உள்ளடக்கத்துக்குச் செல்

ரமேஷ் பைஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரமேஷ் பைஸ்
மகாராட்டிரா ஆளுநர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 ஆகத்து 1947 (1947-08-02) (அகவை 77)
ராய்ப்பூர், சத்தீசுகர்
துணைவர்ரமாபாய் பைஸ்
பிள்ளைகள்1 மகன் மற்றும் 2 மகள்கள்
வாழிடம்மும்பை

ரமேஷ் பைஸ்  (2 ஆகஸ்ட் 1947 பிறந்தது) இவா் இந்தியாவின் 16-வது லோக் சபா , இந்தியா. இவா் சத்தீஸ்கர் மாநிலத்தின்   ராய்ப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தோ்ந்தெடுக்கப்பட்டாா்.  இவா் பாரதிய ஜனதா கட்சியை  (பாஜக) சாா்ந்தவா்.

ஆளுநராக

[தொகு]

இவர் சூலை 2019 முதல் சூலை 2021 வரை திரிபுரா ஆளுநராகவும், பின்னர் 14 சூலை 2021 முதல் 17 பிப்ரவரி 2023 வரை ஜார்கண்ட் ஆளுநராக பணியாற்றியவர். பிறகு 18 பிப்ரவரி 2023 அன்று மகாராட்டிரா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.[1]

வாழ்க்கை

[தொகு]

1978 ஆம் ஆண்டு ராய்பூர் மாநகராட்சி கழகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 முதல் 1984 வரை இவர் மத்தியப் பிரதேச  சட்டசபை உறுப்பினராக இருந்தாா்.9 வது மக்களவை உறுப்பினராக மீண்டும்  1989 இல் மத்தியப் பிரதேசம் மாநிலத்திலுள்ள  ராய்பூர் தாெகுதியிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவா் 11, 12, 13, 14,15 மற்றும் 16-வது மக்களவை தோ்தலில்களில் மீண்டும் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இந்திய அரசில் மத்திய அமைச்சராக இருந்துள்ளாா்.

இருந்த நிலைகள் 

[தொகு]
  • மாா்ச் 1998 - அக். 1999 மத்திய அமைச்சர், எஃகு மற்றும் தாதுக்கள்
  • அக்ட் 1999 - செப். 2000 மத்திய அமைச்சர், ரசாயனம் மற்றும் உரங்கள்
  • செப். 2000 - ஜனவரி. 2003 மத்திய அமைச்சர், தகவல் மற்றும் ஒலிபரப்பு
  • ஜனவரி. 2003 - ஜனவரி. 2004 யூனியன் அமைச்சர் (தனிப் பொறுப்பு), சுரங்கத்துறை 
  • ஜனவரி. 2004 - மே 2004 யூனியன் அமைச்சர் (தனிப் பொறுப்பு) சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு
  • சூலை,2019 – சூலை, 2021 - திரிபுரா ஆளுநர்[2]
  • 14 சூலை 2021 - 17 பிப்ரவரி 2023 வரை - ஜார்கண்ட் ஆளுநர்
  • 18 பிப்ரவரி 2023 முதல் - மகாராட்டிரா ஆளுநர்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமேஷ்_பைஸ்&oldid=3661424" இலிருந்து மீள்விக்கப்பட்டது