உள்ளடக்கத்துக்குச் செல்

யோகான் எலர்ட் போடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகான் எலர்ட் போடே
Johann Elert Bode
பிறப்பு(1747-01-19)19 சனவரி 1747
ஆம்பர்கு, புனித உரோமைப் பேரரசு
இறப்பு23 நவம்பர் 1826(1826-11-23) (அகவை 79)
பெர்லின், பிராண்டன்பர்கு மாகாணம், புருசிய இராச்சியம்
தேசியம்செருமனியர்
துறைவானியல்
ஆய்வு நெறியாளர்யோகான் கியார் பூசுச்சு
முனைவர் பட்ட 
மாணவர்கள்
யீகான் பாஃப்
அறியப்படுவதுதித்தியூசு-போடே விதி

யோகான் எலர்ட் போடே (Johann Elert Bode, இடாய்ச்சு: [ˈboːdə]; 19 சனவரி 1747 – 23 நவம்பர் 1826) ஒரு செருமானிய வானியலாளர் ஆவார். இவர் தித்தியசு- போடே விதியை மீள்வடிவமைத்து பரவலாக்கியவர் ஆவார். போடே யுரேனசின் வட்டணையை அறுதியிட்டு அதற்குப் பெயரும் இட்டார்.

வாழ்வும் பணியும்

[தொகு]

போடே அம்பர்கில் பிறந்தார். இவர் இளமையில் கண் நோய் தாக்கவே, தன் வலது கண்ணை இழந்தார்; தொடர்ந்து கண்சிக்கல்கள் இவரை வாழ்நாள் முழுதும் வாட்டின.[1]

இளமையில் இவரது கணித்த் திறமை இவரை யோகான் பூசுச்சுக்கு அறிமுகப்படுத்தி, போடே அவரது நூலகத்தைப் பயன்படுத்த உதவியது.

இவர் 1766 ஆகத்து 5 இல் நிகழ்ந்த சூரிய ஓளிமறைப்பைப் பற்றி இவர் எழுதிய குறுங்கட்டுரையின் வெளியீட்டோடு இவரது பணி தொடங்கியது. அடுத்து இவரது வானியல் குறித்த எளிய நூலாகிய Anleitung zur Kenntniss des gestirnten Himmels (1768, 10th ed. 1844) வெளியிடப்படவே,, அதுகண்ட வெற்றியால் இவரை யோகான் ஈன்றிச் இலாம்பர்ட் பெர்லினுக்கு அழைக்க வைத்தது[2]அப்போது இவருக்கு மேம்பட்ட திட்ட்த்தினால் கணிக்கும் களப்பணி இலாம்பர்ட்டால் தரப்பட்டது. அங்கு இவர் 1774 இல் பெயர்பெற்ற Astronomisches Jahrbuch எனும் இதழின் 51 தொகுதிகளை ஆண்டுக்கு ஒன்றாகத் தொகுத்து வெளியிட்டார்.[3]

இவர் 1786 இல் பெர்லின் வான்கானகத்தின் இயக்குநரானார். இப்பணியில் இருந்து இவர் 1825 இல் ஓய்வு பெற்றார்.[3]

இவர் 1801 இல் யுரானொகிராபியா விண்மீன் அட்டவணையை வெளியிட்டார். இது விண்மீன்களின் இருப்புகளையும் பிற வான்பொருட்களையும் அறிவியல் துல்லியத்துடன் காட்டும் வான்கோள அட்டவணையாகவும் உடுக்கண குழுக்களின் உருவங்களை வரைந்த கலைப்படைப்பு விளக்கமாகவும் விளங்கியது. யுரானொகிராபியா என்பது விண்மீன் குழுக்களைக் கலை உருவகமாக காட்டும் அக்கால உச்சநிலை வெளியீடாகும். பிந்தைய அட்டவணைகள் மிக எளிய சில உருவங்களையே விரிவாகக் காட்டின. பிறகு இவை விண்மீன் அட்டவணைகளில் வெளியிடப்படவில்லை.

போடே பயில்நிலை வானியலாளருக்காக, மற்றொரு சிறிய விண்மீன்களின் அட்டவணையையும் (Vorstellung der Gestirne) வெளியிட்டார். இவர் போடே பால்வெளி(M81)யையும் கண்டுபிடித்துள்ளார. வால்வெள்ளி போடே(C/1779 A1) இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது; இதன் வட்டணையை எரிக் பிராசுப்பெரின் கணக்கிட்டார். கார்ல் இரெய்ன்முத் 1923, ஆகத்து, 6 இல் ஐடெல்பர்கு வான்காணகத்தில் கண்டுபிடித்த சிறுகோள் 998 போடியா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. சிறுகோள்கள் பெண்மையதாக கருதப்படுவதால் போடியா என இவர் பெயர் மருவியுள்ளது.

