யார் பையன்
Appearance
யார் பையன் | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ரகுநாத் |
தயாரிப்பு | என். எஸ். திரவியம் விஜயா பிலிம்ஸ் டி. ஏ. துரைராஜன் |
கதை | ஸ்ரீ்தர் |
இசை | எஸ். தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் என். எஸ். கிருஷ்ணன் டி. ஆர். ராமச்சந்திரன் சாரங்கபாணி வி. கே. ராமசாமி சாவித்திரி சுரபி பாலசரஸ்வதி வித்யாவதி பி. எஸ். ஞானம் குசலகுமாரி அம்பிகா டி. ஏ. மதுரம் |
வெளியீடு | சூலை 26, 1957 |
நீளம் | 15600 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
யார் பையன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
நடிகர்களும் கதை மாந்தரும்
[தொகு]- ஜெமினி கணேசன் - மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சுந்தரராஜன்
- கே. சாவித்திரி - லதா
- டெய்சி இராணி - பூரி
- என். எஸ். கிருஷ்ணன் - கரார் கந்தசாமி முதலியார்
- டி. ஏ. மதுரம் - தெய்வானை
- டி. ஆர். இராமச்சந்திரன் - ரமேஷ்
- சுரபி பாலசரஸ்வதி -மங்கம்மா
- கே. சாரங்கபாணி
- எம். கே. முஸ்தாபா
- சி. எஸ். பாண்டியன்
- பி. எஸ். ஞானம்
- வித்யாவதி
- சித்தூர் வி. நாகையா - பூரியின் தாத்தா
- வி. கே. ராமசாமி - கோபால்
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி ஆவார். தந்தை யாரோ தாயும் யாரோ என்ற ஒரு பாடலுக்கு மட்டும், ஸ்ரீ்தரின் அழைப்பின் பேரில், டி. சலபதிராவ் இசையமைத்தார். பாடல்களை மருதகாசி எழுதிய. ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி, பி. சுசீலா, ஆர். பாலசரஸ்வதி தேவி, டி. வி. ரத்தினம், ஜி. கஸ்தூரி, சி. கோமதி, தங்கப்பன், பொன்னம்மாள் ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல்கள் | நீளம் (நி:வி) |
1 | வாசமிகும் மலர் சோலையிலே | ஏ. எம். ராஜா & ஜிக்கி | ||
2 | தந்தை யாரோ தாயும் யாரோ | பி. சுசீலா | ||
3 | பளப்பளப்பள ஜிலுஜிலுஜிலு | எஸ். சி. கிருஷ்ணன், சி. கோமதி, தங்கப்பன் மற்றும் பொன்னம்மாள் | ||
4 | கண்ணாமூச்சி ஆட்டம் | ஆர். பாலசரஸ்வதி தேவி | ||
5 | கனிரசமே என் கனிரசமே அதிரசமே | சீர்காழி கோவிந்தராஜன் & ஜிக்கி | ||
6 | அம்மா பொண்ணே ராமக்கா, உன் அத்தான் வரான் பாத்துக்கோ | பேபி கஸ்தூரி | ||
7 | சுயநலம் பெரிதா பொதுநலம் பெரிதா | கண்டசாலா | ||
8 | எத்தனையோ இருக்குது இங்கே | டி. வி. ரத்தினம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ராண்டார் கை (24 நவம்பர் 2012). "Yaar Paiyyan 1955". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/yaar-paiyyan-1955/article4130095.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.