ராஜ் நிவாஸ் புதுச்சேரி
ராஜ் நிவாஸ் அல்லது ஆளுநர் மாளிகை புதுச்சேரி என்பது புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் தலைநகரமான புதுச்சேரியில் அமைந்துள்ளது. புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் அதிகாரப்பூரவ அரசாங்க வசிப்பிடம் ஆகும். முற்காலத்தில் பிரெஞ்சு இந்தியா அரசாங்கத்தின் ஆளுநர்களின் அரசாங்க வசிப்பிடமாக இவ்விடம் இருந்துள்ளது. பிரெஞ்சு மற்றும் இந்தியா கட்டிட கலை இங்கு காணலாம்.[1][2][3]
பொதுமக்கள் பார்வைக்கு திறக்கும் நேரம் மற்றும் பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகள்
[தொகு]01 மே 2017 முதல் பொதுமக்கள் திங்கள் முதல் சனி வரை தினமும்.முன்பதிவு செய்தவர்கள் சோதனைக்கு பிறகு ஆளுநர் மளிகை காண அனுமதிக்க படுகின்றனர் இணைய முன்பதிவுக்கு ஆளுநர் மளிகை இணையதளத்தின் தனியாக ஒரு பக்கம் அமைக்க பட்டுள்ளது.
- வெளிநாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்கள் தங்கள் நாட்டு அரசால் வழங்கப்பட்ட மெய்யான பாஸ்போர்ட் கொண்டுவருவது கட்டாயம்.
- அணைத்து பார்வையாளர்களும் தங்கள் உருவம் பதித்த மெய்யான அடையாள அட்டை வைத்திருப்பத்து கட்டாயம்.
- கைப்பை, கைபேசி, உணவுப்பொருட்கள் கொண்டுசெல்ல தடை உள்ளது.
ராஜ் நிவாஸ் இனையதளம்
[தொகு]புதுச்சேரி ஒன்றிய பிரதேச மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கும் தங்கள் குறைகளை எடுத்துரைக்கவும் மக்கள் அரசாங்கத்தை அணுக ஒரு இணைப்புப்பாலமாக இணையதளம் அமைக்கப்பட்டது. இவ்விணையத்தளத்தில் முன்னாள் ஆளுநர்கள், ஆளுநருமாளிகை தொடர்புகொள்ள தேவையான தபால் முகவரி, மின்னஞ்சல், வாட்சப் செயலி என் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 13 ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு ஆளுநர் முனைவர் கிரண் பேடி அவர்களால் இணையத்தளம் தொடங்கப்பட்டது.
வெளிஇனைப்புகள்
[தொகு]- http://indiatoday.intoday.in/story/bedi-launches-official-raj-nivas-website/1/928488.html
- https://rajnivas.py.gov.in
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bureau, The Hindu (2024-08-07). "Kailashnathan sworn-in as Lt. Governor of Puducherry" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/puducherry/kailashnathan-sworn-in-as-lt-governor-of-puducherry/article68495970.ece.
- ↑ Pg.67, India: The Elephant's Blessing, Aline Dobbie
- ↑ Encyclopedia of Interior Design, Joanna Banham