இக்கோட்டை விஜயநகர இராஜ்யத்திடம் கை மாறியது. அன்று முதல் கோட்டையானது கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு பிரச்சனையின் கீழ் இருந்தது. வடக்கு தக்காண பீடபூமியின் பிற பகுதிகளுடன் இக்கோட்டையும் 1323ஆம் ஆண்டு முகமது பின் துக்ளக்கால் கைப்பற்றப்பட்டது. 1347ஆம் ஆண்டு இக்கோட்டையை பாமினி சுல்தானகம் கைப்பற்றியது.[5] பாமினி சுல்தானகத்திடம் இருந்து ராய்ச்சூர் நகரத்தை மீண்டும் கைப்பற்ற சாளுவ நரசிம்ம தேவ ராயன் முயற்சித்தார். ஆனால் தோல்வி அடைந்தார். ராய்ச்சூர் போருக்கு உடனடி காரணமானது 1520ஆம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு தன்னிடம் சேவையாற்றிய ஒரு முஸ்லிமான சையது மரக்காயரை கிருஷ்ணதேவராயர் கோவாவிற்கு ஒரு பெருமளவிலான பணத்துடன் குதிரைகளை வாங்குவதற்காக அனுப்பினார். மரக்காயர் கிருஷ்ணதேவராயருக்கு துரோகம் செய்தான். பணத்துடன் அடில் கானுடன் சேர்ந்து கொண்டு அவருக்கு பணியாற்றத் தொடங்கினான். பணத்துடன் மரக்காயரையும் திருப்பி அனுப்ப வேண்டும் என கிருஷ்ணதேவராயர் கோரிக்கை விடுத்தார். ஆனால் இந்த கோரிக்கை எதிர் பார்த்ததைப் போலவே நிராகரிக்கப்பட்டது. அமைதியான காலத்தின் போது ராய்ச்சூர் இடைத் துறை நிலம் மீது ஒரு பெரும் அளவிலான தாக்குதல் நடத்துவதற்கான விரிவான ஆயத்தங்களை கிருஷ்ண தேவராயர் மேற்கொண்டார். ராய்ச்சூர் நிச்சயம் தாக்க தாக்கப்பட வேண்டும் என அரசவை முடிவு செய்ததற்கு பிறகு மன்னர் கிருஷ்ணதேவராயர் தன்னிடம் சேவையாற்றிய தன்னுடைய ராணுவ தளபதியான பெம்மசனி ராமலிங்க நாயக்கரை இந்த யுத்தத்தில் பங்கேற்குமாறு அழைத்தார்.[சான்று தேவை]

யுத்தம்

[தொகு]

இந்த யுத்தமானது ராய்ச்சூரில் கிருஷ்ண தேவராயர் மற்றும் பிஜப்பூர் சுல்தானகத்தின் ராணுவங்களுக்கு இடையே நடைபெற்றது.[3] விஜயநகர ராணுவத்தின் முதன்மை தளபதி சலுவ திம்மருசு ஆவார். இவர் சலுவ திம்மா என்றும் அறியப்படுகிறார்.[6] விஜயநகர பேரரசானது 32,600 குதிரைப்படை மற்றும் 551 யானைகளை உள்ளடக்கிய ஒரு படையைக் கொண்டிருந்தது என அக்கால நூல்கள் குறிப்பிடுகின்றன. பிஜப்பூர் சுல்தானகத்திடம் 7,000 குதிரைப்படை மற்றும் 250 யானைகள் அடங்கிய ஒரு படை இருந்தது. நவீன மற்றும் அக்கால வரலாற்றாளர்கள் ஒவ்வொரு புறமும் இருந்த காலாட் படையினரின் எண்ணிக்கையை குறிப்பிடுவதில் மாறுபடுகின்றனர். அக்கால நூல்கள் கிருஷ்ணதேவராயரிடம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட காலாட்படை இருந்தது என குறிப்பிடுகின்றன. மேலும் கிறித்தோவயோ தி பிகுயேரெதோ[7] என்பவரால் தலைமை தாங்கப்பட்ட ஒரு போர்த்துகீசிய துணை படைப் பிரிவு[8] வெடிமருந்து ஆயுதங்களை பயன்படுத்தி கோட்டையை கைப்பற்ற உதவி செய்தது என்று குறிப்பிடுகின்றன.[9] இந்த ஆயுதங்கள் திரி இயக்க சுடுகலன்களாக இருந்திருக்க பெருமளவு வாய்ப்பு இருந்துள்ளது. போர்த்துகீசியருடனான தொடர்பு மூலம் இவை பெறப்பட்டன. விஜயநகரப் பேரரசின் ராணுவத்தால் இவை நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டன.[10] மேலும் போர்த்துக்கீசியர்கள் தங்களது கொக்கித் துமுக்கிகள் மூலம் மதில் சுவர்களின் மேலிருந்த தற்காப்பாளர்களை ஒவ்வொருவராக வீழ்த்தினர். இவ்வாறாக முற்றுகையாளர்கள் மதில் சுவர்களுக்கு அருகில் சென்று கற்களை உடைப்பதற்கு இது வாய்ப்பு வழங்கியது. அவர்களது ஆளுநர் கொல்லப்பட்டது மற்றும் ஆர்வம் மிகுதி ஆகியவற்றின் காரணமாக கோட்டை காவல் படையினர் சரண் அடைந்தனர். பிஜப்பூர் சுல்தானகத்தால் பீரங்கிகள் விரிவாக பயன்படுத்தப்பட்டன என்று போர்த்துகீசிய நூல்கள் குறிப்பிடுகின்றன. விஜயநகர பேரரசானது அவற்றை குறைவான அளவிலேயே பயன்படுத்தினர் என்றும் இந்நூல்கள் குறிப்பிடுகின்றன.[11] பிஜப்பூர் சுல்தானகம் சக்தி வாய்ந்த வெடிமருந்து ஆயுதங்களை பெருமளவு கொண்டிருந்த போதிலும் விஜயநகரப் பேரரசு வெற்றி பெற்றது.[12]