யோகான்னசு தானியேல் தித்தியசு 1766 இல் கண்டறிந்த கோள்களுக்கான தொலைவு சார்ந்த விதியொன்று இவரது பெயரோடு தொடர்பு படுத்தப்படுகிறது. இவர் தனது நூலான Anleitung zur Kenntniss des gestirnten Himmels என்பதில் ஓரிடத்தில் இவ்விதியை அடிக்குறிப்பாகப் பயன்படுத்தியுள்ளார். இந்த விதி அலுவல்நிலையில் தித்தியசு-போடே விதி எனக் குறிப்பிடப்பட்டாலும் வழக்கில் பொதுவாக போடே விதியென்றே அழைக்கப்படுகிறது. இந்த விதி சுரியனில் இருந்து கோள்கள் அமையும் தொலைவுகளை ஒரு வாய்பாடால் குறிப்பிட முயல்கிறது. என்றாலும், பின்னர் பெர்லினில் கண்டுபிடித்த நெப்டியூன் கோளுக்கு இது பொருந்தவில்லை. ஆனால், இந்த விதிப்படியான தொலைவில் தான் யுரேனசு கோள் தேடிக் கண்டறியப்பட்டது.செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் இவ்விதிப்படி ஒரு கோள் அமைதல் வேண்டும்; எனவே, போடே இக்கோளைக் கண்டுபிடிக்க, "விண்வெளிக் காவலர்" எனும் குழுவை அமைத்தார். இக்குழு தன் வேலையைத் தொடங்கும் முன்பே, கியூசெப்பே பியாசி போடே விதி முன்கணித்த இருப்பில் பலெர்மோ வான்காணகத்தில் 1801 இல் சீரிசு எனும் குறுங்கோள் ஒன்றைக் கண்டுபிடித்ததால், இத்தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

சீரிசு குறுங்கோள் சில சிறுகோள்களில் ஒன்றென உணர்ந்ததும் மேலும் நெப்டியூனும் இவ்விதிப்படி அமையாததாலும், பின்னர் இவ்விதி நடைமுறைப் பயன்பாட்டில் இருந்து அருகியது. பிற விண்மீன்களின் கோள் கண்டுபிடிப்புக்குப் பிறகு இவ்விதி மீள விவாததத்துக்கு வந்தது.

போடே 1781 இல் உரேனசு கண்டுபிடிப்பு ஆராய்ச்சியை தானும் முன்னின்று நடத்தினார். முதலில் தொலைநோக்கிவழி கண்டறிந்த கோளாக யுரேனசு இருந்தாலும், இது கண்ணாலெயே காணக்கூடியதாகவே விளங்கியது. போடே பழைய விண்மீன் அட்டவணைகளை மீள்பார்வையிட்டார். பல முந்தைய அட்டவணைகளில் இதன் இருப்பு விண்மீனாகக் குறிப்பிடப்பட்டதைக் கண்டார்; எடுத்துகாட்டாக, பிரித்தானிய அரசு வானியலாளரான ஜான் பிளேம்சுட்டீடின் விண்மீன் அட்டவணையில் இது 1690 எனும் எண்ணிட்ப்பட்டு, 34 தவுரி எனும் பெயரில் விண்மீனாகக் கட்டப்பட்டிருந்தது. மிக முந்தைய நோக்கீடுகள் இப்புதிய கோளின் வட்டணைக் கணக்கீட்டைச் சரியானபடிக் கணக்கிட உதவின.

இந்தப் புதிய கோளுக்கான பெயரை இடுவதில் போடேவும் பொறுப்பேற்றார். இக்கோளின் கண்டுபிடிப்பாளர் இக்கோளிற்கு மூன்றாம் ஜார்ஜின் பெயரை இட முன்மொழிந்தார். இதை மற்ற நாட்டு அறிஞர்கள் ஏற்க மறுத்தனர். சாட்டர்னுக்கு(காரிக்கோளுக்கு) ஜூபிட்டரின்(வியாழனின்) தந்தையின் பெயரை வைத்தது போல, போடே சாட்டர்னின் தந்தையின் பெயரான யுரேனசு எனும் பெயரைப் புதிய கோளுக்கு வைக்கலாம் எனும் விருப்பத்தை அறிவித்தார்.[4][5] இதற்கு மாற்று முன்மொழிவுகளும் வந்தன. என்றாலும், போடேவின் பரிந்துரையே பரவலாக இறுதியான பயன்பாட்டில் ஏற்கப்பட்டது. என்றாலும், பிரித்தானிய நாவாய் வழிகாட்டி அலுவலகம் மிகவும் புகழ்பெற்று 1850 இல் ஜார்ஜியம் சைடசு எனும் பெயரை யுரேனசு என மாற்றும் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று.

