உள்ளடக்கத்துக்குச் செல்

யோகான்னசு மபுசெலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகான்னசு மபுசெலா Johannes Mabusela
முழுப் பெயர்யோகான்னசு மன்யெடி மபுசெலா
நாடுதென்னாப்பிரிக்கா
பிறப்பு4 சூன் 1984 (1984-06-04) (அகவை 40)
பட்டம்அனைத்துலக மாசுட்டர்
உச்சத் தரவுகோள்2320 (அக்டோபர் 2012)

யோகான்னசு மன்யெடி மபுசெலா (Johannes Manyedi Mabusela) சூன் 4 1984 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதி பிறந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீர்ர் ஆவார். தென்னாப்பிரிக்க நாட்டு சதுரங்க வீர்ரான இவருக்கு பன்னாட்டு சதுரங்க கூட்டமைப்பு அனைத்துலக சதுரங்க மாசுட்டர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. 2002 இல் நடைபெற்ற இளையோருக்கான ஆப்பிரிக்க சதுரங்க போட்டியில் வென்றார்[1][2].

2012 ஆம் ஆண்டுக்கான தெற்கு ஆப்பிரிக்க அனைவருக்குமான சதுரங்கப் போட்டியில் ரோட்வெல் மாகோடோ, அகமது அத்லி மற்றும் டேனியல் காவ்டெரி ஆகியோருடன் இணைந்து மாபுசெலா முதலாவது இடத்திற்கான போட்டியில் சமநிலையைப் பிடித்தார், சமன்முறி ஆட்டத்தில் மூலம் இப்போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, சதுரங்க போட்டிகளில் தென்னாப்பிரிக்காவின் முதலாவது மிக உயர்ந்த இடத்தைப் பிடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார்[3][4].

2008, 2010, 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளில் தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய அணிக்காக விளையாடினார். 2003 , 2011 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து ஆப்பிரிக்க விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று விளையாடினார். 2011ஆம் ஆண்டு போட்டி நிகழ்வில், அணி மற்றும் 4 வது சதுரங்கப் பலகையின் தனிநபர் என்ற பிரிவுகளில் இவர் . இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்[5].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Africa Junior Championship 2002 Boys. FIDE.
  2. "Grintek boosts African chess champions` game". ITWeb. 2003-06-19. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  3. "Results after round 11". South African Open 2012. Archived from the original on 2012-08-17. பார்க்கப்பட்ட நாள் 2016-04-21.
  4. "SA Chess Open: Zimbabwe's Rodwell Makoto Wins on Tiebreak". chessblog.com. Alexandra Kosteniuk. 2012-07-11. பார்க்கப்பட்ட நாள் 20 April 2016.
  5. Johannes Mabusela பரணிடப்பட்டது 2018-09-27 at the வந்தவழி இயந்திரம் team chess record at Olimpbase.org

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகான்னசு_மபுசெலா&oldid=3643700" இலிருந்து மீள்விக்கப்பட்டது