இந்தியாவில் போர்த்துக்கீசிய கொக்கித் துமுக்கியர்கள், 16ஆம் நூற்றாண்டு ஓவியம். டி ஜோவாவோ டி கேஸ்ட்ரோ சித்திரத் துணி.

விளைவு

[தொகு]

ராய்ச்சூர் நகரம் சரணடைந்த போது கிருஷ்ண தேவராயர் நகரத்திற்குள் வெற்றி வாகை சூடியவாறு வருகை புரிந்தார்.[13] ராய்ச்சூரின் பாமினி தளபதிகளிடம் கிருஷ்ண தேவராயர் முரட்டுத் தனமாக நடந்து கொண்டார். பெரும்பாலான பாமினி தளபதிகள் தங்களது நிலங்களை இழந்தனர். மற்ற முஸ்லிம் மன்னர்கள் இந்த வெற்றியை அறிந்த போது தங்களது தூதர்களை அனுப்பினர். அவர்களுக்கு இகழ்ச்சியான பதிலே கிடைத்தது[சான்று தேவை]. அடில் ஷா தன்னிடம் வந்து மரியாதை செலுத்தி தன்னுடைய காலை முத்தமிட்டால் அவருடைய நிலங்கள் திருப்பி கொடுக்கப்படும் என மன்னர் கூறினார். ஆனால் அடில் ஷா என்றுமே வரவில்லை. கிருஷ்ண தேவராயர் பிறகு தன்னுடைய ராணுவத்தை வடக்கே பிஜப்பூர் வரை அழைத்துச் சென்றார். அதை ஆக்கிரமித்தார்.[14][15] பாமினி சுல்தானக அரசமரபின் முன்னாள் மன்னரின் மூன்று மகன்களை கைதிகளாக பிடித்தார். அவர்களை ஏற்கனவே கைதிகளாக அடில் ஷா பிடித்து வைத்திருந்தார். தக்காணத்தின் மன்னனாக அந்த மூன்று மகன்களில் மூத்தவரை அறிவித்தார்.[16] முழுமையான ஒற்றை தக்காண இறையாண்மையுள்ள அரசின் சிதிலங்களின் மீது நிறுவப்பட்ட ஐந்து சுல்தான்களின் ஆட்சியை பலவீனமாக்கும் இந்த முயற்சியானது சுல்தான்களின் பொதுவான எதிரிக்கு எதிராக அவர்களது எதிர்ப்பு குணத்தை அதிகரிப்பதிலேயே முடிந்தது.[17] அடில் ஷாவிடம் இருந்த பெல்காம் மீது தாக்குதலை நடத்த கிருஷ்ணதேவராயர் ஆயத்தமாகினார். ஆனால் சீக்கிரமே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனை அவரால் செயல்படுத்த முடியவில்லை. 1530ஆம் ஆண்டு தனது 45ஆம் வயதில் கிருஷ்ணதேவராயர் இறந்தார். கிருஷ்ணதேவராயருக்குப் பிறகு அச்சுத தேவராயர் ஆட்சிக்கு வந்தார்.