போடேவின் சமகால அரசு கல்விக்கழகப் பணியாளரான மார்ட்டிக் கிளாப்பிரோத்து 1789 இல், போடே பெயரை, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோளுக்கும்(யுரேனசுக்கும்) தன் கண்டுபிடிப்பான தனிமத்துக்கும் (யுரேனியத்துக்கும்), போடேவின் மீதுள்ள ஆர்வ மேலீட்டால், வைக்க விரும்பியுள்ளார்.[6][37]

இவர் 1787 முதல் 1825 வரை Astronomisches Rechen-Institut எனும் நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். இவர் 1794 இல்சுவீடன் அரசு வானியல் கழகத்தின் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வானார். இவர் 1789 ஏப்பிரலில் அரசு கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]

போடே தன் 79 ஆம் அகவையில் 1826 நவம்பர் 23 இல் இறந்தார்.

தேர்ந்தெடுத்த எழுத்துகள்

[தொகு]
ஓரியன் விண்மீன்குழுவைக் காட்டும் யுரோனோகிராபியா ஒளித்தட்டின் பகுதி
  • 1768 (10th ed. 1844) Anleitung zur Kentniss des Gestirnten Himmels ( புகழ்பெற்ற போடே எழுத்துகள். இதில் இவர் போடே விதியைக் குறிப்பிடுகிறார்.)
  • 1774-1957 Berliner Astronomisches Jahrbuch für 1776-1959 ( வானியல் ஆண்டுக் கையேடு, பெர்லின் பல்கலைக்கழகம்.)
  • 1776 Sammlung astronomischer Tafeln (3 vols.)
  • 1776 (3rd ed. 1808) Erläuterung der Sternkunde, இது விண்மீன்குழுக்களுக்கும் அவற்றின் கதைகளுக்குமான அறிமுக நூல்; இது பத்துமுறைக்கும் மேல் அச்சிடப்பட்டது
  • 1782 Vorstellung der Gestirne ... des Flamsteadschen Himmelsatlas ( ழீன் போர்ட்டின் வெளியிட்ட ஜான் பிளேம்சுட்டீடின் சிறுவிண்மீன்களின் அட்டவணையை போடே திருத்தி, விரிவாக்கிய பதிப்பு.)
Verzeichniss ( மேற்கூறிய விண்மீன்களுடன், இது பிளேம்சுட்டீடு, யோகான்னெசு எவலியசு, தோபியாசு மேயர், தெ லா கைலி, சார்லசு மெசியர், இலெ மோன்னியர், தார்க்குவேர், போடே ஆகியோர் நோக்கீடுகள் செய்த 5,058 விண்மீன்களை உள்ளடக்கிய அட்டவனையாகும்.)
  • 1801 Uranographia sive Astrorum Descriptio ( இருபது செம்புத்தட்டுகளால் விளக்கப்பட்ட பெரிய விண்மீன்களின் அட்டவணை.)
Allgemeine Beschreibung und Nachweisung der Gestirne ( இது 17,240 விண்மீன்களின் பட்டியல் உள்ள விண்மீன் அட்டவணை.)

இவரது நூல்கள் செருமனியில் வானியல் சுவையைப் பரப்பின.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Johann Elert Bode (19 January 1747 - 23 November 1826)". பார்க்கப்பட்ட நாள் 2008-05-20.
  2. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  3. 3.0 3.1 3.2   "Bode, Johann Elert". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  4. Littmann, Mark (2004). Planets Beyond: Discovering the Outer Solar System. Courier Dover Publications. pp. 10–11. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-486-43602-0.
  5. Daugherty, Brian. "Astronomy in Berlin". Brian Daugherty. Archived from the original on ஜனவரி 12, 2019. பார்க்கப்பட்ட நாள் May 24, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. James Finch (2006). "The Straight Scoop on Uranium". allchemicals.info: The online chemical resource. பார்க்கப்பட்ட நாள் March 30, 2009.
  7. "Library and Archive Catalogue". Royal Society. பார்க்கப்பட்ட நாள் 17 December 2010.

மேலும் படிக்க

[தொகு]
  • Schwemin, Friedhelm (2006). Der Berliner Astronom. Leben und Werk von Johann Elert Bode (1747–1826). Frankfurt am Main: Verlag Harri Deutsch.- Acta Historica Astronomiae, Vol. 30 - A new, comprehensive biography and the source for some of the material on this page.
  • Sticker, Berhard (1970). "Bode, Johann Elert". In Gillispie, Charles Coulston (ed.). Dictionary of Scientific Biography. Vol. II. New York: Scribner. pp. 220–221.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
யோகான் போடே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்_எலர்ட்_போடே&oldid=3618506" இலிருந்து மீள்விக்கப்பட்டது