உள்ளடக்கத்துக்குச் செல்

யூசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞர் யூ சி (ஆங்கில மொழி: Yu Hsi) தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர். இவர் திருக்குறள், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். உலகப்புகழ் பெற்ற தங்க இசை விருதை மூன்று முறைப் பெற்றுள்ளார்.

தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருதைப் பெற்ற முதல் அயல்நாட்டுக் கவிஞர் இவர்.[1][2][3] இந்த விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்தில் ஜனவரி 15, 2014 ஆம் தேதி நடைபெற்றது.[4]

திருக்குறள் மொழிபெயர்ப்பிற்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இவருக்கு 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்கியது. அத்தொகையை திருக்குறளும் உலக அமைதியும் என்ற தலைப்பில் ஆய்விருக்கை அமைக்க வேண்டி பல்கலைக்கழகத்திற்கே திரும்ப வழங்கினார்.[2][5][6]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூசி&oldid=3877258" இலிருந்து மீள்விக்கப்பட்டது