அரசியல் பின்விளைவுகள்

[தொகு]

ராய்ச்சூர் யுத்தமானது பெருமளவு தாக்கம் ஏற்படுத்திய விளைவுகளை கொண்டிருந்தது. அடில் ஷாவின் சக்தி மற்றும் மதிப்பை விஜயநகரத்தின் வெற்றியானது பலவீனப்படுத்தியது. அடில் ஷா பிற முஸ்லிம் அண்டை நாட்டவருடன் கூட்டணியை ஏற்படுத்துவதன் மீது தனது கவனத்தை திருப்பினார். விஜயநகரப் பேரரசை தோற்கடிப்பதற்கு தக்காணத்தில் இருந்த பிற சுல்தான்கள் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு இந்த வெற்றி காரணமாக அமைந்தது. மேற்கு கடற்கரையில் போர்த்துகீசியர்களின் நிலைமையையும் இப்போர் பாதிப்புக்கு உள்ளாக்கியது. விஜயநகர அரசமரபின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை ஒத்து கோவாவும் வளர்ச்சி அடைந்து வீழ்ந்தது. ஏனெனில், போர்த்துக்கீசியர்களின் ஒட்டு மொத்த வணிகமும் இந்துக்களின் ஆதரவை சார்ந்திருந்தது.[1]

மேலும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Bhat, N. Shyam (2009). "Political Interaction between Portuguese Goa and Karnataka". Portuguese Studies Review, Vol. 16, No. 2. Baywolf Press. p. 27.
  2. name=A Comprehensive History of Andhra
  3. 3.0 3.1 (Roy 2014, ப. 68): "In 1520, Battle of Raichur was fought between Krishna Raya of Vijayanagara and Sultan Ismail Adil Shah of Bijapur."
  4. Krishna Reddy (2008). Indian History. Tata McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780070635777.
  5. (Eaton 2013, ப. 278): "In the confusion surrounding the expulsion of imperial forces in 1347, the Doab apparently fell to the powers that simultaneously arose on the ashes of Tughluq imperialism in the Deccan, the Bahmani sultanate (1347-1538).
  6. |{{Cite ref :https://books.google.co.in. |Book Title=History of South India: Medieval period |Original from=University of Virginia
  7. "Portuguese Studies Review, Vol. 16, No. 2". 15 December 2009.
  8. "Ismāʿīl ʿĀdil Shāh - Bijāpur ruler".
  9. "Evolve Back".
  10. Buchanan, Brenda J. (2016), Gunpowder, Explosives and the State: A Technological History, Taylor & Francis, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-351-93190-8, இணையக் கணினி நூலக மைய எண் 965718764, There is also a strong likelihood of the adoption of European matchlocks in the Vijayanagara Empire at around the same time [1517], through contact with the Portuguese.
  11. (Eaton 2013, ப. 289): "All of this suggests that by 1520 cannon were being used in the field—extensively by Bijapur, at best minimally by Vijayanagara—but with only limited effect."
  12. (Roy 2014, ப. 68): "Though Bijapur had superior firepower, Vijayanagara emerged victorious."
  13. Murthy, H. V. Sreenivasa; Ramakrishnan, R. (1977), A History of Karnataka, from the Earliest Times to the Present Day, S. Chand, p. 189, The city of Raichur surrendered and Krishnadevaraya made triumphal entry into it.
  14. Eaton 2013, ப. 292.
  15. Vijayanagara, Progress of Research, Directorate of Archaeology & Museums, 1996, p. 200
  16. Sandhu, Gurcharn Singh (2003). Military History of Medieval India. Vision Books. p. 342.
  17. Sewell, Robert; Nunes, Fernão; Paes, Domingos (2000), A Forgotten Empire (Vijayanagar): A Contribution to the History of India, Asian Educational Services, pp. 157–, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0125-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராய்ச்சூர்_போர்&oldid=3692129" இலிருந்து மீள்விக்கப்பட்டது