யோன் உவெசுலி
அருட்திரு யோன் உவெசுலி | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சியார்ச் ரொம்னியின் ஓவியம் (1789) | |||||||||||
பிறப்பு | 28 சூன் [யூ.நா. 17 சூன்] 1703 எப்வர்த், லிங்கன்சயர், இங்கிலாந்து | ||||||||||
இறப்பு | 2 மார்ச்சு 1791 இலண்டன், இங்கிலாந்து | (அகவை 87)||||||||||
தேசியம் | ஆங்கிலேயர் | ||||||||||
படித்த கல்வி நிறுவனங்கள் | கிறிசுட் சர்ச் ஆக்சுபோர்டு, லிங்கன் கல்லூரி, ஆக்சுபோர்டு | ||||||||||
பணி | மதகுரு இறையியலாளர் நூலாசிரியர் | ||||||||||
பெற்றோர் | சாமுவேல் உவெசுலி, சுசான்னா உவெசுலி | ||||||||||
வாழ்க்கைத் துணை | மேரி வாசெயில் (தி. 1751; முறிவு 1758) | ||||||||||
சமயம் | கிறித்தவம் (ஆங்கிலிக்கம் / மெதடிசம்) | ||||||||||
கோவில் | இங்கிலாந்து திருச்சபை | ||||||||||
திருநிலைப்படுத்தியது | 1725 | ||||||||||
பணிகள் | மெதடிச மாநாட்டின் தலைவர் | ||||||||||
| |||||||||||
கையொப்பம் |
யோன் உவெசுலி (John Wesley[1] 28 சூன் [யூ.நா. 17 சூன்] 1703 – 2 மார்ச் 1791) என்பவர் ஆங்கிலேய மதகுருவும், இறையியலாளரும், நற்செய்தியாளரும் ஆவார். இவர் இங்கிலாந்து திருச்சபைக்குள் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மெதடிச இயக்கத்தின் தலைவராக இருந்தவர். இவர் நிறுவிய சபைகள் இன்றுவரை தொடரும் சுதந்திர மெதடிச இயக்கத்தின் மேலாதிக்க வடிவமாக மாறியது.
ஆக்சுபோர்டு, கிறித்தவப் பள்ளியில் கல்வி கற்ற உவெசுலி, 1726 இல் ஆக்சுபோர்டு லிங்கன் கல்லூரியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கிலிக்க மதகுருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆக்சுபோர்டில், இவர் "தூய மன்றம்" என்ற அமைப்புக்குத் தலைமை தாங்கினார். இது படிப்பின் நோக்கத்திற்காகவும் பக்தியுள்ள கிறித்தவ வாழ்க்கையைத் தொடரவும் உருவாக்கப்பட்ட ஒரு சமூகமாகும்; பின்னர் இவர் இலண்டனுக்குத் திரும்பி மொராவிய கிறித்தவர்கள் தலைமையிலான ஒரு சமூகத்தில் சேர்ந்தார். 1738 மே 24 இல், இவர் தனது "இதயம் விசித்திரமாக வெப்பமடைந்ததை" உணர்ந்தபோது, அவரது நற்செய்தி சார்ந்த மதமாற்றம் என்று அழைக்கப்படுவதை அனுபவித்தார். இதன் பின்னர் அவர் மொராவியர்களை விட்டு வெளியேறி தனது சொந்த ஊழியத்தைத் தொடங்கினார்.
உவெசுலியின் ஊழியத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய படி, வெளியூர் பயணம் செய்து பிரசங்கிப்பது ஆகும். உவைட்ஃபீல்டின் கால்வினிசத்திற்கு மாறாக, இவர் ஆர்மீனியக் கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டார். பெரிய பிரித்தானியா, அயர்லாந்து முழுவதும் பயணம் செய்து, தீவிரமான, தனிப்பட்ட பொறுப்புணர்ச்சி, சீடர்த்துவம், மத போதனைகளை வளர்க்கும் சிறிய கிறித்தவ சமூகங்களை உருவாக்கி ஒழுங்கமைக்க உதவினார். இந்தக் குழுக்களைக் கவனித்துக்கொள்வதற்காக அவர் ஆண், பெண் இரு பாலாரையும் கொண்ட திருநிலைப்படுத்தப்படாத குழுக்களை நியமித்தார். உவெசுலியின் வழிகாட்டுதலின் கீழ், அடிமைத்தனத்தை ஒழித்தல், சிறைச் சீர்திருத்தம் உட்பட அன்றைய பல சமூகப் பிரச்சினைகளில் மெதடித்துகள் தலைவர்களாக ஆனார்கள்.
உவெசுலி கிறித்துவத் துல்லியத்திற்காகவும், கால்வினிசத்திற்கு எதிராக, குறிப்பாக, கால்வினிசத்தின் முன்னறிவிப்புக் கோட்பாட்டிற்கு எதிராகவும் வாதிட்டார். உவெசுலியின் போதனைகள், உவெசுலிய இறையியல் என்று அழைக்கப்படுகின்றன.
உவெசுலி தனது வாழ்நாள் முழுவதும், இங்கிலாந்து திருச்சபைக்குள்லேயே இருந்து வந்தார். மெதடிச இயக்கம் இங்கிலாந்து திருச்சபையின் பாரம்பரியத்திற்குள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.[2] அவருடைய ஆரம்பகால ஊழிய ஆண்டுகளில், உவெசுலி பல திருச்சபைத் தேவாலயங்களில் பிரசங்கம் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டார், பல மெதடிசவாதிகள் துன்புறுத்தப்பட்டனர்; ஆனாலும், பின்னர் அவர் பரவலாக மதிக்கப்பட்டு, அவரது வாழ்வின் முடிவில், "இங்கிலாந்தில் மிகவும் விரும்பப்படும் மனிதர்" என்று அறியப்பட்டார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wells 2008, Wesley. The founder of Methodism was actually /ˈwɛsli/, though often pronounced as /ˈwɛzli/
- ↑ Thorsen 2005, ப. 97.
- ↑ Kiefer 2019.
உசாத்துணைகள்
[தொகு]- Wells, J. C. (2008). Longman Pronunciation Dictionary (3rd ed.). Harlow, UK: Pearson.
- Thorsen, Don (2005). The Wesleyan Quadrilateral: Scripture, Tradition, Reason, & Experience as a Model of Evangelical Theology. Lexington, Ky: Emeth Press.
- Kiefer, James (2019). "John & Charles Wesley: Renewers of the Church (3 March 1791)". The Lectionary. பார்க்கப்பட்ட நாள் 9 December 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Wesley Center Online". Wesley Center for Applied Theology. Northwest Nazarene University. Archived from the original on 11 January 2008. பார்க்கப்பட்ட நாள் 23 November 2009.
- John Wesley at the Eighteenth-Century Poetry Archive (ECPA)
- குட்டன்பேர்க் திட்டத்தில் John Wesley இன் படைப்புகள்
- ஆக்கங்கள் யோன் உவெசுலி இணைய ஆவணகத்தில்
- Works by யோன் உவெசுலி at LibriVox (public domain audiobooks)
- Selected text from the Journal of John Wesley on A Vision of Britain through Time, with links to the places named.
- John Wesley papers, 1735–1791 at Pitts Theology Library, Candler School of Theology
- John Wesley historical marker in Savannah, Georgia
- A Man Named Wesley Passed This Way historical marker at St. Simons Island, Georgia
- Reverends John & Charles Wesley historical marker
- The World Is My Parish historical marker